மாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்லம்: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தம்பதிகள் (Ilyas) 5 பவுன் மதிப்புள்ள (கிட்டதட்ட 40 கிராம் ) தங்க செயினை தொலைத்து விட்டனராம்..

 

அப்போது அந்த செயின் எங்கு தேடியும் கிடைக்காத பட்சத்தில் நொந்து போய் வீடு திரும்பியிருக்கிறார்கள் அந்த தம்பதிகள். அதோடு அதை மறந்தும் விட்டார்களாம்.

மாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்..  என்னய்யா நடக்குது இங்க..?

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறதாம். ஆமாங்க.. அந்த தங்க சங்கிலியை மாடு ஒன்று திருடி விட்டதாகவும், தற்போது மாட்டு சாணத்தின் வழியாகத் தான் அந்த தங்க செயின் கிடைத்திருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

காணமல் போன செயின் எப்படியோ மாட்டி வயிற்றினுள் சென்றுவிட்டது. பின்னர் அந்த மாடு அதே பகுதியை சேர்ந்த, கிட்டதட்ட 11 கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ள பகுதியில் ஒரு தம்பதிற்கு விற்பனை செய்துள்ளார்கள்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் விவசாய நோக்கத்திற்காக சுஜா உல் முல்க் மற்றும் அவரது மனைவி சஹீனா தம்பதிகள் அந்த மாட்டை வாங்கியுள்ளனர். அவர்கள் வீட்டு உபயோகத்திற்காக சாணத்தை உபயோகப்படுத்த எடுத்தவருக்கு சாணத்தில் தங்க சங்கிலியை பார்த்தவுடன் திகைத்து போய் இருக்கிறார்கள்.

Indigo சலுகை இன்றோடு முடிகிறது..! ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..!

ஆமாங்க.. இரண்டு வருடத்திற்கு முன்பு காணமல் போன அந்த தங்க சங்கிலியைத் தான் சாணத்தின் மூலமாக வெளியேற்றியிருக்கிறது அந்த திருட்டு மாடு.

இந்த நிலையில் மாட்டின் உரிமையாளர்களான சுஜா உல் முல்க் மற்றும் அவரது மனைவி சஹீனா தம்பதிகள் இருவரும் எப்படியாவது இதை உரிமையாளர்களிடம் ஓப்படைக்க வேண்டும் என்றும் எண்ணிய ஆராய்ச்சி செய்த போது அந்த செயினில் மங்கல் சூத்திரா (Ilyas) என்றும் எழுதியிருந்ததாம்.

இதன் பின்னர் இந்த செயினில் உரிமையாளர்களை கண்டுபிடித்து இந்த தங்க சங்கிலி உரிமையாளரை கண்டுபிடித்து திருப்பி தரும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் இலியாஸ் குடும்பத்தை தேடியுள்ளனர்.

 

ஆனால் பல நாட்களுக்கு பின்பு அவர்களை தொடர்பு கொண்டிருகின்றனர் இலியாஸ் குடும்பத்தினர். பின்னர் எவ்வாறு இந்த செயின் திருட்டு போனது என்றும் கூறியிருக்கிறார்கள்.

அதோடு இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மாடு வைத்திருந்ததாகவும், பின்னர் அதை விற்று விட்டதாகவும் கூறியுள்ளனர். பின்னர் அந்த தங்க செயினை திருடியது மாடுதான் என்று பின்னர் நீருபணமானதாம். எனினும் சுஜா தம்பதியர் போலிசார் முன்னிலையில் ஒப்படைப்படைப்பதாகவும் கூறியுள்ளனரராம்.

அதோடு அந்த பகுதி முழுக்க அந்த திருட்டு மாட்டை பற்றி தான் ஒரே பேச்சாம். ஆமாங்க இலியாஸ் தம்பதியின் தங்க சங்கிலியை திருடியது ஒரு மாடு என்றும், அது தற்போது கிடைத்துவிட்டது என்றும் பேசிக் கொள்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: kerala கேரளா gold
English summary

40 gram gold ornaments found in cow dung in India

Two years ago, a couples of Ilyas, lost a gold chain weighing five sovereigns (40 grams) The missing gold chain was found two years later, almost 11km away from the home of the couple in Kollam.
Story first published: Friday, June 14, 2019, 12:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X