ஜி.எஸ்.டி வாடிக்கையாளர்களுக்கு இலவச சாப்ட்வேர்.. 80 லட்சம் சிறு குறு வர்த்தகர்கள் பயன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜி.எஸ்.டியில் நீடித்து குழப்பங்களை தவிர்க்க, ஜி.எஸ்.டி கவுன்சில் ஆண்டு வர்த்தகம் 1.5 கோடி வரை உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு இலவச ஜிஎஸ்டி சாப்ட்வேர் வழங்க தொடங்கியுள்ளதாக, ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிகளின்படி, வியாபாரிகள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் இவ்வாறு ஜி.எஸ்.சி ரிட்டர்ன் தாக்கல் செய்வது, இன்வாய்ஸ் உள்ளிட்ட ஜிஎஸ்டி நடைமுறைகளில் பெரும்பாலானவர்கள் சிக்கல்களையே சந்தித்து வருகின்றனர்.

ஜி.எஸ்.டி வாடிக்கையாளர்களுக்கு இலவச சாப்ட்வேர்.. 80 லட்சம் சிறு குறு வர்த்தகர்கள் பயன்

இந்நிலையில் சிறு குறு நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் வகையில், ஜிஎஸ்டி சாப்ட்வேர் உருவாக்க ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு குறு நடுத்தர தொழில்துறையினருக்கு இந்த சாப்ட்வேரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்ட நிலையில், பில் போடுவது, எப்படி கணக்கீடு செய்வது, இருப்பு என்ன?, சப்ளை, விற்பனை, கேஷ் லெட்ஜர் போன்ற தகவல்களை பராமரிக்கவும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான படிவத்தை உருவாக்க புதிய புதிய சாப்ட்வேர் பயன்படும்.

ஜிஎஸ்டி நெட்வோர்க் வெளியிட்ட அறிக்கையில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்தல் மற்றும் பில் போடுவது போன்றவற்றுக்கு இந்த சாப்ட்வேர் உதவும் எனவும் இந்த கவுன்சில் அறிவித்துள்ளது.

ஒரு நிதியாண்டில் 1.5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு குறு, நடுத்தர தொழில் செய்யும் தொழில்துறையினர், வியாபாரிகள் இந்த சாப்ட்வேரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும். இதன் மூலம் 80 லட்சம் சிறு தொழில் செய்வோர் பயனடைவர் என்றும் ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்த சாப்ட்வேரை ஜி.எஸ்.டியின் இணையதளமான www.gst.gov.in இணையதளத்தில் இருந்து இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

 

அதிலும் ஜி.எஸ்.டி வரி செலுத்துவோரில் 80 சதவிகிதத்தினர் இதன் மூலம் பயனடைவர். இதன் மூலம் அதிகளவில் வரி செலுத்துவோர் அதிகளவில் பயனடைவர். அதோடு ஜி.எஸ்.டி கவுன்சில் கடந்த ஜனவரி மாதத்திலேயே இந்த வரி செலுத்தும் சாப்ட்வேர்களை வழங்க ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST Network offers free accounting and billing software to MSMEs

GST Network said it has started offering free accounting and billing software to MSMEs, with annual turnover of up to Rs 1.5 crore. Also 80 lakh small businesse peoples have benefit for this software.
Story first published: Thursday, May 30, 2019, 8:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X