வரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு

மும்பை : முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான P&G ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பின் மூலம் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்த வரி ஏய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வரியை குறைக்காமல், நிறுவனமே இதன் மூலம் கூடுதல் லாபமாக 250 கோடி ரூபாயாக பெற்றிருப்பது ஜி.எஸ்.டி லாப கண்கானிப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில், லாப கண்கானிப்பு தலைமை இயக்ககம், பி&ஜி நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் தொடர்பான புத்தகங்களை சோதனையிட்டதில் அதில் ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட போதும் கூட, அதன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களின் விலை குறைத்து விற்காமல் விலை அதிகமாகவே விற்றுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பலன் களை வாடிக்கையாளருக்கு கிடைக்காமல் நிறுவனமே இந்த லாபத்தை எடுத்துக் கொண்டது.

இந்த மோசடி மூலம் பி& ஜி நிறுவனம் 250 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளதாக லாப கட்டுப்பாட்டு தலைமை இயக்குனகரம் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.இதுகுறித்து இந்த நிறுவனம் நாங்கள் எந்தவொரு அரசின் காட்டுபாடுகளுக்கு கடமைபட்டுள்ளோம். ஆக அரசு உடன்படிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி

ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி

ஏரியல், டைடு போன்ற வாஷிங்க் பவுடர்கள், ஹெட் அன்ட் ஷோல்டர், பேண்டீன் சாம்பு வகைகள் மற்றும் காஸ்மெடிக் பொருட்களான ஒலே, சேவிங்க் கீரிம் ஜில்லட், மற்றும் டெண்டல் பொருளான ஒரல்-பி, ஆம்பி பியூர், மற்றும் பேம்பர்ஸ் மற்றும் விக்ஸ், சானிடரி நாப்கின்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் பி&ஜிக்கு உற்பத்தி செய்கிறது.

லாபத்தை மக்களுக்கு கொடுப்பதில் உறுதி

லாபத்தை மக்களுக்கு கொடுப்பதில் உறுதி

இது குறித்து பி&ஜி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் , நுகர்வோருக்கு ஜி.எஸ்.டி மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தை நிறைவேற்றுவதில் பி& ஜி உறிதியாக உள்ளது. இந்த நிலையில் நுகர்வோர், கடைக்காரர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாஸ் மீடியாவின் மூலம் விளம்பரங்கள் மூலம் நிறுவனம் நிகர ஆதாயத்தை கடந்து விட்டது.

ஜி.எஸ்.டி வரி 178 பொருட்களுக்கு குறைப்பு

ஜி.எஸ்.டி வரி 178 பொருட்களுக்கு குறைப்பு

கடந்த நவம்பர் 15,2017-ம் வருடம் ஜி.எஸ்.டி கவுன்சில் மொத்தம் 178 பொருட்களுக்கான சேவை வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பானது குறிப்பாக ஷாம்பு, தூள், ஒப்பனை பொருட்கள் மற்றும் டெண்டல் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

புகார் அளிக்கப்பட்டால் சோதனை செய்ய அதிகாரம்

புகார் அளிக்கப்பட்டால் சோதனை செய்ய அதிகாரம்

இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடமிருந்து விலை அதிகரிப்பு சம்பந்தமாக ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், லாபக் கட்டுப்பாட்டு வாரியம் இதன் மூலம் எந்தவொரு நிறுவனத்தையும் சோதனையிட்டு அதன் அறிக்கையை சமர்பிக்க அதிகாரம் உண்டு. இவ்வாறு நடந்த சோதனையில் தவறு நடந்தது என நிரூபிக்கப்பட்டால், அந்த லாப தொகையை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்பதே விதி. அதேசமயம் வாடிக்கையாளர்களை அடையாளம் காண முடியாவிட்டால் அந்த கூடுதல் லாபத்தை, மத்திய மற்றும் மா நில நுகர்வோர் சேம நல மையத்துக்கு சென்றுவிடும்.

தொடர் வரி ஏய்ப்பு

தொடர் வரி ஏய்ப்பு

இப்படியொரு ஏய்ப்பு நடப்பு நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த டிசம்பர் 2018ல் எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹெச்.யு.எல் நிறுவனம் இதேபோல் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய லாபமான 535 கோடி ரூபாயை நிறுவனமே எடுத்துக் கொண்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+