39000-க்கு வலு சேர்க்கும் Sensex..! 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,865 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஒரு மாதிரியாக ஏற்றம் கண்டு 39,067 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 38,730-க்கு நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.

இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 135 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அடுத்தடுத்து ஏற்றம் கண்டுடாலும், வர்த்தக நேரத்தின் கடைசி சில மணி நேரங்களில் ஏற்றம் அதிகரித்து 336 புள்ளிகள் ஒரே நாளில் அதிகரித்தது.

கடந்த ஏப்ரல் 22, 2019 அன்று ஒரே நாளில் 493 புள்ளிகள் இறக்கம் கண்டது. அதை ஏப்ரல் 24, 2019 அன்று ஒரே நாளில் 490 புள்ளிகள் ஏற்றம் கண்டது, ஏப்ரல் 25, 2019-ல் ஒரே நாளில் 323 புள்ளிகள் இறக்கம் கண்டது, ஏப்ரல் 26, 2019 ஒரே நாளில் 336 புள்ளிகள் ஏற்றக் கண்டது என சென்செக்ஸ் தன் வலுவான சப்போர்ட் மற்றும் ரெசிஸ்என்ஸுக்குள்ளேயே அல்லாடிக் கொண்டிருக்கிறது.

கடைசி முதலீடுகள்

கடைசி முதலீடுகள்

நேற்று எப்படிமதியம் 2.30 மணிக்கு மேல் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் பயந்து சந்தையில் இருந்து தங்கள் பணத்தை வெளியே எடுத்தார்களோ, அதே போல் இன்றும் மதியம் 2.00 மணிக்கு மேல் தான் நிறைய பேர் தங்கள் பணத்தை சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதனால் தான் மதியம் 2 மணி வரை 11,690-ஐ தாண்டாத நிஃப்டி 2 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கி 11,754-ல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

செய்திகள்

செய்திகள்

இன்று காலாண்டு முடிவ்கள் வெளியான ஹெச் சிஎல், ஹெச் டி எஃப் சி லைஃப் இன்ஷூரன்ஸ், எம் சி எக்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், நிஃப்டி ஃப்யூச்சர்களில் அதிகம் ரோல் ஓவர் ஆவது என எல்லா செய்திகளும் பாசிட்டிவ்வாகவே வந்து கொண்டிருந்தன. இருந்த போதிலும் செய்திகளின் மொமெண்டம் மதியத்துக்கு மேல் தான் சந்தைகலில் எதிரொலிக்கத் தொடங்கின.

எப்போது மாறும் டிரெண்டு

எப்போது மாறும் டிரெண்டு

கடந்த ஏப்ரல் 11, 2019 செய்தியில், சென்செக்ஸ் ஒரு வலுவான சப்போர்ட் (38,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (39,000) புள்ளிகளுக்கு மத்தியில் ஃப்ளாட்டாக கடந்த எட்டு வர்த்தக நாட்கள் வர்த்தகமாகி வந்ததையும் சொல்லி இருந்தோம். மீண்டும் 39,000 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸ் என்பதை ஏற்றத்தில் மீண்டும் காட்டி இருக்கிறது.

39000

39000

அதே போல கடந்த ஏப்ரல் 15, 2019 அன்றே, சென்செக்ஸ் வரலாற்றில் 39,000 புள்ளிகளை ஒரு மாய எண் எனச் சொல்லி இருந்தோம். இந்த 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் தன் வாழ் நாளிலேயே நான்கு முறை மட்டுமே குளோஸ் ஆகி இருக்கிறது. எனவே நாளையும் இந்த புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து முதலில் ஏற்றத்துக்கு வலு சேர்க்கட்டும். அதன் பின் வலுவான ஏற்றத்தைப் பற்றி யோசிக்கலாம். என ஏப்ரல் 25, 2019 அன்றைய செய்திகளில் சொல்லி இருந்தோம். சென்செக்ஸின் வாராந்திர சார்ட்டில் இரண்டு முறை மட்டுமே சென்செக்ஸ் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. எனவே இன்னமும் 39,000 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸ் தான்.

சென்செக்ஸ் ரெசிஸ்டென்ஸ்

சென்செக்ஸ் ரெசிஸ்டென்ஸ்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸுக்கு முதல் ரெசிஸ்டென்ஸாக 39,165 லெவல்கள் இருக்கும். அதை உடைத்து மேலே போனால் 39,350 புள்ளிகள் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும், திங்கட்கிழமை ஒரே நாளில் அதற்கு மேல் போக வாய்ப்பில்லை. அப்படிப் போனால் 39,461-ஐ உச்சகட்ட இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் சப்போர்ட்

சென்செக்ஸ் சப்போர்ட்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸின் நித்திய கண்டப் புள்ளியான 39,000 த்தைக் கடந்து கீழே வந்தால் முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக 38,950 லெவல்கள் இருக்கிறது. அதையும் உடைத்தால் 38,870-ஐ வைத்துக் கொள்ளலாம். அதையும் உடைத்தால் உறுதியாக 38,650-ஐத் தொடலாம்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,683 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,754 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,641 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 12 பங்குகள் இறக்கத்திலும், 18 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,676 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,086 பங்குகள் ஏற்றத்திலும், 1,437 பங்குகள் இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,676 பங்குகளில் 36 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 94 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 16 பங்குகள் இறக்கத்திலும், 33 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ஆட்டோமொஐல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மீடியா, பன்னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் இண்டெக்ஸ் சார்ந்த நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து இண்டெக்ஸ் சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸிகி, யெஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்ற & இறக்கப் பங்குகள்

ஏற்ற & இறக்கப் பங்குகள்

டாடா ஸ்டீல், பாரத் பெட்ரோலியம், கெயில், ஐசிஐசிஐ பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் சராசரியாக 2.6 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, க்ராசிம், டாக்டர் ரெட்டீஸ் லேப்ச், பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 1.10 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 25, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 0.21% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.21%, பிரான்சின் சி ஏ சி 0.12% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.23% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பானின் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங்செங், இந்தோனேசியாவின் ஜகர்தா தவிர மற்ற அனைத்துசந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -1.20% இறக்கத்தில் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.01 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. அதே நேரத்தில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலையும் பேரல் ஒன்றுக்கு 72.01 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. ஆச்சர்யமாக கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் குறைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+