வாரக் கடைசியில் வளர்ந்த சென்செக்ஸ்..! அடுத்த வாரத்திலும் தொடருமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,692 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 38,767 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 38,607-க்கு இறக்கத்தில் நிறைவடைந்தது.

 

இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 85 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமானதும் வலுவான ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இன்று சந்தையை நகர்த்த எந்த ஒரு பெரிய புதிய செய்திகளும் வந்து ஆட்டிப் படைக்கவில்லை. நேற்றைய செய்திகளின் மிச்ச சொச்ச மொமெண்டத்திலேயே வர்த்தகமகி வந்திருக்கிறது.

பாசிட்டிவ் செய்திகள்

பாசிட்டிவ் செய்திகள்

சொல்லப் போனால் எல் நினோவின் பாதிப்பு 2019-ம் ஆண்டுக்கான மழை பொழிவில் பாதிப்பு ஏர்படுத்தாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை பாசிட்டிவ் செண்டிமெண்டைத் தான் கொடுக்க வேண்டும். எனவே நாளை சந்தை ஒரு நல்ல ஏற்றத்தைப் பார்க்கும் என்றே எதிர்பார்க்கலாம் எனச் சொல்லி இருந்தோம். இந்த செய்தியும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக வர்த்தகமாகி வருவதும் இன்று சந்தையை உயர்த்திப் பிடித்துவிட்டது.

எப்போது மாறும் டிரெண்டு

எப்போது மாறும் டிரெண்டு

ஏப்ரல் 11, 2019 செய்தியில் சொன்னது போல 38,700 ரெசிஸ்டென்ஸை உடைத்தால் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 38,830 இருக்கும் எனச் சொல்லி இருந்தோம். தற்போது சென்செக்ஸ் ஒரு வலுவான சப்போர்ட் (38,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (39,000) புள்ளிகளுக்கு மத்தியில் ஃப்ளாட்டாக இந்த எட்டு வர்த்தக நாட்கள் வர்த்தகமாகி வந்திருக்கிறது. 39,000 புள்ளிகளுக்குள் 38,830 மிக வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. இந்த 38,830-ஐ கடந்துவிட்டால் அடுத்து 39,000 தான்.

ரெசிஸ்டென்ஸ்
 

ரெசிஸ்டென்ஸ்

எனவே இந்த 38,830 என்கிற லெவல்களை நாளை கடந்து வர்த்தகம் ஆனால், 38,900 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். மூன்றாம் நிலை ரெசிஸ்டென்ஸாக 39050 இருக்கும். இதை உடைத்துக் கொண்டு 40,000 என்கிற மாயப் புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் அளவுக்கு சென்செக்ஸில் இன்று வரை செய்திகள் வரவில்லை. அத்தனை வலுவான செய்தி வந்தால் தான் சென்செக்ஸ் 40,000 தொடும்.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

இன்று பாசிட்டிவ்வாக 38,767-ல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. எனவே 38,700 முதல் நிலை சப்போர்ட்டாக செயல்படும். மீண்டும் 38,700 உடைந்தால் அடுத்த சப்போர்ட்டாக 38,672 லெவல்கள் இருக்கும் என நம்பலாம். அதையும் உடைத்து கீழே இறங்கினால் 38,585 மூன்றாம் நிலை சப்பொர்ட்டாக, மிக வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,612 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,643 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,596 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி இன்றே தன் வலுவான ரெசிஸ்டென்ஸ் 11625-ஐக் கடந்து வர்த்தகமாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஏன் ஃப்ளாட்

ஏன் ஃப்ளாட்

சென்செக்ஸைப் போலவே நிஃப்டியும் ஒரு வலுவான சப்போர்ட் (11,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (11735)-க்கு உள்ளேயே சின்ன சின்ன ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகமாகி வந்திருக்கிறது. ஆக இதில் எப்படியாவது நித 11,735 புள்ளியை உடைத்துக் கொண்டு மேலே போனால் தான் நிஃப்டி 11760 என்கிற தன் இண்டரா டே ஹை புள்ளியைத் தாண்டி வர்த்தகமாகலாம்.

வலு இல்லையே

வலு இல்லையே

ஆனால் அதற்கு வலுவான செய்திகள் இல்லையே. ஒருவேளை நல்ல சாதகமான காலாண்டு முடிவுகள் வந்தால் இந்த ஏற்றத்தை எதிர்பார்கலாம். ஆனால் டிசம்பர் 2018-ல் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆனது, 2019 - 20 நிதி ஆண்டுக்கே இந்தியா தன் ஜிடிபி வளர்ச்சியை 7.2% ஆக குறைத்துக் கொண்டது எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அத்தனை நல்ல வலுவான காலாண்டு முடிவுகள் வெளியாகும் எனத் தோன்றவில்லை.

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி தற்போது 11,625 மற்றும் 11,600 புள்ளிகளை சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகி வருகிறது. ஒருவேளை இந்த சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு கீழே போனால் அடுத்து நல்ல வலுவான சப்போர்ட்டாக 11,585 இருக்கும். அதையும் உடைத்துக் கொண்டு கீழே போனால் 11,532 இருக்கும் என ஏப்ரல் 04, 2019 அன்றே சொல்லி இருந்தோம். அந்த லெவல்களை அப்படி வைத்துக் கொள்ளலாம்.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

நாளை நிஃப்டி மேலே ஏறி அதிகரித்து வர்த்தகமாகத் தொடங்கினால் 11,675 புள்ளிகள் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதையும் கடந்தால் 11,735 மற்றும் 11,760 லெவல்கள் கண்ணிப் படுகின்றன. 11,735 புள்ளிகளைக் கூட கடந்தாலும் கடக்கலாம். ஆனால் 11,760 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாவது இப்போதைக்கு சாத்தியமே இல்லை.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 13 பங்குகள் இறக்கத்திலும், 17 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,703 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,384 பங்குகள் ஏற்றத்திலும், 1,154 பங்குகள் இறக்கத்திலும், 160 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,703 பங்குகளில் 52 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 74 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 23 பங்குகள் இறக்கத்திலும், 27 பங்குகள் ஏற்றத்திலும் ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

இண்ட்ராஸ்ட்ரக்சர் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் தான்வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ், மாருதி சுஸிகி, ஐடிசி, டிசிஎஸ், யெஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

கெயில், ஐடிசி, மாருதி சுஸிகி, சிப்லா, ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

இந்தியாபுல்ஸ் ஹவுசிங், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், லார்சன் அண்ட் டியூப்ரோ போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 1.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 11, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -0.21% குறைந்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லண்டனின் எஃப்.டி.எஃப்.இ 0.32%, பிரன்சின் சி ஏ சி 0.38% அதிகரித்தும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.63% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் தாய்லாந்தின் தைவான் வெயிடெட் -0.03%, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -0.07%, சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் -0.04%-ம் குறைந்து வர்த்தகமாயின. மற்ற சந்தைகள் அனைத்து ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 0.73% ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.17 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலைக்கு 71.62 டாலராக உயர்ந்திருக்கின்ற போதிலும் ரூபாய் மதிப்பு குறையாமல் இருப்பது ஆச்சர்யம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

weekend trading ends in green and expecting to trade in green on next week too

weekend trading ends in green and expecting to trade in green on next week too
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X