மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,244 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,789 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 37,793-க்கு நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 487 புள்ளிகள் சரிந்திருக்கிறது.
அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,478 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,359 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,497 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 138 புள்ளிகள் சரிந்திருக்கிறது

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 03 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 40 பங்குகள் இறக்கத்திலும், 10 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
பி.எஸ்.இ-யில் 2,636 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 634 பங்குகள் ஏற்றத்திலும், 1,857 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 1,857 பங்குகளில் 28 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 290 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ன்ரு நிஃப்டியில் அனைத்து துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. பி எஸ் இ-யிலும் அதே போல எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

யூபிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பாரத் பெட்ரோலியம், டைடன் கம்பெனி, கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.50 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. குறிப்பாக பார்தி இன்ஃப்ராடெல் 10% இறக்கத்தில் வர்த்தகாமாயின.
மே 08, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் -0.18% வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.11%, பிரான்சின் சி ஏ சி 0.22% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 054% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்றும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி -1.46 %, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -1.12%, ஹாங்காங்கின் ஹேங்செங் -1.23 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.71 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications