தரை தட்டிய சென்செக்ஸ்...! தடம் புரண்ட நிஃப்டி50..!

மும்பை: ஏப்ரல் மாதம் முழுவதும் இறக்கம் தான் போல ஜான் ஏறினால் முழம் சரிக்கிக் கொண்டிருக்கிறது இந்திய பங்குச் சந்தைகள். கடந்த வாரம் முழுக்க எப்படியும் சென்செக்ஸ் 40,000 இலக்கையும் நிஃப்டி 11800-க்கு மேல் போகும் என எதிர்பார்த்த வர்த்தகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தான்

நேற்று 239 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ் இன்று 353 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்ரு காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சுமார் 40 புள்ளிகள் கேப் டவுனில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சென்செக்ஸ் 38,898 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 38,585 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 38,939-க்கு ஏற்றத்தில் நிறைவடைந்தது. எனவே இன்று மட்டும் 353 புள்ளிகள் இறக்கம் கண்டு சென்செக்ஸ் வர்த்தகம் முடிந்திருக்கிறது.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

ஒருவேளை 38672 என்கிற சப்போர்ட் புள்ளிகளைத் தாண்டி இறக்கம் காணத் தொடங்கினால் 38545 என்கிற புள்ளி தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும் என் ஏப்ரல் 09, 2019-ல் சொல்லி இருந்தோம். சொன்ன படி 38,545-ஐ சப்போர்ட் எடுத்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் இண்ட்ரா டே லோ புள்ளியாக 38,542 புள்ளியைத் தொட்டிருக்கிறது. எனவெ கிட்டதட்ட இந்த சப்போர்ட்டை உடைத்துவிட்டது என்று கூட சொல்லலாம்.

உடைந்தால்

உடைந்தால்

எனவே நாளை சென்செக்ஸ் 38,430 லெவல்களை முதல் சப்போர்ட்டாக எடுத்து வர்த்தகமாகலாம். ஒருவேளை அந்த சப்போர்ட் உடைந்தால் 38,372 புள்ளிகள் அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும். நாளைய வர்த்தகமும் இனையது போல ஒரே நாளில் 350 புள்ளிகள் எல்லாம் இறங்கினால் கூட 38,165 புள்ளிகளைத் தாண்டி இறக்கம் காணாது என அனலிஸ்டுகள் நம்புகிறார்களாம். எனவே முதல் சப்போர்ட் 38430, இரண்டாம் சப்போர்ட் 38372, மூன்றாம் சப்போர்ட் 38165 என மூன்று சப்போர்ட்களையும் கவனித்து வர்த்தகம் மேற்கொள்ளவும்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,646 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,584 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,671 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பதையும் கவனிக்கவும். ஆக நேற்றைய குளோசிங்கை விட நிஃப்டியின் இன்றைய குளோசிங் 87 புள்ளிகள் குறைந்துவிட்டது.

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

நிஃப்டி டெக்னிக்கல் அனாலிசிஸ்

ஏப்ரல் 09, 2019 அன்றைய குலோசிங் பெல் யெதியில் சொன்ன படி ரெசிஸ்டென்ஸை உடைத்து மேலே போக முடியாமல் கீழே வந்துவிட்டது நிஃப்டி. இப்போது மார்ச் 28, 2019 அன்றைய குளோசிங் புள்ளியான 11570-ஐயே மீண்டும் சப்போர்ட் எடுத்திருக்கிறது நிஃப்டி. ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு கீழே போனால் அடுத்து நல்ல சப்போர்ட்டாக 11,532 இருக்கும் என ஏப்ரல் 04, 2019 அன்றே சொல்லி இருந்தோம். ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்தால் அடுத்த நல்ல சப்போர்டாக 11,515 வலுவான சப்போர்ட்டாக இருக்கும். அதையும் உடைத்தால் 11,500-வை சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 28 பங்குகள் இறக்கத்திலும், 08 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,711 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,141 பங்குகள் ஏற்றத்திலும், 1,401 பங்குகள் இறக்கத்திலும், 169 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,711 பங்குகளில் 45 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 73 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 29 பங்குகள் இறக்கத்திலும், 21 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்து தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 71 டாலருக்கு விற்று வருவது, இந்தியாவின் ஜிடிபி கணிப்பை 7.5-ல் இருந்து 7.2 ஆக குறைத்துக் கொண்டது, உலக பொருளாதாரமே 3.3% வரை மட்டுமே வளரும் என்கிற கணிப்புகள் எல்லாமே இந்திய சந்தைகளை இன்று துவைத்து எடுத்துவிட்டது. இந்த செய்திகள் அனைத்துமே மார்க்கெட் செண்டிமெண்டை நெகட்டிவ்வாக மாற்றியதால் தான் இன்று சந்தை இறக்கத்தில் முடிந்திருக்கிறதாம்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

தற்போது இந்தியா ஈரானிடம் மேற்கொண்டு கச்சா எண்ணெய்க்கான ஆர்டர்களைக் கொடுக்காமல் காத்திருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார தடை வரும் மே மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. இந்த தடையை முன்பு விலக்கிக் கொண்டது போல மீண்டும் அமெரிக்க விலக்கிக் கொள்ளும். இந்தியா மீண்டும் பழைய படி ஈரானிடமே எண்ணெய் வாங்கலாம். அதில் பேரமும் பேசலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது.

டாலர் விலை ஏற்றம்

டாலர் விலை ஏற்றம்

முன்பே சொன்னது போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒருவேளை மேலே சொன்னது போல இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்கவில்லை என்றால் ஈரான் மற்றும் வெனிசுலாவைத் தவிர்த்துவிட்டு சவுதியிடம் சரணடைய வேண்டி இருக்கும். உலகில் கச்சா எண்ணெய்த் தட்டுப்பாடு செயற்கையாக உருவாகும். எனவே எண்ணெய் வள நாடுகள் சொல்லும் விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும். இதனால் டாலரையும் அதிக விலை கொடுத்த வாங்க வேண்டி இருக்கும். இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு சரியும்.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

பார்மா, ஆட்டோமொபைல், ரியாலிட்டி போன்ற துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இறக்கத்திலேயே தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஹெச் டி எஃப் சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், சிடிஎஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

டாடா மோட்டார்ஸ், சிப்லா, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலிவர் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 09, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -0.56% குறைந்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டன் தவிர மற்ற இரண்டு சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. லண்டனின் எஃப்.டி.எஸ்.இ சந்தை -0.01% ஃப்ளாட்டாக வர்த்தகமாகின்றன. பிரன்ஸும் ஜெர்மனியும் முறையே 0.35% மற்றும் 0.44% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி -0.53 சதவிகித இறக்கத்திலும், ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை -0.13% இறக்கத்திலும் வர்த்தகமாயின. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -0.09% இறக்கத்திலும் வர்த்தகமாயின. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் விலை அதிக மாற்றமின்றி ஃப்ளாட்டாக வர்த்தகம் நிறைவடைந்தன. மற்றபடி ஆசியச் சந்தைகள் அனைத்தும் நல்ல விலை ஏற்றத்தில் பாசிட்டிவ்வாகவே வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி சந்தை 0.49% ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.11 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ஒட்டு மொத்த ரூபாய் மதிப்பையும் காலி செய்து கொண்டிருக்கிறது. அதோடு இந்த ஈரான் பொருளாதார தடை வேறு அமெரிக்கா நீட்டிக்குமா..? நீட்டிக்காதா என்கிற அச்சத்திலேயெ ஓடிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+