தூண்டிலில் சிக்கிய மீன்.. ஜி.எஸ்.டி பயனை வாடிக்கையாளருக்கு கொடுக்காத Tata Starbucks

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் (Tata Starbucks) ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்காமல் நிறுவனமே களவாடியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இதன் மூலம் 4.51 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகவும் மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகமான, டி.ஜி.ஏ.பி தெரிவித்துள்ளது.

 

ஜி.எஸ்.டி கவுன்சில் கடந்த 2017 நவம்பர் -15ல், உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை, 18 சதவிகிதத்தில் இருந்து, 5 சதவிகிதமாக குறைத்தது. ஆனால் இந்த வரிப் பயனை டாடா ஸ்டார்பக்ஸ் நுகர்வோருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் வரி குறைப்புக்கு முன் இருந்த உணவுப் பொருட்களின் அடிப்படை விலையை, வரி குறைப்பிற்கு பின் அதிகரித்தே உள்ளது. இதனால் ஜி.எஸ்.டி குறைந்தும் உணவுப் பொருட்கள் விலை குறைக்கப்படாமலேயே உள்ளது. இதனால் தற்போதும் கூட பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்.. எஸ்.பி.ஐ வட்டி விகிதத்தில் மாற்றம்.. என்ஜாய்

வரி ஏய்ப்பின் மூலம் ரூ.4.51 கோடி லாபம்

வரி ஏய்ப்பின் மூலம் ரூ.4.51 கோடி லாபம்

இப்புகார் குறித்து விசாரித்த மிகைலாப தடுப்பு தலைமை இயக்குனரகம், டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உணவுப் பொருட்கள் விலையை குறைக்காமல் இதுவரை 4.51 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தினை நிறுவனமே எடுத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையை தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்திடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு அளிக்கப்படும்

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு அளிக்கப்படும்

அந்த நிறுவனத்திடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டால், அந்த அபராததிலிருந்து பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு அளிக்கப்படும் என்றும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நுகர்வோர்களை அறியமுடியாத பட்சத்தில் நுகர்வோர் நல நிதியத்தில், இந்த தொகை சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளது.

குற்றச்சாட்டை டாடா ஸ்டார்பக்ஸ் மறுப்பு
 

குற்றச்சாட்டை டாடா ஸ்டார்பக்ஸ் மறுப்பு

ஆனால் இதற்கு இடையே தன் மீதான குற்றச்சாட்டை டாடா ஸ்டார்பக்ஸ் மறுத்துள்ளதாம். பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். அதிலும் எங்கள் நிறுவனத்தில் உள் நாட்டு விதிமுறைகள் கட்டுப்பாடுகள் மிகச் சிறந்த முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த நிறுவனம் பல முக்கிய நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல மெட்ரோ நகரங்களில் மொத்தம் 140 விற்பனையகங்கள் உள்ளன.

உள்ளீட்டு வரியை வைத்து சமாளித்தனர்

உள்ளீட்டு வரியை வைத்து சமாளித்தனர்

மேலும் அரசு வரியை அதிகரித்திருந்தாலும் உள்ளீட்டு வரி திரும்ப பெறுவது அனுமடிக்கப்பட்டிருந்தது. ஆகையால் நிறுவனங்கள் இந்த உள்ளீட்டு வரியை வைத்து வரி அதிகமாக இருந்தாலும் சமாளித்து வந்தனர். ஆனால் தற்போது இந்த உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதில் சிக்கல் நிலவி வரும் நிலையில், நிறுவனங்கல் வட்டி விகிதற்திற்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றனர். இதனாலே இது போன்ற குழப்பங்கள் நீடிக்கின்றன.

ஏற்கனவே ஜீபிலியன்ட் புட்வொர்க்ஸ்

ஏற்கனவே ஜீபிலியன்ட் புட்வொர்க்ஸ்

இது குறித்து மிகைலாப தடுப்பு தலைமை இயக்குனரகம் கூறியுள்ளதில், ஏற்கனவே டாமினோஸ் பீட்சா தயாரிக்கும் நிறுவனமான ஜீபிலியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம் வரி குறைப்பின் பலனை அளிக்கவில்லை. இந்த நிறுவனம் ரூ.41.41 கோடி அலவுக்கு வரிசலுகை பலனை அளிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST investigation arm finds Tata Starbucks guilty of profiteering Rs 4.51cr

The GST investigative arm has found Tata Starbucks guilty of profiteering to the tune of Rs 4.51 crore by not reducing prices of coffee despite a cut in the rate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X