டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது அந்த வகையில் அனைத்து கடைகளும் க்யூ ஆர் குறியீட்டை பயன்படுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீப காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மார்ச் மாதம் மொபைல் வாலெட் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் 12% அதிகரித்துள்ளது.

இதனை கவனித்த மத்திய அரசு தனது லட்சியங்களில் ஒன்றான பணமில்லா பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க திட்டம் தீட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் யூபிஐ பண பரிவர்த்தனை சேவை கீழ் வழங்கப்படும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கினால், பணமில்லா பரிவர்த்தனையின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என மத்திய அரசு கணித்துள்ளது.
இது தொடர்பான வரைவறிக்கைக்கு GST கவுன்சில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. க்யூ ஆர் குறியீடு மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும்.
மேலும் அனைத்து பரிவர்த்தனைகளையுமே கணக்கிற்குள் கொண்டு வந்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. மேலும் QR குறியீடு சேவையை அனைத்து கடைகளிலும் கட்டாயமாக்கும் போது, கூடுதல் சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
க்யூ ஆர் குறியீடு சேவை மூலமாகப் பண பரிவர்த்தனை செய்ய இயந்திரங்கள் தேவையில்லை. எளிதாக ஒரு பேப்பரில் க்யூ ஆர் குறியீட்டை அச்சிட்டு கடையில் ஒட்டினாலே போதும். வாடிக்கையாளர்களிடமிருந்து எளிதாகப் பணத்தைப் பெறலாம். சில்லறை தட்டுப்பாடும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications