மேலும் சரிந்த சென்செக்ஸ்..! பலமின்றி வர்த்தகமாகும் நிஃப்டி..!

மும்பை: இன்று காலையிலேயே சென்செக்ஸ் 38,935 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் இறக்கம் கண்டு 38,684 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 38,877 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங்கில் இருந்து 192 புள்ளிகள் குறைந்து இன்று மாலை 38,684 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

நேற்று சென்செக்ஸ் இறக்கத்துக்கு மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என்கிற செய்தி காரனமாக இருந்தது போல இன்றைய சென்செக்ஸ் இறக்கத்துக்கு ஆர்பிஐயின் ரெப்போ வட்டி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி கணிப்பை 7.4%-த்தில் இருந்து 7.2%-ஆக குறைத்திருப்பது, குறைவான மழைப் பொழிவுச் செய்தியின் மொமெண்டம் என பலதும் பல ரூபங்களில் வேலை பார்த்திருக்கிறது.

இண்ட்ராடே தொடவில்லை

இண்ட்ராடே தொடவில்லை

இன்று வரை சென்செக்ஸின் உச்ச பட்ச புள்ளி என்றால் அது நேற்றைய இண்ட்ரா டே ஹை தான் 39,270 புள்ளிகள். இந்த புள்ளிகளை நெருங்கி வர்த்தகமாகும் என்கிற பேராசை நடக்கவில்லை. ஆனால் நேற்றைய குளோஒசிங் 38,877, ஏப்ரல் 01, 2019-ன் குளோசிங் 38,871 என எந்த ஒரு குளோசிங் புள்ளியையும் சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளாமல் தரதரவென 38,684-க்கு வர்த்தகம் நிறை வடைந்திருக்கிறது.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

ஆக தற்போது சென்செக்ஸ் 38,672 புள்ளியை சப்போர்ட்டாக எடுத்துக் கொள்கிறது. காரணம் கடந்த மார்ச் 29, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்தது இந்த புள்ளியில் தான். அதோடு மார்ச் 29 அன்று சென்செக்ஸின் டே சார்ட்டைப் பார்க்கும் போது ஒரு டோஜி கேண்டில் உருவாகி இருக்கிறது. இந்த டோஜியின் ஓப்பனிங் 38675 ஆகவும், குளோசிங் 38672 ஆகவும் இருப்பதால் தான் 38672-ஐ சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

உடைந்தால்

உடைந்தால்

ஒருவேளை 38672 என்கிற புள்ளியையும் தாண்டி இறக்கம் காணத்தொடங்கினால் 38545 என்கிற புள்ளி தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும். எனவே நாளை வியாபாரம் மேற்கொள்பவர்கள் ஜாக்கிரதையாக சப்போர்ட் எடுத்து வியாபாரம் பார்கக்வும்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,660 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,598 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

முன்பே சொன்னது போல நிஃப்டியின் ஒரு நாள் சார்ட்டைப் பார்க்கும் போது ஆகஸ்ட் 28, 2018 அன்றுக்கான கேண்டில் சார்ட் ஒரு டோஜியாகவே தெரிகிறது. எனவே 11738, 11760 ஆகிய இரண்டு புள்ளிகளுமே நிஃப்டிக்கு வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளாகவே இருக்கும் எனச் சொல்லி இருந்தோம்.

நடந்து விட்டது

நடந்து விட்டது

சொன்ன படி ரெசிஸ்டென்ஸை உடைத்து மேலே போக முடியாமல் கீழே வந்துவிட்டது நிஃப்டி. இப்போது மார்ச் 28, 2019 அன்றைய குளோசிங் புள்ளியான 11570-ஐ சப்போர்ட் எடுத்திருக்கிறது நிஃப்டி. ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு கீழே போனால் அடுத்து நல்ல சப்போர்ட்டாக 11,532 இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 17 பங்குகள் இறக்கத்திலும், 13 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,699 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,072 பங்குகள் ஏற்றத்திலும், 1,453 பங்குகள் இறக்கத்திலும், 174 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,699 பங்குகளில் 41 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 97 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 23 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி, மீடியா, பார்மா, பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இறக்கத்திலேயே தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், மாருதி சுஸிகி, ஹெச் டி எஃப் சி, எஸ்பிஐ போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

இந்தியா புல்ஸ் ஹவுசிங், ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

டிசிஎஸ், ஹிண்டால்கோ, பாரத் பெட்ரோலியம், இண்டஸ் இந்த் பேங்க், யெஸ் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 03, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.60% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இங்கிலாந்தின் எஃப்.டிஎஸ்.இ பங்குச் சந்தை -0.44% இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிரான்ஸின் சிஏசி மற்றும் ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் ஆகிய இரண்டுமே முறையே -0.28 இறக்கத்திலும் 0.13% ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹேங் செங் 0.17% இறக்கத்திலும், தாய் லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 0.29% இறக்கத்திலும் வர்த்தகமாயின. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி விலை மாற்றமின்றி ஃப்ளாட்டாக வர்த்தகம் நிறைவடைந்தன. மற்றபடி ஆசியச் சந்தைகள் அனைத்தும் நல்ல விலை ஏற்றத்தில் பாசிட்டிவ்வாகவே வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக சீனாவின் ஹாங்காய் காம்போசைட் 0.94 % ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.15 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் வட்டி விகித குறைவு, குறைந்த மழை பொழிவு கணிப்பு, குறைந்த ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு என தேவையான நெகட்டிவ் செய்திகளோடு டாலர் கொஞ்சம் விலை கூடி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+