டெல்லி : இந்திய அரசு டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் QR கோடு (Quick Response Code) முறையை அனைத்து கடைகளிலும் ஷாப்பிங் மையங்களிலும் QR கோடு முறையை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசு முயன்று வருகிறதாம். மேலும் இந்த QR கோடு அடிப்படையிலான முறையில் பண பரிவர்த்தனை செய்யவே அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
இதோடு மிக வேகமாக மின்னனு பரிவர்த்தனையை செய்யும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை செயல்பாட்டில் நடைமுறைக்கு கொண்டு வரவும், இது குறித்த திட்டம் கூடிய விரைவில் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு GST நன்மைகளை கருத்தில் கொண்டு தகுதிவாய்ந்த இந்த முறையை நுகர்வோர் ஏற்றுக்கொள்வதன் மூலம் கடை உரிமையாளர்கள் பயன் பெறுவர் என்றும் கூறியுள்ளது அரசு.
மேலும் கடை உரிமையாளருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இவ்வாறு QR கோடு டிஜிட்டல் பேமென்ட்முறையையும் ஊக்குவிப்பதன் மூலம், நுகர்வோர் வகையில் இவர்களுக்கு லாபமே என்றும் கூறியுள்ளது. மேலும் இது குறித்த அறிக்கையை ஜி.எஸ்.டி கவுன்சில் தேர்தலுக்கு முன்பே அரசிடம் கொடுத்திருந்ததாம். ஆனால் இதுகுறித்து இன்னும் பரீசிலிக்கப்படாத நிலையில், இது குறித்த முழுமையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சீனாவில் கடைபிடிக்கப்படுகிறது
இது போன்ற கியூ.ஆர் கோடு முறைகள் ஏற்கனவே சீனா போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல நன்மைகளை பெற்றுள்ளன. குறிப்பாக பாரம் பரியமாக லாபமும் சம்பாதித்து வருகின்றன. இதோடு இந்த பார் கோடு முறையும் டிஜிட்டல் பேமென்ட் முறையும் பணியாளர்களின் வேலைசுமையையும் குறைக்கும் என்றும் கருதப்படுகிறது.
பல மாதங்களாக ஆலோசனை
மேலும் பல மாதங்காளாகவே ஜி.எஸ்.டி கவுன்சில் இது குறித்து ஆலோசித்தும் வருகிறதாம். குறிப்பாக ஜி.எஸ்.டியை அதிகரிப்பதற்காகவும், ஜி.எஸ்.டி நுகர்வோருக்கு அதன் பலனை திருப்பிக் கொடுக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருதுகிறதாம்.
ஜி.எஸ்.டியை வலுபடுத்த முடியும்
குறிப்பாக டிஜிட்டல் பேமென்ட் முறையை அதிகப்படுத்துவதன் மூலம் ஜி.எஸ்.டியையும் வலுபடுத்த முடியும் என்று அரசு ஒரு புறம் திட்டமிட்டாலும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இது கிராமப்புற மக்களுக்கு எதிராக இருக்கின்றன என ஒரு புறம் வாதிடுகின்றனவாம்.
தேர்தல் முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்படலாம்
எனினும் அரசு இது குறித்து ஒரு டிஜிட்டல் வர்த்தக முறையை தீர்மானித்துள்ளதாகவும், இது மக்களைத் தேர்தல் முடிவுக்கு பின் செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி உண்மையிலேயே இந்த QR கோடு மூலம் லாபம் இருக்கா? இதன் பின்னனி தான் கொஞ்சம் தெரிஞ்சு கொள்வோமே?
ஜப்பான் தான் அறிமுகம்
முதன் முதலில் ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பொரேஷன் உருவாக்கியதுதான் க்யூ.ஆர் கோடு முறை. இதன் மூலம் உடனடியாக தகவல் வழிகாட்டுதலை அறிந்து முடிவுகளை கொள்ள முடியுமாம்.
க்யூ.ஆர் கோடுகள் விரைவில் தகவல்களை காட்டும்
இந்த க்யூ.ஆர் கோடு இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறுசிறு உள் சதுரங்கள். நமக்கு வேண்டிய தகவல்களை இப்படிக் கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடுவதுதான் க்யூ.ஆர் கோடு ஸ்பெஷல். இந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் என்ன தகவல் உள்ளது என்பதைக் நமக்கு காட்டிவிடும்.
கியூ.ஆர் கோடு முறை அனைத்து துறைகளிலும் உண்டு
இந்த முறை முன்னர் ஆட்டோமொபைல் துறைக்காக என்று உருவாக்கப்பட்டாலும் நாளடைவில் பல்வேறு துறைகளுக்கும் இந்த க்யூ.ஆர் கோடு நகரத் தொடங்கியது. கேமரா வைத்த செல்பேசிகள் வந்த பிறகு, க்யூ.ஆர் கோடு படிப்பதற்கு என்று பிரத்தியேக ஸ்கேனர்கள்கூட தேவையில்லாமல் போய்விட்டன.
தகவலை உங்கள் திரையில் காட்டிவிடும்.
க்யூ.ஆர் கோடில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எளிதாக ஒரு க்யூ.ஆர் கோடில் கொடுத்து விடலாம். க்யூ.ஆர் கோடு இன்று பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
விசா, மாஸ்ட்ரோ, ரூபே போன்ற கார்டுகளில் செயல்படும்
மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் க்யூ.ஆர் ஆனது விசா, மாஸ்ட்ரோ, ரூபே போன்ற கார்டுகளில் செயல்படும் வகையில் வந்துள்ளது. இந்த கோடினை விற்பனையாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் வகையில் உபயோகிக்கும் பொழுது இருமுறை சரிபார்ப்பு வழிகளிலே பணம் செலுத்தலாம். எனவே பாதுகாப்பான முறையில் விற்பனை மேற்கொள்ள இயலும் என்கிறார்கள் நிபுனர்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications