தடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,420 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தேய்ந்து இறக்கம் கண்டு 39,140 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.
செவ்வாய்க்கிழமை மாலை சென்செக்ஸ் 39,275-க்கு என்கிற வரலாற்ரு உச்சத்தில் நிறைவடைந்தது.

 

கடந்த செவ்வாய்க்கிழமைப் போலவே, இன்றும் காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 145 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனா ஏற்றம் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு கூட நீடிக்கவில்லை.

பிரமாதமான கேப் அப் என்றாலும் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இது சந்தையின் ஏற்றம் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நெகட்டிவ் செண்டிமெண்டையே காட்டுகிறது.

செய்திகள்

செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் 187 நிறுவனங்களில் சுமார் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தங்களின் பங்குகளை அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் இந்தியாவில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த 200 நிறுவனப் பங்குகளை விற்று லாபத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த திடீர் லாப புக்கிங், இந்திய முதலீட்டாளர்களையும் கொஞ்சம் தயக்கத்தி வைத்திருக்கிறது.

இறக்கும் செய்திகள்

இறக்கும் செய்திகள்

க்ரிசில் நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் நெகட்டிவ்வாக இருப்பது, விப்ரோவில் ஹேக்கிங், ஜஸ்ட் டயலில் ஹேக்கிங் பிரச்னை, ஆர்பிஎல் வங்கி மார்ச் 2019-ல் நல்ல லாபம் பார்த்தாலும் பங்கு விலை ஏறாமல் இருப்பது என முதலீட்டாளர்களின் பயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆக சந்தையை உயர்த்தும் விதத்தில் பெரிய பாசிட்டிவ் செய்திகள் வரவில்லை.

நிலைக்க வேண்டும்
 

நிலைக்க வேண்டும்

கடந்த மூன்று வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஆக மூன்ரு வர்த்தக நாட்கள் குளோசிங் கண்ட புள்ளி என்கிற ரீதியில் 39,000 புள்ளிகளுக்கு கீழ் வந்து வர்த்தகமாவது கொஞ்சம் சிரமம் தான் என எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் மேலும் மேலும் 39,000 புள்ளிகளுக்கு மேல் வரும் புதிய குளோசிங்கால் தான் இந்த 39,000-த்தைக் ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸாக மாற்ரும், ஏற்றம் உறுதி செய்யப்படும்.

சொன்னது நடந்ததே

சொன்னது நடந்ததே

நேற்று முதல் ரெசிஸ்டென்ஸாக 39,000 புள்ளிகளும், இரண்டாம் நிலை ரெசிஸ்டென்ஸாக 39050 புள்ளிகளும் இருக்கும். இவை இரண்டுமே கூட ஓரளவுக்கு வலுவான ட்ரிக்கர்களால் உடைக்கப்படலாம். ஆனால் 39,138 என்கிற புள்ளியைத் தான் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. நாளை ஒரு நாளில் இந்த புள்ளியை உடைத்துக் கொண்டு சென்சென்ஸ் உயர்த்தால் தாறு மாறாக உயரும் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே 39,138 புள்ளிகளை உடைத்து கூடுதலாக 137 புள்ளிகள் அதிகரித்திருக்கிறது.

சொன்னது போல நடந்ததே

சொன்னது போல நடந்ததே

ஏப்ரல் 16,2019 செய்தியில் முதல் ரெசிஸ்டென்ஸாக ரெசிஸ்டென்ஸாக 39,400 லெவல்களும், இரண்டாவது ரெசிஸ்டென்ஸாக 39,482 புள்ளிகளும், 3-வது ரெசிஸ்டென்ஸாக 39,657 புள்ளிகளும் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே சென்செக்ஸின் இண்ட்ரா டே 39,487 புள்ளிகளைத் தொட்டு கீழே இறங்கி 39140-ல் வர்த்தக நிறைவடைந்திருக்கிறது.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

ஆக நாம் கணித்த ரெசிஸ்டென்ஸ் சரியாக இருக்கிறது. அடுத்தும் வரும் திங்கட்கிழமை அன்றைய வர்த்தகத்துக்கு 39,202 முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 39,450 வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் இருக்கிறது. திங்கட்கிழமை ஒரே நாளில் 200 புள்ளிகள் அதிகரித்து மேலே போனால் 39,657-ஐ பெரிய மிக வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

ஒருவேளை இன்று போலவே திங்கழ்கிழமையும் இறக்கம் காணத் தொடங்கினால் அதே 39,111 புள்ளிகள் முதல் சப்போர்ட்டாகவும், இரண்டாவது மற்றும் வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம் 39,000 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். மூன்றாம் நிலை வலுவான சப்போர்ட்டாக 38,870 என்கிற புள்ளிகள் அடுத்தடுத்த வலுவான சப்போர்ட்டாக இழுத்துப் பிடிக்கும்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,856 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,752 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,787 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி எப்படியோ 11750 என்கிற லெவல்களில் தாக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது தன் முந்தைய இண்ட்ரா டே ஹை புள்ளிகளான 11761-க்கும் நெருக்கமான புள்ளி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

நாளை (ஏப்ரல் 18) நிஃப்டி மேலே ஏறி அதிகரித்து வர்த்தகமாகத் தொடங்கினால் 11,866 புள்ளிகள் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.எனச் சொல்லி இருந்தோம். அதை இன்றைய நிஃப்டியின் இண்ட்ரா டே ஹை 11,856 புள்ளிகளைத் தொட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. எனவே 11866 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு அடுத்து 11,927 மற்றும் 11982 புள்ளிகளை அடுத்தடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி இன்று 11,787 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஒருவேளை நிஃப்டி கீழே இறங்கி வர்த்தகமாகத் தொடங்கினால் முதல் நிலை சப்போர்ட்டாக 11,700 லெவல்கள் இருக்கும். இந்த லெவல்கள் இன்னும் உறுதியான ஒரு சப்போர்ட்டாக உருவாக வில்லை என்றாலும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம் என ஏப்ரல் 16, 2019 அன்று சொல்லி இருந்தோம். அதை உடைத்துக் கொண்டு கீழே இறங்கினால் 11,688 மற்றும் 11,625 அடுத்து நல்ல வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் சொல்லி இருந்தோம். அதே லெவல்களை திங்கட்கிழமைக்கும் வைத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 22 பங்குகள் இறக்கத்திலும், 08 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,727 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 886 பங்குகள் ஏற்றத்திலும், 1,674 பங்குகள் இறக்கத்திலும், 167 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,727 பங்குகளில் 55 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 84 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 31 பங்குகள் இறக்கத்திலும், 19 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

எனர்ஜி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், யெஸ் பேங்க், விப்ரோ போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

ரிலையன்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், விப்ரோ போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், ஹிண்டால்கோ, வேதாந்தா, ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 3.25 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 17, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -0.05% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டன் தவிர அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.12%, பிரான்சின் சி ஏ சி 0.26% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.47% வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி என 3 சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்துச் சந்தைகளும் இறக்கத்தில் தான்வர்த்தகமாயின. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி -1.43% இறக்கத்தில் தான் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.53 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலைக்கு 71.63 டாலராக உயர்ந்திருக்கின்றது. நேற்றைய விலையை விட இன்று அதிகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

again sensex starts to fall manage to close above 39100 and nifty manage to be above 11750

again sensex starts to fall manage to close above 39100 and nifty manage to be above 11750
Story first published: Thursday, April 18, 2019, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X