டெல்லி: நாட்டின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் ரூ.25,090.3 கோடி என அந்த வங்கி ஒப்புக் கொண்டுள்ளதாம்.
இது வரை அந்த வங்கியில் கடன் வாங்கிய 1142 பேர் வாங்கிய கடனை கட்டவில்லையாம். அதோடு இதன் மூலம் கிட்டதட்ட 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் வாராக்கடன் உள்ளதாம்.
இந்த நிலையில் சுமார் 1,108 பேர் வழக்கும் பதியப்பட்டுள்ளதாம். இதன் மூலம் 23,879.8 கோடி ரூபாய் வாராக் கடன் வசூல் செய்யும் நிலையில் இருப்பதாகவும் இந்த வங்கி அறிவித்துள்ளது. மீதமுள்ள 34 பேர் மூலம் 1,210.5 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளதாம். ஆனால் இவர்கள் மிக பழங்குடியினராம். ஆக இதுவரை இவர்கள் மீது எந்த வழக்குகளும் இதுவரை எதுவும் தொடரபடவில்லையாம்.
கடன் வாங்கியவர்கள் அயல் நாடுகளிலும் உண்டு.
இவ்வாறு கடன் நிலுவையில் உள்ளவர்களில் சிலர் அயல் நாடுகளில் பதிவு செய்தவர்கள். ஆமாங்க.. சிலர் இந்தியாவில் பதிவு செய்தவர்களாம். இவ்வாறு வெளி நாட்டில் பதிவு செய்தவர்கள் சில பஞ்சாப் நேஷனல் வங்கியின் வெளி நாட்டு கிளைகளில் கடன் பெற்றவர்களாகவும் உள்ளனராம்.
லிஸ்டிலேயே இல்லை?
இதில் குறிப்பிடத்தக்க பெரும் கடன் காரர்களை இந்த லிஸ்டில் இருந்தும் நீக்கியுள்ளதாம் இந்த வங்கி. குறிப்பாக இந்த லிஸ்டில் நிரவ் மோடியும் அவரது உறவினருமான மொஹூல் சோக்ஸியும் ரூ.14,000 கோடி கடனை வாங்கிவிட்டு தப்பியோடிய புண்ணியவான்கள் தானே. இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவராத படி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த லிஸ்டில் சரக்கு வியாபாரி விஜய் மல்லையாவும் உண்டு
இதையடுத்து கிங்க் பிஸ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 597.4 கோடி ரூபாய் பெற்று விட்டு லண்டனுக்கு தப்பி சென்றுள்ளார். அடுத்து சண்டிகாரை சேர்ந்த குடோஸ் கெமி லிமிடெட் நிறுவனம் 1,301.8 கோடி ரூபாயை பெற்றும், வின்ஸோம் டைமன்ட்ஸ் & ஜீவல்லரி லிமிடெட் 899.7 கோடி ரூபாயும், கொல்கத்தாவை சேர்ந்த ஜாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர் நிறுவனம் 410.9 கோடி ரூபாயும், மும்பையை சேர்ந்த ஜூம் டெவலப்பர்ஸ் நிறுவனம் 410.1 கோடி ரூபாயும் கடன் தொகையை கட்டாமல் பாக்கி வைத்துள்ளனவாம்.
பாஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்
இது வரை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை வங்கியான இந்த வங்கியில் நாடு முழுவதும், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கடனாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிளைகளில் உள்ளனராம். குறிப்பாக மஹாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மா நிலங்களில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனராம்.
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் அதிகம்
இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம் கூறுகையில், இந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் அல்ல. அனைத்து வங்கிகளிலும் இதே பிரச்சனை தான். அனைத்து வங்கிகளும் இதே போல வாராக்கடனை மோசமாக வைத்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் கணக்கு தணிக்கை செய்ய வேண்டும்
தவறுதலாக இவ்வாறு பெரிய அளவில் கொடுக்கபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கணக்கியல் தணிக்கைகளை மீண்டும் சரி பார்க்க வேண்டும். அதோடு இந்த பெரு நிறுவனங்களின் மீது சாதாரண வழக்கு போட்டு நீண்ட காலத்திற்கு இழுத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, இவர்களின் மீது வலுவான வழக்குகளை போட வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications