1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..! காலையில மேல, சாயங்காலம் கீழ..! மோடிஜி என்ன இது..?

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,591 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 38,811 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 39,110-க்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 500 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது தான் ஆச்சர்யம். அப்படியே அதிகரித்த சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் அதிகரித்து 40,124 என்கிற தன் வாழ் நாள் உச்சத்தைத் தொட்டது. ஆனால் பயத்தில் வர்த்தகர்கள் தங்கள் முதலீடுகளை விற்க மீண்டும் சந்தை 1298 புள்ளிகள் சரிந்து 38,811 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் நிறைவடைந்திருக்கிறது.

நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் புள்ளி 298 புள்ளிகள் சரிந்திருக்கின்றன. ஆனால் இன்றைய உச்சப் புள்ளியான 40,124 புள்ளிகளில் இருந்து 1313 புள்ளிகள் சரிந்திருக்கிறது சென்செக்ஸ்.

1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..! காலையில மேல, சாயங்காலம் கீழ..! மோடிஜி என்ன இது..?

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,901 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,657 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,737 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே சுமார் 165 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அப்படியே ஏற்றம் கண்ட நிஃப்டி தன் வாழ் நாள் உச்சமான 12,041 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.

சந்தையில் நிலவிய நெகட்டிவ் செண்டிமெண்டால் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்க நிஃப்டி தன் வாழ் நாள் உச்சத்தில் இருந்து சுமார் 385 புள்ளிகள் சரிந்து 11,657 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்றைய குளோசிங்கை விட இன்றைய குளோசிங் 80 புள்ளிகள் சரிந்திருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 15 பங்குகள் இறக்கத்திலும், 15 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 27 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,687 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,186 பங்குகள் ஏற்றத்திலும், 1325 பங்குகள் இறக்கத்திலும், 176 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,687 பங்குகளில் 134 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 192 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

நிஃப்டியில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மீடியா, ரியாலிட்டி, பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

அதானி போர்ட்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இந்த் பேங்க், க்ராசிம், சிப்லா போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.50 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வேதாந்தா, ஈஷர் மோட்டார்ஸ், ஐடிசி, ஹிண்டால்கோ, ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் சுமார் 3 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாயின.

மே 22, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் -0.45% வர்த்தகமானது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -1.29%, பிரான்சின் சி ஏ சி -1.60% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -1.69% வர்த்தகமாகி வருகின்றன.

ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இன்றும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங்செங் -1.58 %, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -1.38% இறக்கத்தில் வர்த்தகமாயின. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி மற்ரும் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.01 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வரும் போது சுமார் 58 ரூபாயாக் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை 69.81 டாலராக் ஐருக்கிறது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு வரும் போது இதே ஒரு பேரல் கச்சா எண்னெய் விலை சுமார் 110 டாலராக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+