மும்பை : டாடா குழுமம் வாகன விற்பனை குறைந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் இருந்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் சொகுசு காரான ஜாகுவார் விற்பனை மூலம் 119 மில்லியன் பவுண்டுகள் ($ 151 மில்லியன்) நிகர வருமானத்தை சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும் ஜாகுவாரில் லாபத்தை பிடித்தாலும், சர்வதேச அளவில் விற்பனை மந்தமாக உள்ளதாலும், அதோடு உலகின் மிகப்பெரிய கார் சந்தையை சீனாவில் நிலவி வரும் வர்த்தக போரினாலும் விற்பனை வெகுவாக குறைதுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் இந்த நிறுவனம் சுமார் 14 பில்லியன் டாலர்கள் கடனை சந்தித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

டாடா குழுமம் பிரிட்டிஷ் ஆடம்பர கார் தயாரிக்கும் நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. எனினும் இதுவரை இது வரை இது போன்ற இழப்புகளை சந்தித்ததில்லை என்றும், இந்த வீழ்ச்சியானது கடந்த டிசம்பர் மாதத்தில் காலாண்டுகளில் பெரும் இழப்புக்களை சந்தித்தும் வந்தது. எனினும் அது தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது டாடா நிறுவனம்.

ஜே.எல்.ஆரின் நிறுவனத்தின் உடனான கலப்பு , டாடாவுக்கு மேலும் கடன் சுமையை சுமத்தியுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் பரந்த கடன் 36 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.
அதோடு இந்த கடன் விகிதங்களை இன்னும் அதிகரிக்கும் அளவுக்கு ஐரோப்பாவுடன் போட்ட இரும்பு ஒப்பந்தம் இன்னும் இந்த நிலைமையை மோசமாக்கியுள்ளது எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களின் மொத்த கடன் தொகை 27 பில்லியன் டாலர் என்றும், இது இந்த குழுமத்தின் முக்கிய கிளைகளை வெகுவாக பாதிக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் டாடா ஸ்டீல் மற்றும் டாடா டெலிசேர்வேஷிஸ் மகாராஷ்டிரா லிமிடெட் நிறுவனத்தின் கடன் தொகையாக கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டிலேயே 9 பில்லியன் டாலர் வரை கடனை ஒதுக்கியுள்ளது கவனிக்கதக்கது.
அதோடு 150 வருட பழைமையான நிறுவனம் இவ்வாறு கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது. அதுவும் அதுவும் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெரிய அளவில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதையடுத்து, டாடா குழுமம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இரட்டை சவால்களை மேற்கொள்கின்றன என்றும் கருத்தப்படுகிறது.
எனினும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம் தனது வியாபாரத்தை இந்தியாவில் சீரமைக்க முற்படுகிறது இது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.


Click it and Unblock the Notifications