ஃப்ளாட்டாக வர்த்தகமான சென்செக்ஸ், வலுவான சப்போர்ட்டில் நிஃப்டி50..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,621 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 38,607 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 38,585-க்கு இறக்கத்தில் நிறைவடைந்தது.

நேற்றைய குளோசிங் புள்ளிக்கு இன்றைய குளோசிங் புள்ளிக்கும் இருக்கும் வித்தியாசம் வெறும் 21 புள்ளிகள் தான். இந்த மிகக் குறைந்த வித்தியாசம் கிட்ட தட்ட சந்தை மேலே எழும்ப மறுப்பதையே காட்டுகிறது. அதே நேரத்தில் கீழே இறங்கவும் மறுக்கிறது.

எனவே நாளை ஒரு சஸ்பென்ஸான வர்த்தக நாளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்று சந்தையை நகர்த்த தேர்தல் தவிர வேர் எந்த ஒரு செய்தியுமே இல்லை.

பாசிட்டிவ் செய்திகள்

பாசிட்டிவ் செய்திகள்

சொல்லப் போனால் எல் நினோவின் பாதிப்பு 2019-ம் ஆண்டுக்கான மழை பொழிவில் பாதிப்பு ஏர்படுத்தாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தைன் அறிக்கை பாசிட்டிவ் செண்டிமெண்டைத் தான் கொடுக்க வேண்டும். எனவே நாளை சந்தை ஒரு நல்ல ஏற்றத்தைப் பார்க்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

ஒருவேளை 38672 என்கிற சப்போர்ட் புள்ளிகளைத் தாண்டி இறக்கம் காணத் தொடங்கினால் 38545 என்கிற புள்ளி தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும் என ஏப்ரல் 10, 2019-ல் சொல்லி இருந்தோம். சொன்ன படி 38,545-ஐ சப்போர்ட் எடுத்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் இண்ட்ரா டே லோ புள்ளியாக 38,460 புள்ளியைத் தொட்டிருக்கிறது. ஏப்ரல் 09, 2019 அன்றே 38,430 புள்ளிகளை முதல் நிலை சப்போர்ட்டாகச் சொல்லி இருந்தோம். இப்போது அந்த சப்போர்ட் புள்ளிகள் சந்தையாலேயே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

ரெசிச்டென்ஸ்

ரெசிச்டென்ஸ்

எனவே நாளை சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கினால் 38700 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அப்படி 38,700 என்கிற லெவல்களைக் கடந்து வர்த்தகம் ஆகத் தொடங்கினால், அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 38,830 இருக்கும். எனவே இந்த 38,830 என்கிற லெவல்களை கடந்து வர்த்தகம் ஆக வேண்டும் என்றால் நல்ல வலுவான பாசிட்டிவ் செய்திகள் வேண்டும்.

சப்போர்ட்

சப்போர்ட்

ஒருவேளை இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கினால் 38,545 என்கிற லெவல்கள் வலுவான சப்போர்ட்டாக இருக்கும். ஒருவேளை அதையும் தாண்டி இறங்கினால் நிச்சயம் 38,430 புள்ளிகளை சப்போர்ட் எடுத்து சென்செக்ஸ் நிற்கும். அதற்கு மேல் சென்செக்ஸ் ஒரே நாளில் இறங்க வேண்டும் என்றால் மிகப் பெரிய நெகட்டிவ் செய்திகள் வந்தால் தான் நடக்கும்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,592 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,596 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,561 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி வெறும் 12 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து ஒரு நிலையற்ற தன்மையில் வர்த்தகமாகி இருப்பதாகச் சொல்கிறது.

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி சப்போர்ட்

இன்றும் மார்ச் 28, 2019 அன்றைய குளோசிங் புள்ளியான 11570-ஐயே மீண்டும் சப்போர்ட் எடுத்திருக்கிறது நிஃப்டி. ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு கீழே போனால் அடுத்து நல்ல சப்போர்ட்டாக 11,532 இருக்கும் என ஏப்ரல் 04, 2019 அன்றே சொல்லி இருந்தோம். ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்தால் அடுத்த நல்ல சப்போர்டாக 11,515 வலுவான சப்போர்ட்டாக இருக்கும். அதையும் உடைத்தால் 11,500-வை சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம் என்றோம். அந்த புள்ளிகளை அப்படியே வைத்துக் கொள்வோம்.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

நாளை நிஃப்டி மேலே ஏறி அதிகரித்து வர்த்தகமாகத் தொடங்கினால் 11,625 முதல் நிலை ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதை எளிதில் கடந்து விட்டாலும் 11,675 புள்ளிகளைக் கடப்பது கொஞ்சம் சிரமம் தான். அதையும் கடப்பது நிஃப்டிக்கு தற்போது இருக்கும் செய்திகள் மற்ரும் செய்திகளின் மொமெண்டத்தை வைத்துப் பார்க்கும் போது சாத்தியமில்லை.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 17 பங்குகள் இறக்கத்திலும், 13 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,693 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,157 பங்குகள் ஏற்றத்திலும், 1,356 பங்குகள் இறக்கத்திலும், 180 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,693 பங்குகளில் 54 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 57 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 21 பங்குகள் இறக்கத்திலும், 28 பங்குகள் ஏற்றத்திலும் ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

வங்கி, ஐடி, மெட்டல், பார்மா, ரியாலிட்டி போன்ற துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற துறை சார்ந்த பங்குகள் அனைத்தும் ஏஏற்றாத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

இந்தியா புல்ஸ் ஹவுசிங், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற பங்குகள் சராசரியாக 2 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

வேதாந்தா, டாடா ஸ்டீல், பவர் க்ரிட் கார்ப்பரேஷன், சன் பார்மா போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 10, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.69% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லண்டனின் எஃப்.டி.எஃப்.இ 0.07%, பிரன்சின் சி ஏ சி 0.79% அதிகரித்தும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.27% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், தென் கொரியாவின் கோஸ்பி தவிர மற்ற ஆசியச் சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -1.60% இறக்கத்தில் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.92 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ஒட்டு மொத்த ரூபாய் மதிப்பையும் காலி செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்று எப்படியோ கொஞ்சம் இந்திய ரூபாயி மதிப்பு அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+