அந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்லா: ஆண்களுக்கு பாலுணர்வை அதிக அளவில் தூண்டக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஹிமாச்சல பிரதேசத்தில் விளையும் கீடா ஜாடி என்னும் அறிய வகை மூலிகை வேர்களுக்கு வெளிநாடுகளில் அதீத வரவேற்பு உள்ளதால், சிலர் அதை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

 

இயற்கையாக இமயமலைப் பிரதேசங்களில் மட்டுமே இந்த வகையான வேர்கள் கிடைக்கும் என்பதால் தான் சட்ட விரோத விற்பனையாளர்கள் இதை திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கீடா ஜாடி மூலிகை வேர் விளையும் பகுதியை தர்சுலா பஞ்சாயத்திற்கு உட்பட்டது என்று ஒரு சாரரும் வான் பஞ்சாயத்திற்கு சொந்தமானது என்று மற்றொரு சாரரும் சொந்தம் கொண்டாடி வருவாதால் இங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் நுழைவதற்கு மாவட்ட அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவுக்கு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட ஈயோட நிலையா போச்சே !

ஒரே ஆறுதல் இதுதான்

ஒரே ஆறுதல் இதுதான்

நம்முடைய எண்சான் உடம்புக்கு தலையே முக்கியம் என்று முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள். அதுபோலத்தான் நம்முடைய மன உளைச்சலையும் களைப்பையும் போக்கும் அருமருந்து செக்ஸ்தான். நாம் அன்றாடம் எவ்வளவுதான் வெளியில் அலைந்து திரிந்து வேலை செய்துவிட்டு வந்தாலும் அல்லது அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு களைத்துப்போய் வீட்டுக்கு வந்தாலும் திருமணம் ஆனவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் செக்ஸ் என்ற மூன்று சொல்தான்.

இது இல்லேன்னா அவ்வளவுதான்

இது இல்லேன்னா அவ்வளவுதான்

பாலுணர்வுதான் பெரும்பாலானவர்களுக்கு உற்சாகமளிக்கும் ஊக்கமருந்தாகும். தினசரி உறவு வைத்துக்கொள்வதால் நம்முடைய உடம்பின் அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்படைந்துவிடும். அலுவலகத்திலும் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு நம் உடம்பையும் மனதையும் தயார் செய்துவிடும். ஒருவன் அலுவலத்திலும் தொழிலிலும் வெற்றிபெறவேண்டுமென்றால் செக்ஸ் உணர்வு நிச்சயம் இருக்க வேண்டியது அவசியம்.

ஜாக்மாவின் அறிவுரை
 

ஜாக்மாவின் அறிவுரை

இந்த உண்மையை உணர்ந்தோ என்னவோ சமீபத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக்மா கூட தனது ஊழியர்கள் அனைவரும் ரெகுலராக மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இதன் காரணமாக அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்து திட்ட இலக்கை எட்ட முடியும் என்றும் ஆலாசனை கூறினார். அப்படி இல்லாவிட்டால் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு தடவையாவது உறவு வைத்துக்கொள்வது அவசியம் என்று அறிவுரை வழங்கியுள்ளார். இதை அவரின் அலுவலக ஊழியர்களும் வரவேற்றுள்ளனர்.

அந்த உணர்வை தூண்டும் பாடல்

அந்த உணர்வை தூண்டும் பாடல்

அந்தக் கால மன்னர்களும் செக்ஸ் உணர்வுக்கு ஆசைப்பட்டு படையெடுத்துச் சென்று வென்ற வரலாறும் உண்டு. அதேபோல் செக்ஸ் என்னும் ஒற்றை வார்த்தைக்காக எத்தனையோ மன்னர்கள் தங்களின் சாம்ராஜ்ஜியத்தை இழந்த வரலாறுகளும் உண்டு. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல மஹாலட்சுமியின் அவதாரமான ஆண்டாள் கூட தன்னுடைய வாரணமாயிரம் நூலில் செக்ஸ் உணர்வை தூண்டும் பாடலைப் பாடியிருக்கிறார்.

உணர்வைத் தூண்டும் பாடல்

உணர்வைத் தூண்டும் பாடல்

முத்தென்ன வெண் முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்தது என்று பாடியிருக்கிறார் என்றால் ஒருவருடைய வாழ்க்கையில் பாலுணர்வு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புலப்படும்.

அமுக்கிரா கிழங்கு

அமுக்கிரா கிழங்கு

பாலுணர்வைத் தூண்டக்கூடிய பல பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு இருந்தாலும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லியிருப்பது நாட்டு மருந்துகளையும் மூலிகை மருந்துகளையும் தான். செக்ஸ் உணர்வைத் தூண்டும் சிட்டுக்குருவி லேகியம் வெந்தயம் மற்றும் அமுக்கிரா கிழங்கு என்றழைக்கப்படும் அஸ்வகந்தா கிழங்கையும் தான் நம் முன்னோர்கள் நமக்கு பரிந்துரைக்கும் முக்கியமான வழிகளாகும்.

இமயமலையில் தான் அதிகம்

இமயமலையில் தான் அதிகம்

வெந்தயத்தை நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆண்களுக்கு பாலுணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. அதேபோல் அமுக்கிரா கிழங்கு என்று சொல்லப்படும் மூலிகை வேரும் செக்ஸ் உணர்வை தூண்டும் முக்கிய மருந்தாகும். இவ்வகையான மூலகை வேர்கள் இந்தியாவின் வடமாநிலங்களில் குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் அதிக அளவில் விளைகிறது.

கீடா ஜாடி வேர்

கீடா ஜாடி வேர்

இவ்வகையான மூலிகை வேர்கள் இயற்கையாகவே விளைவதால் இதற்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் பித்தோரகார் மாவட்டத்தில் ரலாம் என்னும் மலைப்பிரதேசத்தில் புல்வெளியில் விளையும் ஒரு வேராகும். கோடைகாலங்களில் அதிக அளவில் விளையும் கீடா ஜாடி (என்ன பொருத்தமான பெயர்) என்னும் வேர்களை எடுப்பதற்காக அருகிலுள்ள கிராம மக்கள் அங்கு செல்கின்றனர்.

யாருக்கு சொந்தம்

யாருக்கு சொந்தம்

கீடா ஜாடி மூலிகை வேர்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளதால், அங்கு இவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே இதை எடுப்பதற்காக கிராம மக்கள் போட்டி போட்டு மலைமேல் ஏறிச்செல்கின்றனர். இந்த மூலிகை வேர் விளையும் ரலாம் புல்வெளிப் பகுதி பித்தோரகார் மாவட்டத்தைச் சேர்ந்த வான் பஞ்சாயத்துக்கு சொந்தமானது என்று ஒரு தரப்பினரும், தர்சூலா மற்றும் முன்ஸ்யாரி பகுதிக்கு சொந்தமானது என்று மற்றொரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

கொள்ளை லாபம்

கொள்ளை லாபம்

குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கீடா ஜாடி மூலிகை வேர்கள் கிடைப்பதால் அவற்றை எடுத்து கிராம மக்கள் வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதன் காராணமாகவே இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கீடா ஜாடி மூலிகை வேர்கள் விளையும் மலைப்பகுதியை சொந்தம் கொண்டாடுகின்றனர். இதனால் இங்கு அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.

வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காகவே பித்தோரகார் மாவட்ட நிர்வாகம் தற்போது அங்கு இந்திய தண்டனைச் சட்டம் 145ஆவது பிரிவை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Himachal meadows herbal root sold to foreigners

The Himachal meadows herbal Viagra called Geeda Jaadi sexual herhal root sold to foreigners in higher rate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X