சென்னை: தங்கம் விலை சென்னையில் இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.296 அதிகரித்து விற்பனையாகி வருவதால் நகை வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 91க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல் ஒரு சவரன் தங்கம் (8 கிராம்) ரூ.296 அதிகரித்து, ரூ.24 ஆயிரத்து 728க்கு விற்பனையாகிறது.
24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ. 3 ஆயிரத்து 205க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 43 அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 242க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 8 கிராம் சுத்த தங்கம் 296 அதிகரித்து ரூ.25 ஆயிரத்து 936க்கு விற்பனையாகிறது.
கடந்த மே 5ம் தேதி 24 ஆயிரத்து 96 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் இப்போது 24 ஆயிரத்து 728க்கு விற்பனையாகிறது.
அமெரிக்கா ஈரான் இடையே பிரச்னை, வளைகுடா பதற்றம், உலக வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பால் அதன் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications