40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..!

மும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி தன் மார்ச் 2019-க்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

மார்ச் 2019 காலாண்டில் மட்டும் HDFC வங்கியின் நிகர லாபம் 5,885.12 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த மார்ச் 2018 காலாண்டை விட 22.62 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிகர லாபம் எல்லாமே நிகர வட்டி வருமானத்தில் இருந்தும், செயல்பாட்டு லாபங்களில் இருந்துமே வந்திருப்பதால் தான் நாம் HDFC வங்கியை ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

வட்டி வருமானம்

வட்டி வருமானம்

வங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள், வங்கிக்கு கொடுத்த வட்டியில் (Interest Received), வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு வங்கி கொடுத்த வட்டியைக் (Interest Spend) கழித்தால் கிடைப்பது தான் நிகர வட்டி வருமானம் (Net Interest Income). மார்ச் 2018 காலாண்டில், இந்த நிகர வட்டி வருமானத்தில் இருந்து மட்டும் 13,089 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. இது கடந்த மார்ச் 2018-ல் கிடைத்த நிகர வட்டி வருமானத்தை விட 22.62 சதவிகிதம் அதிகம். மார்ச் 2019 காலாண்டில் HDFC வங்கி கொடுத்திருக்கும் கடன் 19.8 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.

கடன் வளர்ச்சி

கடன் வளர்ச்சி

HDFC வங்கி மார்ச் 2019 வரை 8.19 லட்சம் கோடி ரூபாயை கடனாகக் கொடுத்திருக்கிறதாம். இதுவும் கடந்த மார்ச் 2018-ஐ விட 24.5 சதவிகிதம் அதிகமாம். கடன்கள் அதிகரித்திருக்கும் அதே வேளையில் HDFC வங்கியின் டெபாசிட்டுகளும் 9.23 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகரித்திருக்கிறதாம். இது மார்ச் 2018 காலாண்டை விட 17 சதவிகிதம் அதிகம். மிக முக்கியமாக CASA டெபாசிட்டுகளும் 14% அதிகரித்திருக்கிறதாம்.

வாராக் கடன்கள்

வாராக் கடன்கள்

தோராய வாராக் கடன்கள் (Gross NPA) கடந்த டிசம்பர் 2018 காலாண்டை விட 0.02 சதவிகிதம் குறைந்திருக்கிறது. நிகர வாராக் கடன்கள் (Net NPA) மார்ச் 2019 காலாண்டுக்கு 0.39% ஆக குறைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் நிகர வாராக் கடன் 0.42% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

40 ரூபாய்க்கு 100 ரூபாய்

40 ரூபாய்க்கு 100 ரூபாய்

மிக முக்கியமாக HDFC நிறுவனத்தின் cost-to-income ratio 40.1 ஆக இருக்கிறது. அதாவது HDFC வங்கி 40.1 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் சம்பாதிக்கிறார்களாம். ஆனால் நம் அரசு வங்கிகள் 100 ரூபாய் செலவழித்து 40 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மல்லையாவை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விட்டுவிடுகிறார்கள். பிறகு எப்படி லாபம் பார்க்கும்.

20.3% வளர்ச்சி

20.3% வளர்ச்சி

2018 - 19 நிதி ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் HDFC வங்கி 21,078 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. இந்த 2018 - 19 நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாயில் 48,243 கோடி ரூபாய் வட்டி வருமானம் மட்டுமே. இந்த வட்டி வருமானம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் 20.3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+