பிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரணாசி: இந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டி இடுகிறார் Narendra modi. தேர்தலில் வேட்பாளராக நிற்க விண்ணப்பங்களை சமர்பிக்கும் போது, வேட்பாளரின் சொத்துப் பிரமாணப் பத்திரங்களையும் சமர்பிப்பார்கள்.

 

அப்படி மோடியும் 2019 மக்களவைத் தேர்தலுக்கு சமர்பித்திருக்கிறார். அதில் கடந்த 2014-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் மோடியின் சொத்து மதிப்பு 52 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரிகிறது. மோடியின் மொத்த சொத்து மதிப்பு 31 மார்ச் 2019 நிலவரப்படி 2.51 கோடி ரூபாயாம்.

இந்த 2.51 கோடி ரூபாயில் 1.41 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களாகவும், 1.10 கோடி ரூபாய் அசையாச் சொத்துக்களாகவும் சொல்லி இருக்கிறாராம். கடந்த 2014-ம் ஆண்டை விட இந்த 2.51 கோடி என்பது, சுமார் 114 சதவிகிதம் அதிகமாம்.

சொத்து மதிப்பு உயர்வு

சொத்து மதிப்பு உயர்வு

கடந்த 2014-ம் ஆண்டில் கொடுத்த சொத்துப் பிரமாண பத்திரத்தில் மோடி, தன் அசையாச் சொத்துக்களின் மதிப்பு 65.91 லட்சம் ரூபாயாகச் சொல்லி இருந்தார். இந்த 2019-ம் ஆண்டில் சமர்பித்த சொத்துப் பத்திரங்களில் தன் அசையாச் சொத்துக்களின் மதிப்பு 1.10 கோடி ரூபாயாகச் சொல்லி இருக்கிறார். மோடியின் வருவாய் சோர்ஸாக தான் வாங்கும் அரசுச் சம்பளத்தையும், தன் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வரும் வட்டி வருமானத்தையுமே சொல்லி இருக்கிறார். அதே போல் மோடிக்கு எந்த வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கடன் இல்லையாம்.

முக்கிய  சொத்துக்கள்

முக்கிய சொத்துக்கள்

அசையும் சொத்து: மார்ச் 31, 2019 நிலவரப்படி, கையில் ரொக்கமாக 38,750 ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் 4,143 ரூபாய் பாக்கித் தொகை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 1.27 கோடி ரூபாய்க்கு ஃபிக்ஸட் டெபாசிட் அவ்வளவு தான் மோடியின் முக்கியமான அசையும் சொத்துக்களாம்.

அசையாச் சொத்துக்கள்: காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டை மட்டுமே தன் அசையாச் சொத்தாக கணக்கு காட்டி இருக்கிறார். அதன் மதிப்பு மட்டுமே 1.10 கோடி ரூபாயாம். ஆக மொத்தம் 2.51 கோடி ரூபாயாம்.

முதலீடுகள்
 

முதலீடுகள்

கையில் 38,750 ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் 4,143 ரூபாய் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1.27 கோடி ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் போக சில முதலீடுகளையும் செய்திருக்கிறார் மோடி. கடன் பத்திரங்களில் 20,000 ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இன்ஷூரன்ஸ் திட்டங்களில் 1.90 லட்சம் ரூபாய் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்களில் 7.61 லட்சம் ரூபாய் மதிப்புக்கு முதலீடு செய்திருக்கிறார். ஆனால் மோடியும் சில முதலீடுகளில் சரிந்திருக்கிறார். தெரியுமா..?

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

ஆம், மோடி தங்கத்தில் செய்த முதலீட்டு மதிப்புகள் சரிந்திருக்கின்றன. நான்கு தங்க மோதிரத்தின் மதிப்பாக 1.13 லட்சம் ரூபாய் சொல்லி இருக்கிறார். இந்த நான்கு தங்க மோதிரத்தின் எடை சுமார் 45 கிராம் வருமாம். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது சமர்பித்த சொத்துப் பிரமாண பத்திரங்களில் மோடி வைத்திருந்த, இதே 45 கிராம் தங்க மோதிரத்துக்கு 1.35 லட்சம் ரூபாய் மதிப்பிட்டு இருந்தார்கள். ஆக கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கத்தில் இருந்து லாபமே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த நஷ்டத்தை மோடியும் அனுபவித்திருக்கிறார். ஆக தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள் மக்களே.!

இதெல்லாம் போக இதர அசையும் சொத்துக்களாக 2.26 லட்சம் ரூபாயையும் சொல்லி இருக்கிறாராம். மோடி தன் அதிகபட்ச கல்வித் தகுதியாக எம் ஏ படித்திருக்கிறாராம். எம் ஏ படிப்பை அலஹாபாத்தில் உள்ள, குஜராத் பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு படித்து முடித்திருக்கிறாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

prime minister narendra modi lost 17 percent of his gold investment in last 5 years

prime minister narendra modi lost 17 percent of his gold investment in last 5 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X