டெல்லி : ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 54 சதவிகிதம் உயர்ந்து 3.97 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை விரிவுபடுத்தி, நடப்பு கணக்கு பற்றாக்குறையை (CAD) அதிகரிக்குமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் நுகர்வில் உலகில் 2வது பெரிய நாடான இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா? என்றால் இல்லை என்றே அடித்து சொல்லலாம். என்னதான் அரசு வரியை அதிகரித்தாலும், நாங்கள் வாங்குவதை வாங்கி கொண்டேதான் இருப்போம். என்பது போலத்தான் தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி 54 சதவிகிதம் உயர்ந்து 3.97 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை விரிவுபடுத்தி, நடப்பு கணக்கு பற்றாக்குறையை (CAD) மேலும் அதிகரிக்குமோ என்ற கவலையை தூண்டும் வகையில் உள்ளது.
2018-ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி குறைவு.
இதே கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள பீரிசியஸ் உலோக பொருட்களை மட்டும் இறக்குமதி செய்யப்பட்டன.
அதிகரிக்கும் வர்த்தக பற்றாக்குறை
இவ்வாறு அதிகரித்துள்ள தங்க இறக்குமதியால், ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 15.33 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அதிகரித்திருக்கும் அந்நிய செலாவணி இருப்பு
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் கடந்த ஆண்டின் 2.1 சதவிகிதமாக இருந்தது. எனினும் வர்த்தக பற்றாக் குறை ஒரு புறம் அதிகரித்தாலும் மறுபுறம் அந்நிய செலாவணி இருப்புக்கள் தொடர்ந்து உயர்ந்து வருவது ஒரு வகையில் ஆருதலே.
இரண்டு மடங்காக அதிகரித்த தங்கம் இறக்குமதி
நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணபரிமாற்றத்தின் இடைவெளியே ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் இறக்குமதிகளில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்த பிறகு, தங்க இறக்குமதி தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதுவே மார்ச் மாதத்தில் இது 31 சதவிகிதம் அதிகரித்து 3.27 பில்லியன் டாலராக இருந்தது.
வருடம் 800-900 டன் தங்கம் இறக்குமதி
உலகளவில் தங்கத்தின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இந்தியா உள்ளது, அதுவும் இது முக்கியமாக நகைக் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இந்தியா வருடத்திற்கு வருடம் சுமார் 800-900 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது.
கடந்த ஆண்டு 3% குறைவு
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறக்குமதிகள் மதிப்பு அடிப்படையில் 3 விழுக்காடு குறைந்து, 2018- 2019ல் 32.8 பில்லியன் டாலர் குறைந்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications