BSNL ஊழியர்களுக்கு VRS கொடுக்க 6000 கோடி ரூபாய்க்கு திட்டம்..! லே ஆஃப் கிடையாது..!

டெல்லி: மத்திய அரசின் கீழ் இயங்கும் BSNL நிறுவனம் 54,000 பேரை வேலையில் இருந்த நீக்கப் போவதாக வந்த செய்திகு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

BSNL ஊழியர்களின் ஓய்வு வயத்தை 60-ல் இருந்து 58-ஆக குறைப்பது, 50 வயதுக்கு மேல் பணியில் இருப்பவர்களை கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேற்றுவது என எதையும் செய்யப் போவதில்லையாம்.

ஆனால் தற்போது ஊழியர்களே சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு நல்ல கவர்ச்சிகரமான ஓய்வு கால நிதிகளை பெரிய பேக்கேஜாக வழங்க இருக்கிறதாம்.

BSNL தரப்பு

BSNL தரப்பு

தற்போது BSNL நிறுவனத்துக்கு 4ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு செய்து கொள்வது, சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெறும் BSNL ஊழியர்களுக்கு நல்ல சன்மானங்கள் மற்றும் ஓய்வு ஊதியங்களைளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் தான் BSNL கவனம் செலுத்தி வருவதாக BSNL நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தன் சமூக வலைதள பக்கங்களிலேயே தெரிவித்திருக்கிறார்.

லே ஆஃப் இல்லை

லே ஆஃப் இல்லை

சில மீடியாக்களில் BSNL நிறுவனத்தில் இருந்து 54,000 பேர் வெளியேற்றப் பட இருக்கிறார்கள். BSNL ஊழியர்களின் ஓய்வு கால வயதை 60-ல் இருந்து 58 வயதாக குறைக்கப் போகிறார்கள். என பல்வேறு பொய்யான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை BSNL முற்றிலுமாக மறுப்பதாகச் சொல்லி இருக்கிறார் BSNL நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் அனுபம்.

தேர்தல் ஆணையம் அனுமதி

தேர்தல் ஆணையம் அனுமதி

மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை, BSNL நிறுவனத்தின் விருப்ப ஓய்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சரவை முன் வரைவைக் கொண்டு வர மத்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறதாம். அதோடு 4 ஜி அலைக்கற்றை தொடர்பாக விலை நிர்ணயிக்க, ப்ரிந்துரைக்க, BSNL நிறுவனத்தின் மொத்த திட்டத்தையும் டிராய் அமைப்புக்கு அனுப்பி இருப்பதாகச் சொல்கிறார் BSNL முதன்மை நிர்வாக இயக்குநர்.

இது தான் திட்டம்

இது தான் திட்டம்

ஆக அடுத்த சில மாதங்களில் 4 ஜி சேவைகளில் BSNL நிறுவனமும் களம் இறங்கி ஒரு கணிசமான வாடிக்கையாளர்களைப் பிடித்து தன் வருவாயை அதிகரித்துக் கொள்ளப் போகிறதாம். அதோடு 6,350 கோடி ரூபாய்க்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வூத் திட்டங்களையும் அறிவிக்கப் போகிறார்களாம்.

இவர்களுக்காக

இவர்களுக்காக

இந்த விருப்ப ஓய்வு திட்டம் தற்போது BSNL நிறுவனத்தின் பணியாற்றி வரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வென்றே வடிவமைக்க இருக்கிறார்களாம். அவர்களும் விருப்பம் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வி.ஆர்.எஸ் வாங்கலாமாம். இல்லை என்றால் தங்கள் சேவை முடியும் வரை BSNL-ல் வேலை பார்கலாமாம். தற்போது மாதம் ஒன்றுக்கு 900 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளமாக மட்டுமே செலவழிவதையும் குறிப்பிட்டிருக்கிறார் அனுபம்.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

தற்போது வரை BSNL-ல் 1.76 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். இந்த ஊழியர்களுக்கு ஒரு வருடம் சம்பளம் கொடுக்க BSNL-க்கு வரும் மொத்த வருவாயில் 55 - 60 சதவிகிதம் செலவாகிறதாம். தற்போது BSNL நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் சராசரி வயது 55 ஆகவும் இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+