திருடனுக்குத் தோன்றும் திருட்டு புத்தி... வரி ஏய்க்கிறவனுக்கு அதே புத்திதான்

வர்த்தகர்கள், தொழில் துறையினர் தாக்கல் செய்திருந்த மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை சரி பார்த்ததில் ஆயிரக்கணக்கான ரிட்டன்களில் வரி ஏய்ப்பு செய்ததோடு, ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெற்று வரி மோசடியும் செய்திருப்பதும்

டெல்லி: வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்திருந்த ஜிஎஸ்டி ரிட்டன்களை தீவிரமாக ஆராய்ந்ததில் நாடு முழுவதும் 225 போலி பில்களின் மூலம் சுமார் 1314.77 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டேதான் இருக்கிறது. வரி ஏய்ப்பை தடுக்க என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும் ஏய்பாளர்கள் பல விதமாக யோசித்து அரசை ஏமாற்றுகின்றனர்.

வர்த்தகர்கள், தொழில் துறையினர் தாக்கல் செய்திருந்த மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை சரி பார்த்ததில் ஆயிரக்கணக்கான ரிட்டன்களில் வரி ஏய்ப்பு செய்ததோடு, ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெற்று வரி மோசடியும் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாரும் ஏமாற்ற முடியாது

யாரும் ஏமாற்ற முடியாது

ஆனால் நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஜிஎஸ்டி வந்து விட்டால் அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. யாரும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. யாரும் வரி மோசடி செய்ய முடியாது. போலி பில்களை தயாரித்து அரசை ஏமாற்றவே முடியாது என்று ஏகப்பட்ட முடியாது, நடக்காது என்பதை சொல்லித் தான் ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டது.

போலிதான் சூப்பர்

போலிதான் சூப்பர்

ரூபாய் நோட்டுக்களில் அசல் நோட்டுகளை விட போலி ரூபாய் நோட்டுகள் அவ்வளவு பக்காவாக இருக்கும். அது போலத்தான் ஜிஎஸ்டி வரி விசயத்திலும் நடந்துள்ளது. வாட் வரி முறையிலாவது விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றை தனியாக தயார் செய்து பின்னர் வாட் வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

ஆனால், வாட் வரிமுறைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறையில் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி செலுத்துதல் என அனைத்தையும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்வதால் வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு என எதுவும் செய்ய முடியாது என்று மத்திய அரசும், ஜிஎஸ்டி ஆணையமும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தது.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல்

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல்

அந்த நம்பிக்கை மற்றும் உறுதியின் காரணமாகத்தான் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. முற்றிலும் புதிதாக ஒரு வரி முறையை அமல்படுத்திய காரணத்தினால் மத்திய அரசும் ஜிஎஸ்டி ஆணையமும் தொடக்கத்தில் சற்று நிதானமாக அடியெடுத்து வைத்தது. வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரை மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு எந்தவிதமான நிபந்தனைகளையும் நெருக்கடிகளையும் கொடுக்காமல் தாராள மனப்பான்மையுடன் இருந்து வந்தது.

தாராள மனப்பான்மை

தாராள மனப்பான்மை

ஜிஎஸ்டி ஆணையத்தின் இந்த தாராள மனப்பான்மையை தங்களுக்கு கொடுத்த சுதந்திரமாக எண்ணிக்கொண்ட சில வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர், போலியாக சரக்குகளை கொள்முதல் செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த உள்ளீட்டு வரிப்பயனை (Input Tax Credit) பெறுவதற்கும் போலியாகவே விற்பனைக்கான பில்களையும் தயாரித்து, அதன் மூலமாக ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெற்று வந்துள்ளனர்.

ஜிஎஸ்டி ரீபண்ட்

ஜிஎஸ்டி ரீபண்ட்

பொதுவாக வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் தாக்கல் செய்யும் அனைத்து ஜிஎஸ்டி ரிட்டன்களையும் முதலில் ஜிஎஸ்டி வரித்துறையினரும், பின்னர் ஜிஎஸ்டி தணிக்கைத் துறையினரும், தணிக்கை செய்து உள்ளீட்டு வரிப்பயன் ரீஃபண்ட் இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாக வர்த்தகர்களுக்கு அளித்துவிடுவதுண்டு.

வரி ஏய்ப்பு மோசடி

வரி ஏய்ப்பு மோசடி

அதன் அடிப்படையில், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்திருந்த மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்கள் மற்றும் ஆண்டு இறுதி ஜிஎஸ்டி ரிட்டன்களை ஜிஎஸ்டி ஆணையமும், ஜிஎஸ்டியின் தணிக்கைத் துறையும், வருமான வரித்துறையும் மிகத் தீவிரமாக ஆராய்ந்து தணிக்கை செய்து பார்த்தது. இவ்வாறு தணிக்கை செய்து பார்த்ததில் சுமார் 396 ரிட்டன்களில் போலியாக கொள்முதல், விற்பனை பில்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 5887.54 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிப்பயன்பாட்டை ரீஃபண்டாக பெற்று வரி ஏய்ப்பும் வரி மோசடியும் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1314.77 கோடி மோசடி

ரூ. 1314.77 கோடி மோசடி

அதேபோல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 225 ஜிஎஸ்டி ரிட்டன்களில் போலியாக பில்களை தயாரித்து சுமார் 1314.77 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிபயன் ரீஃபண்ட் திரும்பப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஜிஎஸ்டி ஆணைய செயலாளர் ஜிஎஸ்டியின் மே மாத இதழில் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு போலியாக பில்களை தயாரித்து வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி செய்வதை தடுக்கவே, வரும் செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி இணையதளத்திலேயே இ-பில் உருவாக்குவதை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் (CBIT) கட்டாயமாக்கி உள்ளது. இதனால் வரி மோச குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+