8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..? எந்த நாடு அது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக ஒரு நாட்டின் அரசாங்கம் அல்லது அந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தில் ஒரு பெரிய தொகையினை முதலீடு செய்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனி கரன்ஸி இருக்கிறது. இந்தியாவுக்கு ரூபாய், கனடாவுக்கு கனடியன் டாலர், மலேசியாவுக்கு ரிங்கிட்ஸ் என பல கரன்ஸிகள் இருக்கின்றன.

 

இப்போது ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் வியாபாரம் செய்து கொள்ள வேண்டும். வியாபாரம் என்றால் ஏற்றுமதி இறக்குமதி தான். அப்படி வியாபாரத்தில் அவர்கள் நம் நாட்டின் பணத்தைக் கொடுக்க முடியாது. டாலரில் தான் ஏற்றுமதி செய்த பொருளுக்கு பணத்தை வாங்கவோ, இறக்குமதி செய்த பொருளுக்கான பணத்தை செலுத்தவோ வேண்டும்.

ஆக டாலரை வாங்க தங்கள் நாட்டின் கரன்ஸிக்கு நிகரான மதிப்பு நன்றாக இருந்தால் பிரச்னை இல்லை. அதுவே டாலருக்கு நிகரான கரன்ஸி அடிக்கடி விலை குறைவதாக இருந்தால் பிரச்னை தான். ஆக தங்கத்தை போல நல்ல லாபம் தரக் கூடிய சில முதலீடுகளில் முதலீடு செய்து வைப்பது நல்லது. அப்படி மலை மலையாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கும் நாடுகளின் பட்டியலைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

11-வது இடத்தில் இந்தியா

11-வது இடத்தில் இந்தியா

2018-ம் ஆண்டில், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 10-வது இடம் கிடைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் 608.7 டன் தங்கத்துடன் 11-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியா சார்பாக ஆர்பிஐ தங்கத்தில் முதலீடு செய்து பாதுகாப்பா தங்கத்தை வைத்திருக்கிறது.

கடைசி 3 இடங்கள்

கடைசி 3 இடங்கள்

10-வது இடத்தில் நெதர்லாந்து நாடு 612 டன் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கிறது.
9-வது இடத்தைப் பிடித்திருப்பது குட்டித் தீவு நாடான ஜப்பான். ஜப்பான் 765.2 டன் தங்கம் வாங்கி குவித்திருக்கிறது.
8-வது இடத்தைப் பிடித்திருப்பது குளு குளு சுவிட்சர்லாந்து. 1040 டன் தங்கம் இந்த ஒரு நாட்டிடம் மட்டும் இருக்கிறதாம். உலக தங்க வியாபாரத்துக்கு சிறந்த இடமாக இன்று வரை நீடித்து வருகிறது சுவிசர்லாந்து. இரண்டாம் உலகப் போர் காலங்களில் இருந்து இந்த பட்டத்தை பெருமையாகச் சுமந்து வருகிறது சுவிர்சர்லாந்து.

சீனா, ரஷ்யா
 

சீனா, ரஷ்யா

7-வது இடத்தில் நம் அண்டை நாடான சீனா. 1,874 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம். ஏற்கனவே சீன யுவான்களின் மதிப்பு 2015 - 16 கால கட்டங்களில் பெரிய அளவில் சரிந்த போது தங்கம் கை கொடுத்தது நினைவிருக்கலாம்.
6-வது இடத்தில் காம்ரெட் தேசமான ரஷ்யா இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறார்களாம். இன்றைய தேதிக்கு ரஷ்யாவிடம் 2,150 டன் தங்கம் இருக்கிறதாம்.

பிரான்ஸ், இத்தாலி, ஐ எம் எஃப்

பிரான்ஸ், இத்தாலி, ஐ எம் எஃப்

5-வது இடத்தில் உணவு தேசமான பிரான்ஸ். 2,436 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம்.
4-வது இடத்தில் பாஸ்தா தேசமான இத்தாலி இருக்கிறது. இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்து பெரிய அளவில் சேமித்துக் கொண்டே தான் இருக்கிறார்களாம். இப்போது 2,451 டன் இத்தாலி வசம் இருக்கிறதாம்.
3-வது இடத்தில் இருப்பது ஒரு நாடு அல்ல..! ஒரு அமைப்பு. பன்னாட்டு நிதியம் (International Monetary Fund - IMF). 2,814 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம்.

ஜெர்மனி

ஜெர்மனி

2-வது இடத்தில் ஜெர்மனி. இங்கிலாந்து வெளியேறிய பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக வளம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களிடம் மட்டும் 3,369 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

முதலிடத்தில் வழக்கம் போல பெரியண்ணன் அமெரிக்கா தான். மற்ற நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கத் தெரிந்த இவர்களுக்கு தங்கள் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்ல்ளத் தெரியாதா என்ன..? அதான் சும்மா போனால் போகட்டுமே என 8,133 டன் தங்கம் வைத்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

america is holding 8100 tonnes of gold as reserves

america is holding 8100 tonnes of gold as reserves
Story first published: Wednesday, April 10, 2019, 18:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X