இன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்..! நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..?

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 164 புள்ளிகள் அதிகரித்து வர்த்தக நேர முடிவில் 38,837 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 38,672 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 38,858 -க்கு கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

இந்த 186 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பனானது கூட சென்செக்ஸின் ஏற்றத்தையும் இந்திய சந்தைகளின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகவே பார்க்கிறார்கள் வர்த்தகர்கள்.

புதிய உச்சம்

புதிய உச்சம்

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேரத்திலேயே இண்ட்ரா டேவில் தன் வாழ்நாள் உச்சமான 39,115 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் தன் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை. கடந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று சென்செக்ஸ் 38,896 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது தான் சென்செக்ஸின் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளி.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி காலை 11,665 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,669 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,623 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 11,665 புள்ளிகளில் 42 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நிஃப்டியில் அத்தனை பெரிய உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் பொதுவாக மார்க்கெட் செண்டிமெண்டி பாசிட்டிவ்வாக இருந்தது.

நிஃப்டி உச்சம்

நிஃப்டி உச்சம்

நிஃப்டி 50 இண்டெக்ஸின் உச்சப் புள்ளி என்றால் அது 11,760 புள்ளிகள் தான். ஆகஸ்ட் 28, 2018 அன்று இந்த உச்சப் புள்ளியை இண்ட்ராடேவில் தொட்டது. அதே நாளில் நிஃப்டி 50 11,738 புள்ளிகளில் குளோஸ் ஆனது தான் நிஃப்டியின் வாழ்நாள் உச்ச குளோசிங். இதுவரை அந்த புள்ளிகளைத் தாண்டவில்லை நிஃப்டி. ஆனால் இன்று வர்த்தக நேரத்தில் இண்ட்ராடேவில் நிஃப்டி இந்த 11738 என்கிற உச்சபட்ச குளோசிங் புள்ளியைத் தொட்டது நிஃப்டி.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 14 பங்குகள் இறக்கத்திலும், 16 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,775 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,697 பங்குகள் ஏற்றத்திலும், 906 பங்குகள் இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,775 பங்குகளில் 84 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 95 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 22 பங்குகள் இறக்கத்திலும், 28 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

வங்கி, எஃப்.எம்.சி.ஜி, மீடியா, பொதுத் துறை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்த பங்குகள் கொஞ்சம் விலை குறைந்தே வர்த்தகமாயின. மீதமுள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகள் ஓரளவுக்கு ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸிகி, யெஸ் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், விப்ரோ, மாருதி சுசிகி போன்ற பங்குகள் சராசரியாக நான்கு சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்

இறக்கப் பங்குகள்

ஜி எண்டர்டெயின்மெண்ட், யூபிஎல், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், ஐஷர் மோட்டார்ஸ், இண்டஸ் இந்த் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

மார்ச் 29, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.78% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அனைத்து ஐரோப்பிய சந்தைகளும் சுமார் 0.58 - 1.07% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போஸைட் தவிர மற்ற அனைத்து ஆசிய நாட்டு சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.58% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

பச்சைக் கொடி

பச்சைக் கொடி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.16 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக உலக சந்தைகள் தொடங்கி அந்நிய செலாவணி வரை பலதும் இந்திய சந்தைகளுக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. எனவே நாளை சென்செக்ஸும் சரி நிஃப்டியும் சரி புதிய உச்சங்களைத் தொடும் என்கிற பதற்றத்தோடேயே வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+