பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒடிசாவில் பானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களுக்கு மட்டும் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலுக்கான காலக்கெடு நடப்பு மாதம் 20ஆம் தேதியில் இருந்து வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அதே போல் 1.5 கோடி ரூபாய்க்கு கூடுதலான விற்று முதல் கொண்ட வர்த்தகர்களும் தங்களின் விற்பனைக்கான இறுதி ஜிஎஸ்டிஆர்-1 ரிட்டனை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூன் 10ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பானி புயல் பாதிப்பு : ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு

ஜிஎஸ்டியில் பதிவு செய்த அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் தங்களின் மாதாந்திர விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-1 (GSTR-1) மற்றும் மற்றும் நிகர விற்பனைக்கான வரி செலுத்தும் ஜிஎஸ்டிஆர்-3பி (GSTR-3B)ஆகிய படிவங்களை பிரதி மாதமும் 10ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்திய மாதாந்திர விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தையும், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி ஆகியவற்றை குறிப்பிடும் ஜிஎஸ்டிஆர்-3பி ஆகிய படிவங்களை நடப்பு மாதத்தின் 10 மற்றும் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் ஒரிசாவில் கரையைக் கடந்தபோது அந்த மாநிலமே உருக்குலைந்து போனது. புயல் தாக்கியதால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதை சரி செய்வதற்கு சில நாட்கள் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் விற்பனை 22% குறைந்தது.. எதிரொலியாக பங்கு சந்தையிலும் பங்கு விலை 3% வீழ்ச்சி

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை அடுத்து அந்த மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு சலுகையாக மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள, ஒடிசா மாநிலத்தின் அங்குள், பாலசோர், பாத்ரக், கட்டாக், தேன்கனல், காஞ்சம், ஜகத்சிங்புர், ஜஜ்புர், கேந்திரபர, கியோஞ்சர், கோர்தா, மயுர்பஞ்ச், நாயகர்க் மற்றும் பூரி ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள சுமார் 1.50 கோடி ரூபாய்க்கும் கூடுதலான விற்று முதல் (Turn Over) உடைய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்களின் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர விற்பனை மற்றும் இறுதி விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை வரும் ஜூன் 10ஆம் தேதி வரையிலும் தாக்கல் செய்து கொள்ளலாம் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் (CBIC) அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

அதே போல் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு போக நிகர வரி செலுத்துவதற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை வரும் ஜூன் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் சிபிஐசி அறிவித்துள்ளது.

நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்திலேயே ஜிஎஸ்டி மாதாந்திர வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 1.13 லட்சம் கோடியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST April return filing date extended to June 20

The due date for GSTR-1 filing date extended to June 10 and GSTR-3B filing date postponed to June 20. The deadline extended for some 14 district in Odisha.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X