மழையும் இல்ல தண்ணியும் இல்ல..பருத்தி மட்டும் எப்படி விளையும்.. வறட்சி காரணமாக உற்பத்தி பாதிப்பு

டெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டில் கடும் வறட்சி காரணமாக விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பருத்தி பயிரிடும் பகுதிகளில் வறட்சி காரணமாக, இந்தியாவின் பருத்தி உற்பத்தி 7.87 சதவிகிதம் சரிவடைந்து, 2018-19 பருவத்தில், 343 லட்சம் பேல்கள் (170 கிலோ ஒரு பேல் ) குறையலாம் எனவும் அறிக்கைகள் கூறுகின்றன.

இந்திய ஜவுளி தொழில்துறையின் (CITI) தலைவர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது, கடந்த செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்த பருவத்தில் பருத்தி உற்பத்தியில் 370 லட்சம் பேல்கள் இருந்ததாகவும், கடந்த 12 ஆண்டுகளில் மிக மோசமான உற்பத்தி 348 லட்சம் பேல்களைக் கொண்டது எனவும், ஆனால் நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தி 343 லட்சம் பேல்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தின் அறிக்கைகளில், அக்டோபர்-செப்டம்பர் பருவத்திற்கான பருத்தி பருவத்தில், அது வளர்ந்து வரும் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உண்மையான தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டது என்னவெனில் நவம்பர் 22, 2018 வரையிலான பருத்தி விளைச்சல் 361 லட்சம் பேல்கள் எனவும் மதிப்பிடப்பட்டது.

கடும் வறட்சி- பருத்தி உற்பத்தி குறைவு

கடும் வறட்சி- பருத்தி உற்பத்தி குறைவு

மேலும் இது குறித்து ஜெயின் கூறுகையில் குஜராத்தின் பல பகுதிகள், குறிப்பாக பருத்தி வளரும் பகுதிகளில் மழையின்மை காரணமாக வறட்சி நிலவுகிறது, ஈரப்பதமும் குறைந்தே காணப்படுகிறது. அதேசமயம் மகாராஷ்டிராவின் சில பருத்தி வளரும் பகுதிகளில் விளைச்சல் மிக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படலாம்.

மறு மதிப்பீடு

மறு மதிப்பீடு

இதையடுத்து CITI அறிக்கையில், 2018 - 2019 ஆம் ஆண்டில் பருத்தி பயிரிடும் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் மூலம் 170 கிலோ எடையுள்ள 343 லட்சம் பேல்கள் தான் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆய்வுகள் மதிப்பீடுகளை மறுசீரமைத்துள்ளது.

வறட்சியால் உற்பத்தி குறைவு

வறட்சியால் உற்பத்தி குறைவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்த உற்பத்தி அளவு இருப்பினும், பருத்தி சப்ளை 40 லட்சம் பேல்கள் கொண்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி குறைவாக இருந்தாலும், ஏற்றுமதி எப்பவும் போலவே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதிக இருப்பால் பிரச்சனை இல்லை

அதிக இருப்பால் பிரச்சனை இல்லை

சந்தையில் அதிகப்படியான இருப்பு மற்றும் குறுகிய ஏற்றுமதி, அதிகப்படியான இறக்குமதி இவை இரண்டையும் சரி செய்து கொள்ளும் வகையில், பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தனது இருப்பை (பங்குகளை) விற்பனை செய்யலாம் என்றும் தெரிகிறது. இதனால் விலை அதிகளவு மாற்றம் இருக்காது என்றும் இதன் மூலம் தெரிகிறது. அதோடு உற்பத்தி குறைந்தாலும் அதன் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றும் தெரிகிறது.

பருவமழையால் உற்பத்தி  அதிகரிக்கலாம்

பருவமழையால் உற்பத்தி அதிகரிக்கலாம்

அடுத்த ஆண்டிற்கான பயிர் சூழ்நிலையை பொறுத்தவரை, நடப்பு ஆண்டின் போது மிகவும் அதிக அளவு விலை மற்றும் பருவ மழைத்திறன் ஆகியவை இந்திய விவசாயிகளுக்கு அதிக பருத்தியை வளர்க்க காரணமாயிருக்கின்றன. இதனால் 2019-20 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய உற்பத்தியில் 6 சதவிகிதம் உயர்ந்து 27.6 மில்லியன் டன்னாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

வரத்து குறைவின் காரணமாக விலை அதிகரிப்பு

வரத்து குறைவின் காரணமாக விலை அதிகரிப்பு

தற்போது வரத்து குறைவின் காரணமாக பருத்தி விலைகள் அதிகளவு விலையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவே பருவமழை ஆரம்பித்தால் அதன்மூலம் உற்பத்தி அதிகரிக்கலாம். இதனால் சந்தைக்கு வரத்தும் அதிகரிக்கலாம். அதேசமயம் பருத்தி இறக்குமதியும் அதிகரித்தால் பருத்தி விலை குறையலாம் என்றும், இது ஜீன்2019 ல் பருத்தியின் விலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் தெரிகிறது. ஆனால் தற்போதைக்கு விலை மாற்றம் இருக்காது என்றும் ஜெயின் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+