டெல்லி : மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அறிமுகம் செய்தது. இந்த முறையில் வசூலாகும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி விற்பனை கணக்கு தாக்கல் செய்வதற்கான கணக்கு தாக்கலுக்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களூக்கு அதிகரித்துள்ளது. அதாவது ஏப்ரல் 23 கடைசி தேதி என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஜி.எஸ்.டி வலைதளத்தில் கூறியுள்ளதாவது, வர்த்தகர்கள் ஏற்கனவே 20- ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 23 வரை தாக்கல் செய்யலாம் என 3 நாட்கள் அதிகரித்துள்ளது. இதையடுத்து வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதில் ஜி.எஸ்.டி. வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது.
மார்ச் வசூல் இதுவரை ரூ.1கோடிக்கும் சற்று குறைவே
இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. மட்டும் இதுவரை ரூ.20,353 கோடி எனவும், மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27,520 கோடி எனவும் , மொத்த ஜி.எஸ்.டி. ரூ.50,418 கோடி, எனவு அறிவித்துள்ளது. அதேசமயம் கூடுதல் வசூல் ரூ.8,286 கோடி எனவும் கூறியுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92,167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98,114 கோடி எனவும். இது 2017-2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9.2 சதவிகிதம் கூடுதலாகும்.
ஜனவரி மாத்தில் ரூ.1.02 கோடி
இதுவே கடந்த ஜனவரி 2019 மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,20,503 கோடிக்கு மேல் வசூலானதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுவே ஜனவரி 2018ல் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.89,825 கோடி வசூலானது. எனவே கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் தொகை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
வரும் மாதங்களில் ஜி.எஸ்.டி குறையும்
இந்த நிலையில் தற்போது நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பொருட்களின் வரியை அரசு குறைத்துள்ளது. குறிபாக வீடு புதிய வீடு, என பல விதத்தில் வரியை குறைத்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் சற்று குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications