நிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் கடந்த நிதியாண்டில் (2018 -2019) தங்கம் இறக்குமதி 3 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 32.8 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.இதுவே கடந்த 2017- 2018 நிதியாண்டில் 33.7 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

சர்வதேச சந்தையில் இந்த மஞ்சள் உலோகங்களின் விலை சற்று நிலையானதாக காணப்படுவதையடுத்து, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 31.22 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதி செய்வதில் இந்தியா முக்கிய இடம் வகித்து வருகிறது. குறிப்பாக ஆபரண உபயோகத்தில் இந்தியா அதிகளவு இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆபரணத் துறையின் தேவை அதிகரிப்பால், உலகளவில் நம் நாடு அதிகளவு இறக்குமதி செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி குறந்தது என்பதை நம்புவதாக இல்லை என் கிறார்கள் ஆர்வலர்கள்.

ஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்

நடப்பு கணக்கு பற்றாக்குறையும் காரணமே

நடப்பு கணக்கு பற்றாக்குறையும் காரணமே

இது கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே 2017 -2018ம் நிதியாண்டில் இதே காலாண்டில் 2.1 சதவிகிதமாக காணப்பட்டது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு வர்த்தக பற்றாக்குறையும் ஒரு காரணமே.

குறைந்த தங்கம் இறக்குமதி

குறைந்த தங்கம் இறக்குமதி

கடந்த மார்ச் மாதத்துடன்முடிவடைந்த நிதியாண்டில் 2018 - 2019 தங்கம் இறக்குமதி 3280 கோடி டாலராக குறைந்துள்ளது. இதுவே கடந்த 2017- 2018-ம் நிதியாண்டைவிட 3 சதவிகிதம் குறைவாகும்.இது இந்த காலத்தில் மட்டும் 3370 கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தங்கம் இறக்குமதி மிக குறைந்திருந்தது. இதுவே மார்ச் மாதத்தில் 31.22 சதவிகிதம் அதிகரித்து 327 கோடி டாலாராகக் அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
 

கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்

அன்னிய செலவாணி அதிகமாக வெளியேறுவதைக் தடுக்கும் வகையிலும், அதே சமயம் இறக்குமதி கட்டுப்படுத்தும் வகையிலும், தங்கம் இறக்குமதிக்கு வரியை 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆபரண ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பது உள் வர்த்தகர்களின் நீண்ட கால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

இறக்குமதி  தமிழகத்திலும் அதிகம்

இறக்குமதி தமிழகத்திலும் அதிகம்

தமிழகத்தில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.அதிலும் வெளிநாடுகளில் தங்கத்தின் விலை குறைவு என்பதால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கட்டுப்பாடுகள் அதிகரித்ததை அடுத்து தங்கம் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. அதுவும் நடந்த தேர்தலில் பறக்கும் படையினரால் பல கோடி மதிப்பினாலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒருவிஷயமே.

1 கிலோ மட்டும் இறக்குமதி

1 கிலோ மட்டும் இறக்குமதி

ஒருத்தருக்கு 1 கிலோ மட்டும் இறக்குமதி இலக்கு

கடந்த 2012ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளிலிருந்து 10 கிலோ வரை தங்கம் கொண்டுவரலாம் என்றும், அதற்கான இறக்குமதி வரி 5 சதவிகிதம் எனவும் இருந்தது. ஆனால் அதிகப்படியான தங்கம் இறக்குமதியால் அதை தடுக்கவே 2012ம் ஆண்டின் பின் ஒருவர் ஒரு கிலோ தங்கம் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர அனுமதிக்கப்பட்டது. இதற்கான இறக்குமதி வரியும் 5 லிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

ஜி.எஸ்.டியும் சேர்ந்துருச்சு

ஜி.எஸ்.டியும் சேர்ந்துருச்சு

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இறக்குமதி தங்கத்தின் மீது 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க்கத்தின் இறக்குமதி வரி 13 சதவிகிதமாக உயரும். இதனாலேயே கடந்த சில ஆண்டுகளை விட தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபிறகு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.

இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்றாக தங்க நகை உற்பத்தியும் ஒண்றாக உள்ளது. இதற்கிடையில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைக்காமல் வைத்துள்ளது. அதேசமயம் தங்கம் கடத்தலும் அதிகமாகி வருகிறது. எனினும் தங்கத்திற்குமான வரியை குறைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Gold import dip 3% in last 2018 -2019

The country's gold imports dipped about 3 per cent in value terms to $ 32.8 billion during 2018-19, which is expected to keep a lid on the current account deficit. Total imports of the precious metal in 2017-18 had stood at $ 33.7 billion, according to data from the commerce ministry.
Story first published: Sunday, April 21, 2019, 13:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X