மத்திய மறைமுக வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வரும் ஜூன் 21ஆம் தேதிக்கு பின்பு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால்..
டெல்லி: தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அதன் பின்னர் சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில்லை உருவாக்க முடியாது என்று மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு பரிமாற்றங்களுக்கும் மாநிலத்திற்கு உள்ளே ரூ.50000 வரையிலான சரக்கு பரிமாற்றத்திற்கும் இ-வே பில் கண்டிப்பாக அவசியமாகும்.
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து நடைபெற்று வந்த வரி ஏய்ப்பு முறைகேடுகளை தடுக்கும் விதத்தில் மத்திய மறைமுக வரிகள் ஆணையம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்தும் ஜிஎஸ்டி வட்டத்தில்
வாட் வரிமுறையில் நடைபெற்று வந்த வரி மோசடிகளை முற்றிலும் தடுக்கும் விதமாகவே சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தவிர்த்து அனைத்து பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
சரக்குகள் தேக்கம்
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், சரக்குகளை மாநிலத்திற்கு உள்ளேயும், பிற மாநிலங்களுக்கும் அனுப்ப தேவையான ஆவணங்களைப் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட புதிதில் சரக்க பரிமாற்றத்தில் மிகப்பெரிய அளவில் தேக்கமும் குழப்பமும் ஏற்பட்டது.
இ-வே பில் அறிமுகம்
வர்த்தர்கள் மற்றும் தொழில் துறையினரின் குழப்பத்தை போக்கும் வகையில் சரக்கு பரிமாற்றம் தொடர்பாக ஜிஎஸ்டி ஆணையமும் அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநிலங்களுக்கு இடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலான சரக்கு பரிமாற்றம் செய்ய உதவும் இ-வே பில் (e-way bill) முறை அமலுக்கு வந்தது. பின்னர் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளே 50 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலான சரக்குகளை அனுப்புவதற்கு இ-வே பில் கட்டாயம் என்று அறிவித்தது.
50 ஆயிரத்துக் மேல் கட்டாயம்
இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து மாநிலத்திற்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் சரக்கு பரிமாற்றம் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. மாநிலத்திற்கு உள்ளே 50 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலான சரக்குகளை அனுப்பும்போது இடையில் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் சோதனை செய்தால் இ-வே பில் ஆவணத்தை காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
மாதாந்திர ரிட்டன் கட்டாயம்
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து வாட் வரிமுறையில் இருந்ததைப்போலவே மாதாந்திர ரிட்டன்களை அடுத்துவரும் மாதத்தில் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும், காம்போசிசன் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள் காலாண்டுக்கு ஒரு முறை என அடுத்துவரும் மாதத்தில் 18ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
சரக்கு பரிமாற்றத்தில் முறைகேடு
இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து சரக்கு பரிமாற்றம் தடையில்லாமல் நடைபெற்றாலும், அதிலும் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் ஜிஎஸ்டி ஆணையத்திற்கு பொறி தட்டியது. அதற்கு ஏற்றார் போல், மாநிலத்திற்கு உள்ளே சரக்குகளை பரிமாற்றம் செய்யும்போது பெரும்பாலான தொழில் துறையினர் இ-வே பில் உருவாக்குவதை தவிர்ப்பதற்காகவே 50ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலான சரக்குகளை வேண்டுமென்றோ குறைத்து மதிப்பிட்டு அனுப்புவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
போலி பில்கள் உருவாக்கம்
பக்கம் நடந்தவண்ணம் இருக்க, கூடவே தொழில் துறையினரும் வர்த்தகர்களும், போலியாக பில்களை தயாரித்து பொருட்களை விற்பனை செய்வதும் ஜிஎஸ்டி ஆணையத்திற்கு தெரியவந்தது. இதன்மூலம் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வரி ஏய்ப்பு நடைபெற்றது தெரியவந்தது. மேலும் பெரும்பாலான வர்த்தகர்கள் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்துவதும் கண்டறியப்பட்டது.
மறைமுக வரிகள் ஆணையம்
இ-வே பில் முறைகேடு மற்றும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதில் காலம் தாழ்த்துவதால் ஏற்படும் வரி இழப்பு என இரண்டையும் முற்றிலும் களைவதற்காக தற்போது மத்திய மறைமுக வரிகள் ஆணையம் (Central Board of Indirect Taxes and Customs) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இ-வே பில் உருவாக்க முடியாது
மத்திய மறைமுக வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வரும் ஜூன் 21ஆம் தேதிக்கு பின்பு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அதன் பின்னர், சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில் (e-way bill) உருவாக்க முடியாது, என்று அறிவித்துள்ளது.
காம்போசிசன் திட்டம்
காம்போசிஸன் திட்டத்தில் ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்கள் காலாண்டுக்கு ஒரு முறை ரிட்டன் தாக்கல் செய்வதால், இனிமேல் தொடர்ந்து இரண்டு காலாண்டு ரிட்டன்களை தாக்கல் செய்யாவிட்டால் அவர்களாலும் இ-வே பில்லை உருவாக்க முடியாது என்றும் சிபிஐசி (CBIC) அறிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஜிஎஸ்டி இணையதளம் மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், தொடர்ச்சியாக இரண்டு ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாவிட்டால் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரால் இ-வே பில்லை உருவாக்கமுடியாத வகையில் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.15,278 கோடி வரி ஏய்ப்பு
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கையால் வரி ஏய்ப்பு நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் பருவத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்ததாக சுமார் 3626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் ரூ.15,278 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மோசடியை தடுக்க தீவிரம்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி ஆணையம் வரி ஏய்ப்பை தடுத்து வரி வசூலை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இ-வே பில் தடை அறிவிப்பாகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications