ஆன்லனில் டிக்கெட்டை கேன்சல் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. ரூ. 40,000 அபேஸ் செய்த நிறுவனம்

லக்னோ: லக்னோவை சேர்ந்த ஜான்கிபுரத்தில் உள்ள ஒரு பெண் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ய நேரிட்ட போது அவரின் வங்கிக் கணக்கில் பண மோசடி செய்திருப்பது மிக பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

தொடர்ந்து அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியால் பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் பல இடங்களில் மக்கள் ஏமாறுவது வாடிக்கையாகவே உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக மேற்கண்ட செய்தி அறிவிக்கிறது. லக்னோவைச் சேர்ந்த ஜான்கிபுரத்தை சேர்ந்த பெண் ஆன்லைனில் சினிமா டிக்கெட்களை பிரபலமான பதிவு செய்யும் வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார்.

ஆன்லனில் டிக்கெட்டை கேன்சல் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. ரூ. 40,000 அபேஸ் செய்த நிறுவனம்

பின்னர் ஏதோ காரணத்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய நேரிட்டது. ஆனால் அவர் கேன்சல் செய்த பின்னர் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40,000 திருடப்பட்டது. இது குறித்து லக்னோ போலிசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டது.

போன் காலே மோசடிக்கு வழிவகுத்தது. இதுகுறித்து அந்த பெண்னிடம் விசாரித்த போது தான் தெரிந்தது. டிக்கெட்டை கேன்சல் செய்த பிறகு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என ஒருவர் போன் செய்ததாக தெரிகிறது. இந்த போன்காலே ஒரு உன்னதமான மோசடிக்கு வழிவகுத்தது. இந்த மோசடி முழுக்க முழுக்க போன் கால் மூலமாக நடந்தது பின்னர் தெரிய வந்தது.

டிக்கெட் கேன்சல் செய்ய வேண்டிய குறிப்பிட்ட காலத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தார். இருப்பினும் அவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து இந்த பிரபல வெப்சைட் வாடிக்கையாளர் மையத்திற்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் போனை துண்டித்தனர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது தான் ஏமாந்தது.

உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றம். இதுகுறித்து சைபர் கிரைம் அறிக்கையில் கூறியதாவது, டிக்கெட் வலைதளத்தின் முகவர் என கூறி ஒரு பெண் கால் செய்துள்ளார். இவர் உதவி செய்வதைப் போல நடித்து டெபிட் கார்டு அட்டை விவரங்களை தெரிந்து கொண்டார். அந்த அழைப்பு முடித்தவுடன் இந்த பெண்னின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டது.

எந்தவொரு மோசடியாளராக இருந்தாலும் முதலில் போனின் மூலமாக மட்டுமே ஆரம்பிக்கிறது. முதலில் போன் செய்து உங்களுக்காக ஆப்பர் என பலவித ஆசை காட்டி உங்களை சம்மதிக்க வைக்கின்றன. இதன் மூலம் உங்களுக்கு உதவி செய்வதாக நடித்து உங்களது பிறந்த நாள், போன் நம்பர்களை தெரிந்து கொள்கின்றன.

வீட்டு லேன்லைனுக்கு கால் செய்யும் மோசடி நிறுவனங்கள். உங்களின் வீட்டு லேன்லைன் நம்பருக்கு கால் செய்து உங்களது நெம்பருக்கும் கால் செய்தோம் ஆனால் கிடைக்கவில்லை என்று கூறி, உங்களது ஐடி என், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் பேங்கிங் தொடர்பான செய்திகளையும் தெரிந்து கொள்கின்றனர். ஏற்கனவே உங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் மோசடி நிறுவனங்கள் உங்களை ஈஸியாக ஏமாற்றி விடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+