புலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..! பீடு நடை போட்ட நிஃப்டி..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,672 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 39,054 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,564-க்கு நிறைவடைந்தது.

இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 108 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அடுத்தடுத்து ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், மொத்த கணிப்புகளையும் சிதைத்து 490 புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம் கண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 22, 2019 அன்ரு ஒரே நாளில் 493 புள்ளிகள் இறக்கம் கண்டது. அதை இன்று ஒரே நாளில் 490 புள்ளிகள் ஏற்றம் கண்டு சரி கட்டிவிட்டது. மிக முக்கியமாக சென்செக்ஸ் தன் 39,000 என்கிற மாய எண்ணைக் கடந்திருக்கிறது.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,601 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,726 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,575 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக இன்ரு ஒரே நாளீல் 150 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 06 பங்குகள் இறக்கத்திலும், 24 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,654 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,253 பங்குகள் ஏற்றத்திலும், 1,250 பங்குகள் இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,654 பங்குகளில் 42 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 95 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 08 பங்குகள் இறக்கத்திலும், 42 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ஆட்டோமொபைல், பன்னாட்டு நிறுவனம் போன்ற இண்டெக்ஸ் சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து இண்டெக்ஸ் சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுஸிகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்ற & இறக்கப் பங்குகள்

ஏற்ற & இறக்கப் பங்குகள்

அல்ட்ராடெக் சிமெண்ட், பாரத் பெட்ரோலியம், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், ஓ என் ஜி சி போன்ற பங்குகள் சராசரியாக 3 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோடார்ஸ், ஹீரோ மோட்டோ கார்பரேஷன், கோல் இந்தியா, சிப்லா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 0.50 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 18, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -1.32% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.64%, பிரான்சின் சி ஏ சி -0.34% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.48% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதிக்கு பாதி இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் 0.27% ஏற்றத்திலும், தென் கொரியாவின் கோச்பி இண்டெக்ஸ் -0.88% இறக்கத்திலும் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.87 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அந்நிய நேரடி முதலீடு குறைவது, அதிகப்படியான இறக்குமதி எல்லாமே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை இறக்கிக் கொண்டே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+