டெல்லி: 2018-19 நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2018ஆம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 15.60 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த 2018ஆம் நிதியாண்டில் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலானது ரூ.92,167 கோடியாகும். ஆனால் 2019ஆம் நிதியாண்டில் இது ரூ.1,06,577 கோடியாக அதிகரித்தது. மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய அரசின் பங்கான (CGST) ரூ.20,353 கோடியும், மாநில அரசின் (SGST) பங்கான ரூ.27,520 கோடியும், ஒருங்கிணைந்த (IGST) வரி வசூலான ரூ.50,418 கோடியும் அடங்கும்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கணக்கில் எடுத்துக்கொண்டால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டுமே 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைதுள்ளது.
கடைசி வாய்ப்பு
2018-19ஆம் நிதியாண்டின் இறுதி நாட்களான மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதி இரண்டும் விடுமுறை நாட்களாக இருப்பதால் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்படும் என்று பீதியில் மத்திய நேரடி வரிகள் ஆணையம் இவ்விரண்டு நாட்களையும் வேலை நாட்களாக இருக்கும் என்றும் வரி செலுத்துபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரி செலுத்திக் கொள்ளலாம் என்றும் CBDT அறிவித்தது.
வசூல் மந்தம்
மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்ததால் வரி செலுத்தும் அனைவரும் போட்டி போட்டு வரி செலுத்தினர். முன்னதாக கடந்த மார்ச் 27ஆம் தேதி வரையிலும் சுமார் 10.70 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. இதனால் கலக்கத்தில் இருந்த ஜிஎஸ்டி துறையினர் வசூல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
வசூலில் புதிய சாதனை
ஜிஎஸ்டி வசூலை தீவிரப்படுத்தியாதால் கடந்த மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டியது. இறுதியில் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,06,577 கோடியை எட்டி சாதனை படைத்தது. இது கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் மாத வரையிலும் வசூலான தொகையில் உச்சபட்ச வரி வசூலாகும்.
ஒருங்கிணைந்த வரி வசூல்
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய அரசின் பங்கான (CGST) ரூ.20,353 கோடியும், மாநில அரசின் (SGST) பங்கான ரூ.27,520 கோடியும், ஒருங்கிணைந்த (IGST) வரி வசூலான ரூ.50,418 கோடியும் அடங்கும். ஒருங்கிணைந்த வரி வசூலான ரூ.50,418 கோடி யில் இறக்குமதி வரியான ரூ.23,521 கோடியும், செஸ் வரியான ரூ.7,395 கோடியும், இறக்குமதிக்கான செஸ் வரியான ரூ.891 கோடியும் அடங்கும்.
ரூ.1,0,6577 கோடி வசூல்
கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.92,167 கோடி ஆகும். இதுவே 2019ஆம் ஆண்டு மார்ச் மாத வசூல் 15.6 சதவிகிதம் கூடுதலாக ரூ.1,06,577 கோடி வசூலாகி ஜிஎஸ்டி வசூலில் உச்சத்தை தொட்டது. 2018-19ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த மாதாந்திர சராசரி ரூ.98,114 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 9.2 சதவிகிதம் கூடுதலாகும்.
வருவாய் வளர்ச்சி
கடந்த பிப்ரவரி மாதத்திற்காக ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் தாக்கலைப் பொருத்தவரை மார்ச் 31ஆம் தேதி வரையிலும் 75.95 லட்சம் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் புதிய இலக்கை எட்டியது குறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் விளக்கிய போது, ஜிஎஸ்டி வரி வசூல் என்பது வருவாய் வளர்ச்சியை காட்டுகிறது என்று தெரிவித்தனர். 2018-19ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் காலாண்டை விட 14.3 சதவிகிதம் கூடுதலாக வசூலாகி சாதனை படைத்தது எனலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications