39000 புள்ளிகளுக்கு கீழ் நிறைவடைந்த சென்செக்ஸ், தடுமாறிய நிஃப்டி..!

மும்பை: இன்று காலையிலேயே சென்செக்ஸ் கேப் அப்பில் 39,167 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் சில எதிர்பாராத செய்திகளால் சென்செக்ஸ் இறக்கம் கண்டு 38,877 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.

இன்ரு காலை சென்செக்ஸின் ஓப்பனிங் புள்ளி இதன் பழைய உச்ச புள்ளியான 39,115 புள்ளிகளை விட அதிகம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 39,056 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங்கில் இருந்து 179 புள்ளிகள் குறைந்து இன்று மாலை 38,877 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

முக்கியக் காரணம்

முக்கியக் காரணம்

இந்தியா முழுவதும் அதிகம் மழைப் பொழிவு பெறுவது தென் மேற்குப் பருவக் காற்றில் தான். ஆக இந்த மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் போது இந்தியாவில் பொருளாதாரமும் செழிக்கும் என்கிற கணிப்பில் இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். இன்று வெளியான வானிலை ஆய்வு மையத் தகவல்கள் படி இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கும் என்கிற கணிப்பு வந்த உடனேயே பலரும் சந்தைகளில் போட்டிருந்த பணத்தை லாப புக்கிங் செய்து வெளியே எடுத்துவிட்டார்களாம்.

சென்செக்ஸ் போக்கு

சென்செக்ஸ் போக்கு

இன்று காலை 39,467 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி சுமார் 11 மணிக்கு 39,270 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ். இது தான் இப்போது வரை சென்செக்ஸின் வரலாற்று உச்சப் புள்ளி. அதன் பின் மெல்ல இறக்கம் ஏற்றம் என மதியம் 2.30 மணி வரை சென்செக்ஸ் 39000 புள்ளிகளுக்கு மேலே வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. பருவமழைக் குறைவு எனும் செய்தி வந்த உடனேயே சென்செக்ஸ் அடுத்த ஒரு மணி நேரத்தில் இறக்கம் கண்டு விட்டது.

இண்ட்ராடே தொடவில்லை

இண்ட்ராடே தொடவில்லை

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேரத்திலேயே இண்ட்ரா டேவில் தன் வாழ்நாள் உச்சமான 39,106 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் நேற்றைய வர்த்தக நேரத்தின் இண்ட்ரா டே ஹை புள்ளிகளாக 39,115 புள்ளிகளைத் தொடவில்லை. என்றாலும் தன் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடைந்திருக்கிறது.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,735 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,643 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,713 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 11,735 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்றும் நிஃப்டி 50 கேப் அப்பில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

இன்னும் திணறல்

இன்னும் திணறல்

நிஃப்டி 50 இண்டெக்ஸின் உச்சப் புள்ளி என்றால் அது 11,760 புள்ளிகள் தான். ஆகஸ்ட் 28, 2018 அன்று இந்த உச்சப் புள்ளியை இண்ட்ராடேவில் தொட்டது. அதே நாளில் நிஃப்டி 50 11,738 புள்ளிகளில் குளோஸ் ஆனது தான் நிஃப்டியின் வாழ்நாள் உச்ச குளோசிங். இன்று தன் இண்ட்ரா டே உச்சமான 11760-ஐ தாண்டி 11761- வரை வர்த்தகமானது நிஃப்டி. ஆனால் குளோசிங் புள்ளிகளான 11738-ஐ தாண்டி ஒரு நாள் கூட இன்னும் குளோஸ் ஆகவில்லை.

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நேற்று சொன்னது போல நிஃப்டியின் ஒரு நாள் சார்ட்டைப் பார்க்கும் போது ஆகஸ்ட் 28, 2018 அன்றுக்கான கேண்டில் சார்ட் ஒரு டோஜியாகவே தெரிவிகிறது. எனவே 11738, 11760 ஆகிய இரண்டு புள்ளிகளுமே நிஃப்டிக்கு வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளாகவே இருக்கின்றன. எனவே இந்த புள்ளிகளைக் கடக்க நிஃப்டிக்கு வலுவான செய்திகளும், செய்திகள் மூலம் செண்டிமெண்ட்களும், செண்டிமெண்ட் மூலம் மொமெண்டமும் கிடைக்க வேண்டும். அப்போது தான் நிஃப்டி இந்த வலுவான ரெசிஸ்டெண்ட்களை கடந்து வர முடியும்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 23 பங்குகள் இறக்கத்திலும், 07 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,760 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 996 பங்குகள் ஏற்றத்திலும், 1,605 பங்குகள் இறக்கத்திலும், 159 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,760 பங்குகளில் 60 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 77 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 39 பங்குகள் இறக்கத்திலும், 11 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ஆட்டோமொபைல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், எனர்ஜி, எஃப்.எம்.சி.ஜி, மீடியா, பார்மா, மெட்டல் என அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. பன்னாட்டு நிறுவனங்கள் துறை சார்ந்த பங்குகள் மட்டுமே கொஞ்சம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸிகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

இந்தியா புல்ஸ் ஹவுசிங், மாருதி சுஸிகி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச் சிஎல் டெக்னாலஜீஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் சராசரியாக இரண்டு சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஜி எண்டர்டெயின்மெண்ட், இந்தியன் ஆயில் கார்பரேஷன், கெயில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 3.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 02, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.25% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இங்கிலாந்தின் எஃப்.டிஎஸ்.இ பங்குச் சந்தை மட்டுமே பெயரளவில் 0.01% ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. பிரான்ஸின் சிஏசி மற்ரும் ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் ஆகிய இரண்டுமே முறையே 0.56 மற்றும் 1.13% ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் மட்டும் கொஞ்சம் இறக்கத்தீல் வர்த்தகமாயின. மற்றபடி ஆசியச் சந்தைகள் அனைத்தும் நல்ல விலை ஏற்றத்தில் பாசிட்டிவ்வாகவே வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 1.20 % ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

நாளை மீண்டும் தொடுமா

நாளை மீண்டும் தொடுமா

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.67 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. பருவ மழை தவிர மற்ற எல்லா செய்திகளும் சர்வதேச பொருளாதார காரணிகளும் இந்திய சந்தைகளுக்கு சாதகமாகவே இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+