39000 புள்ளிகளில் நிறைவடைந்து புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலையிலேயே சென்செக்ஸ் கேப் அப்பில் 38,916 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்று மாலை சென்செக்ஸ் 38,871 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங்கில் இருந்து 184 புள்ளிகள் அதிகரித்து இன்று மாலை 39,056 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

நேற்று சென்செக்ஸ் 38,871 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 38,916 -க்கு கேப் அப்பில் 45 புள்ளிகள் அதிகமாகவே ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

இந்த 45 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பனான உடனேயே இன்று சென்செக்ஸ் தன் வாழ்நாள் உச்சத்தை தொட்டு விடும் என்கிற நம்பிக்கையிலேயே வர்த்தகர்களும், முதலீட்டாளர்கள் தங்கள் வியாபாரங்களைச் செய்யத் தொடங்கினார். எதிர்பார்த்த படியே இன்று சென்செக்ஸ் தன் வாழ்நாள் உச்சத்தைத் தொட்டு விட்டது.

கூகுள் இந்தியாவின் MD ராஜன் ஆனந்தன் ராஜினாமா..! கூகுள் இந்தியாவின் MD ராஜன் ஆனந்தன் ராஜினாமா..!

இண்ட்ராடே தொடவில்லை

இண்ட்ராடே தொடவில்லை

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேரத்திலேயே இண்ட்ரா டேவில் தன் வாழ்நாள் உச்சமான 39,106 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் நேற்றைய வர்த்தக நேரத்தின் இண்ட்ரா டே ஹை புள்ளிகளாக 39,115 புள்ளிகளைத் தொடவில்லை. என்றாலும் தன் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடைந்திருக்கிறது.

வாழ்நாள் உச்சம்

வாழ்நாள் உச்சம்

கடந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று சென்செக்ஸ் 38,896 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது தான் சென்செக்ஸின் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளி. இன்று தன் வாழ்நாள் உச்சப் புள்ளியை விட அதை 160 புள்ளிகள் அதிகமாக நிறைவடைந்திருக்கிறது. ஆக நாளை வர்த்தக நேர முடிவில் 39,115 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்தால் சென்செக்ஸ் இன்னும் விலை அதிகரிக்கும் என நம்பலாம் எனச் சொல்கிறார்கள் பங்குச் சந்தை அனலிஸ்டுகள்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,711 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,713 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,669 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 11,711 புள்ளிகளில் 42 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்றும் நிஃப்டி 50 42 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

இன்னும் திணறல்

இன்னும் திணறல்

நிஃப்டி 50 இண்டெக்ஸின் உச்சப் புள்ளி என்றால் அது 11,760 புள்ளிகள் தான். ஆகஸ்ட் 28, 2018 அன்று இந்த உச்சப் புள்ளியை இண்ட்ராடேவில் தொட்டது. அதே நாளில் நிஃப்டி 50 11,738 புள்ளிகளில் குளோஸ் ஆனது தான் நிஃப்டியின் வாழ்நாள் உச்ச குளோசிங். இதுவரை அந்த புள்ளிகளைத் தாண்டவில்லை நிஃப்டி. ஆனால் இன்று வர்த்தக நேரத்தில் இண்ட்ராடேவில் நிஃப்டி இந்த 11,729 என்கிற உச்சபட்ச குளோசிங் புள்ளியைத் தான் தொட்டது நிஃப்டி.

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நிஃப்டியின் ஒரு நாள் சார்ட்டைப் பார்க்கும் போது ஆகஸ்ட் 28, 2018 அன்றுக்கான கேண்டில் சார்ட் ஒரு டோஜியாகவே தெரிவிகிறது. எனவே 11738, 11760 ஆகிய இரண்டு புள்ளிகளுமே நிஃப்டிக்கு வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளாகவே இருக்கின்றன. எனவே இந்த புள்ளிகளைக் கடக்க நிஃப்டிக்கு வலுவான செய்திகளும், செய்திகள் மூலம் செண்டிமெண்ட்களும், செண்டிமெண்ட் மூலம் மொமெண்டமும் கிடைக்க வேண்டும். அப்போது தான் நிஃப்டி இந்த வலுவான ரெசிஸ்டெண்ட்களை கடந்து வர முடியும்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 12 பங்குகள் இறக்கத்திலும், 18 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,716 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,207 பங்குகள் ஏற்றத்திலும், 1,343 பங்குகள் இறக்கத்திலும், 166 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,716 பங்குகளில் 46 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 78 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 23 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

எனர்ஜி, எஃப்.எம்.சி.ஜி, மீடியா, பார்மா, மெட்டல், பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற துறை சார்ந்த பங்குகள் கொஞ்சம் விலை குறைந்தே வர்த்தகமாயின. மீதமுள்ள அனைத்து துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்ஏட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஐஷர் மோட்டார்ஸ், டிசிஎஸ், கெயில் போன்ற பங்குகள் சராசரியாக நான்கு சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்

இறக்கப் பங்குகள்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஜி எண்டர்டெயின்மெண்ட், பாரத் பெட்ரோலியம், பஜாஜ் ஆட்டோஸ், சன் பார்மா போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 01, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 1.29% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அனைத்து ஐரோப்பிய சந்தைகளும் சுமார் 0.35 - 0.77% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. எனவே மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு பொருளாதார செய்திகளும் சந்தைகளை பாதிக்கவில்லை என்பதை உணர முடிகிறது.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 இண்டெக்ஸ்கள் மட்டுமே கொஞ்சம் தேக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற ஆசியச் சந்தைகள் அனைத்தும் அதிக ஏற்றம் இல்லாமல் பாசிட்டிவ்வாகவே வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் 0.90% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

நாளை மீண்டும் தொடுமா

நாளை மீண்டும் தொடுமா

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.98 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்று கரன்ஸி வர்த்தக நேர முடிவில் 69.16-ல் இருந்தது இன்று மேலும் வலுவடைந்து 68.98-க்கு வந்திருக்கிறது. ஆக உலக சந்தைகள் தொடங்கி அந்நிய செலாவணி வரை பலதும் இந்திய சந்தைகளுக்கு நாளைக்கும் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. எனவே நாளை மீண்டும் புதிய உச்சங்களை எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex in its record high 39056, nifty shines at 11713

sensex in its record high 39056, nifty shines at 11713
Story first published: Tuesday, April 2, 2019, 17:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X