மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 37,747 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,747 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 37,789-க்கு நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 230 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.
அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,322 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,301 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,359 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 57 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 19 பங்குகள் இறக்கத்திலும், 11 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 23 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,623 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,034 பங்குகள் ஏற்றத்திலும், 1,437 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,623 பங்குகளில் 19 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 229 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டியில் ஆட்டோமொபைல், எஃப் எம் சி ஜி, ஐடி, மீடியா, பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி போன்ற துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ், யெஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
ஜி எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், பாரத் பெட்ரோலியம், பார்த்தி ஏர்டெல், கோல் இந்தியா, என்டிபிசி போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.50 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
மே 08, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் -0.26% வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று மே 09, 2019-ல் ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஸ்.இ -0.40%, பிரான்சின் சி ஏ சி -1.29% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -0.90% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்றும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி -3.04 % இறக்கத்தில் வர்த்தகமாயின. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கின் ஹேங்செங் இண்டெக்ஸ் -2.39 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.94 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. அனேகமாக நாளை 70-ஐ கடக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications