மிசிகன்: சார்லி ஒரு நடுத்தர வயது திருமண முறிவு செய்து கொண்ட இளைஞர். இவர் தன் பெற்றோரிடமே 60 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார்.
அந்த 60 லட்சம் ரூபாய் எதற்குத் தெரியுமா..? சார்லியின் விலை மதிப்பற்ற, பார்ன் டிவிடிக்களை அழித்து விட்டதால் அத்தனை பெரிய நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டிருக்கிறாராம்.
சார்லி மிசிகனில் உள்ள தன் பெற்றோர்களுடனேயே வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் பெற்றோருக்கும், சார்லிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆகஸ்ட் 2017-க்குப் பின் தன் பெற்ரோரை விட்டுப் பிரிந்து வெளியேறி விட்டார்.
பொருட்கள் பார்சல்
அதற்குப் பிறகு சார்லி இண்டியானாவிலேயே வாழத் தொடங்கினார். திடீரென ஒரு நாள் பெற்றோர்கள் சார்லி மிசிகன் வீட்டில் விட்டுச் சென்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான தன் கலைப் பொக்கிஷமான பார்ன் டிவிடிக்கள் இல்லாததைப் பார்த்து கடுப்பாகி பெற்றோர்களிடம் விசாரித்திருக்கிறார். எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் என பதில் வந்திருக்கிறது.
கவலை
இதுவரை 12 பெரிய சூட்கேஸ் நிறைய, ஏகப்பட்ட பார்ன் டிவிடிக்களை சேகரித்து வைத்திருந்தாராம். இதில் இதுவரை வெளியாகாத தரமான டிவிடிக்கள், மிகப் பெரிய பிரபலங்களின் டிவிடிக்கள், ப்ரீமியம் கலெக்ஷன்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்டு எளிதில் கிடைக்காத உயர் தர டிவிடிக்கள் என அத்தனையயும் ஒரு கலைப் பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தாராம். இப்போது அவை இல்லாமல் பொய்விட்டதால் பெற்றோர்கள் மீது வழக்கு தொடுத்திருக்கிறாராம்.
நஷ்ட ஈடு
ஒட்டாவா பகுதி காவல் நிலையத்தில் சார்லி தன் பெற்றோர்கள் மீதே "தன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலைக் பொக்கிஷமான பார்ன் டிவிடிக்களை தன் பெற்றோர்கள், வேண்டும் என்றே அழித்துவிட்டார்கள். அதற்கு நஷ்ட ஈடாக 60 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்திருக்கிறார்கள்.
சார்லியின் அப்பா அம்மா
இதைக் குறித்து சார்லியின் பெற்ரோர்கள் சார்லிக்கு மின்னஞ்சல் மூலம் எழுதிய கடிதத்தில் "சார்லி உன் நன்மைக்காகத் தான் இந்த டிவிடிக்களை அழித்தோம். உன் மனம் மற்றும் உடல் நன்றாக இருக்கத் தான் இப்படிச் செய்தோம். உன்னிடம் ஒரு கிலோ போதைப் பொருள் இருந்திருந்தால் எப்படி அவைகளை அழித்து உன்னை பாதுகாத்திருப்போமோ, அப்படித் தான் இந்த டிவிடிக்களையும் அழித்து உன்னைப் பாதுகாத்திருக்கிறோம். இவைகளை அழிக்கவே எங்களுக்கு மிக நீண்ட நேரம் தேவைப்பட்டது. உன் நன்மைக்காகத் தான் நாங்கள் இதைச் செய்தோம் என்பதை நீ ஒரு நாள் அறிவாய்" என உருக்கமாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.
சார்லி பின் புலம்
சார்லி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே சக மாணவர்களுக்கு இந்த வீடியோக்களை விற்று, சிறிய அளவில் காசு பார்த்திருக்கிறார். இந்த விவரங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வர சார்லியை பள்ளியில் இருந்தே நீக்கிவிட்டார்களாம். அதன் பின்னும் சார்லியை பெற்றோர்கள் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். மீண்டும் இந்த வீட்டில் ஏதாவது ஏடாகோடமான டிவிடிக்கள் கிடைத்தால் அழித்துவிடுவோம் எனவும் மிரட்டி நல்வழிப்படுத்த முயற்சித்திருக்கிறார்களாம். பலன் தராமல் இப்போது காவல் நிலையம் வரை பிரச்னை வந்திருக்கிறது என வருத்தப்படுகிறார்கள், சார்லியின் பெற்றோர்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications