டெல்லி: கடந்த ஜூலை 01, 2017 அன்று இந்தியப் பொருளாதாரத்தில் இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினார் மோடி. அதன் பெயர் சரக்கு மற்றும் சேவை வரி (GST).
இந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) எப்போதுமே மாநில அரசுக்கு சாதகமாக இருக்காது. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை எப்போதுமே போக்காது.
மேலும் மேலும் மாநில அரசுகளை நிதிப் பற்றாக்குறையிலேயே சரக்கு மற்றும் சேவை வரி (GST) நிறுத்தும் எனக் குற்றம் சாட்டி இருக்கிறது எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Rating) நிறுவனம்.
மத்திய அரசுக்கு சாதகம்
எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Rating) கணிப்புப்படி இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான சட்ட ரீதியிலான அமைப்புகள் ஒரு விதமாக வலுவடைந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. ஆனால் நிதிக் கட்டமைப்பு ரீதியில் பற்றாக்குறை பரவலாக எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. அவ்வளவு ஏன் மத்திய அரசிலும் கூட நிதிப் பற்றாக்குறை பார்க்க முடிகிறது, எனச் சொல்லி இருக்கிறார்கள்.
வரி கட்டமைப்பு
எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Rating) நிறுவனத்தில் கடன் அனலிஸ்ட் யீஃ பார்ன் புஹா (Yee Farn Puha) "இந்திய மாநிலங்களின் பொது நிதி அமைப்பு ஒரு பார்வை (Public Finance System Overview: Indian States)" என்கிற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதில் 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கான வரிக் கட்டமைப்புகளில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
நடக்கவில்லை
இதனால் இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, மாநிலங்களுக்கான வரி வருமானத்தையும் அதிகப்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி (GST)-ல் சொல்லப்பட்டது போல மாநில அரசுகளுக்கு வரி வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை. இன்று வரை மாநில அரசுகள் மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறை உடன் தான், தங்கள் அரசை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உட்பட.
முதலீடு + செலவு
ஒரு பக்கம் தங்கள் மாநிலத்தை முன்னேற்ற தேவையான முதலீடுகளைச் செய்து வருகிறார்கள். மறு பக்கம் இலவச திட்டங்கள், ஒரு நபருக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை என, பல திட்டங்கள் பெயரில், பண உதவித் தொகையினைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது எல்லாமே மாநில அரசின் கஜானாக்களை மேலும் பதம் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை. இதை எல்லாம் விட இன்று வரை இந்தியாவில் காகிதத்தில் இருக்கும் சட்ட திட்டங்களை செயல்படுத்துவதில், இந்தியா (மத்திய மற்றும் மாநில அரசுகள்) பார்டர் பாஸ் கூட ஆகவில்லை, சப் பார் (Sub Par) லெவல் தான் என்கிறார் யீஃபார்ன்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications