இறக்கத்தில் சென்செக்ஸ்..! பதற்றத்தில் வர்த்தகமான நிஃப்டி..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த ஏழு வாரங்களாக ஏற்றத்தை மட்டுமே கண்டு கொண்டிருந்த சென்செக்ஸ் இப்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.

 

35287 புள்ளிகளில் இருந்து 39270 புள்ளிகளை வரை பாய்ந்த வந்த சென்செக்ஸ் எப்படியும் புதிய உச்சங்களைத் தொடும் 40,000 என்கிற மிகப் பெரிய புள்ளியை இன்று கடக்குமா, நாளை கடக்குமா..? என ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வர்த்தகர்களுக்கு ஆப்படித்து விட்டது சென்செக்ஸ்.

இன்று காலையிலேயே சென்செக்ஸ் 38,993 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் இறக்கம் கண்டு 38,700 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 38,862 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை குளோசிங்கில் இருந்து 162 புள்ளிகள் குறைந்து இன்று மாலை 38,700 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

வருமான வரி வரம்புகள் குறைக்கப்படுமாம்..! பாஜக அதிரடி..!

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சமாக விலை அதிகரித்து தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 70.70 டாலருக்கு விற்று வருவது தான் இந்த இறக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதோடு ஈரான் மீது இருக்கும் பொருளாதாரத் தடை, வெனிசுலா மீது விதிக்கப்பட்டிருக்கும் புதிய தடை எல்லாமே கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதை உறுதி செய்து கொண்டே இருக்கிறது

டாலர் விலை ஏற்றம்

டாலர் விலை ஏற்றம்

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் இந்தியா தொடர்ந்து அதிக விலை கொடுத்து டாலர்களை வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததைப் போல மீண்டும் ஒரு டாலருக்கு 75 ரூபாய் வரை சரிந்து விடுமோ என்கிற பயத்திலேயே வர்த்தகம் தேக்கம் கண்டிருக்கிறதாம்.

அடுத்த சப்போர்ட்
 

அடுத்த சப்போர்ட்

ஏப்ரல் 04, 2019 அன்று சென்செக்ஸ் 38,672 புள்ளியை சப்போர்ட்டாக எடுத்துக் கொள்கிறது எனச் சொல்லி இருந்தோம். காரணம் கடந்த மார்ச் 29, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்தது இந்த புள்ளியில் தான். அதோடு மார்ச் 29 அன்று சென்செக்ஸின் டே சார்ட்டைப் பார்க்கும் போது ஒரு டோஜி கேண்டில் உருவாகி இருக்கிறது. இந்த டோஜியின் ஓப்பனிங் 38675 ஆகவும், குளோசிங் 38672 ஆகவும் இருப்பதால் தான் 38672-ஐ சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் விளக்கி இருந்தோம் சொன்னது போல சந்தை இன்றும் 38,672-ஐ சப்போர்ட் எடுத்து 38,700 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

உடைந்தால்

உடைந்தால்

ஒருவேளை 38672 என்கிற புள்ளியையும் தாண்டி இறக்கம் காணத்தொடங்கினால் 38545 என்கிற புள்ளி தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும். எனவே நாளை வியாபாரம் மேற்கொள்பவர்கள் ஜாக்கிரதையாக சப்போர்ட் எடுத்து வியாபாரம் பார்க்கவும் என ஏப்ரல் 04, 2019 அன்றே சொன்ன புள்ளிகளை மீண்டும் சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,704 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,604 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,665 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பதையும் கவனிக்கவும். ஆக கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங்கை விட நிஃப்டியின் இன்றைய குளோசிங் குறைந்துவிட்டது.

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

முன்பே சொன்னது போல நிஃப்டியின் ஒரு நாள் சார்ட்டைப் பார்க்கும் போது கடந்த ஆகஸ்ட் 28, 2018 அன்றுக்கான கேண்டில் சார்ட் ஒரு டோஜியாகவே தெரிகிறது. எனவே 11738, 11760 ஆகிய இரண்டு புள்ளிகளுமே நிஃப்டிக்கு வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளாகவே இருக்கும் எனச் சொல்லி இருந்தோம். ஆகை அதை உடைத்து மேலே வர்த்தகம் நடக்க நல்ல வலுவான செய்தியும், செய்திக்கான மொமெண்டமும் தேவையாக இருக்கிறது. அது இப்போதைக்கு சந்தையில் இல்லை என்பதைப் பார்த்தாலே தெரிகிறது.

நடந்து விட்டது

நடந்து விட்டது

சொன்ன படி ரெசிஸ்டென்ஸை உடைத்து மேலே போக முடியாமல் கீழே வந்துவிட்டது நிஃப்டி. இப்போது மார்ச் 28, 2019 அன்றைய குளோசிங் புள்ளியான 11570-ஐயே மீண்டும் சப்போர்ட் எடுத்திருக்கிறது நிஃப்டி. ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு கீழே போனால் அடுத்து நல்ல சப்போர்ட்டாக 11,532 இருக்கும் என ஏப்ரல் 04, 2019 அன்றே சொல்லி இருந்தோம். ஆனால் இன்றையை இண்ட்ரா டேவிலேயே நிஃப்டி50 தன் இண்ட்ராடே லோவாக 11550 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. எனவே 11,550 லெவல்களை சப்போர்ட்டாக எடுத்து வர்த்தகங்களை மேற்கொள்ளவும்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 20 பங்குகள் இறக்கத்திலும், 10 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,762 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,067 பங்குகள் ஏற்றத்திலும், 1,506 பங்குகள் இறக்கத்திலும், 189 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,762 பங்குகளில் 61 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 100 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 34 பங்குகள் இறக்கத்திலும், 16 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ஐடி (தகவல் தொழில்நுட்பத் துறை) சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இறக்கத்திலேயே தான் வர்த்தகமாயின. எஜர்ஜி, வங்கி, மெட்டல், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் சுமார் 1 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் சராசரியாக ஒரு சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

இந்தியா புல்ஸ் ஹவுசிங், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், வேதாந்தா, யெஸ் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் மூன்று சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 05, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.59% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் ஜெர்மனி தவிர மற்ற இரண்டு சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜெர்மனியின் டிஏஎக்ஸ் சந்தை -0.21 இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி -0.21 சதவிகித இறக்கத்திலும், சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் சந்தை -0.22% இறக்கத்திலும் வர்த்தகமாயின. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -0.75% இறக்கத்திலும் வர்த்தகமாயின. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் விலை அதிக மாற்றமின்றி ஃப்ளாட்டாக வர்த்தகம் நிறைவடைந்தன. மற்றபடி ஆசியச் சந்தைகள் அனைத்தும் நல்ல விலை ஏற்றத்தில் பாசிட்டிவ்வாகவே வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக தைவானின் தைவான் வெயிடெட் சந்தை 0.90% ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.67 ரூபாய்க்கு வர்த்தகமாகம் நிறைவடைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ஒட்டு மொத்த ரூபாய் மதிப்பையும் காலி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் என்கிற ஒரு நெகட்டிவ் செய்தியால் மட்டுமே தற்போது டாலர் கொஞ்சம் விலை கூடி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex fails to raise, nifty is struggling to shine

sensex fails to raise, nifty is struggling to shine
Story first published: Monday, April 8, 2019, 17:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X