சென்னை: ஒரு கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் (Ornament Gold) விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு சத்தமில்லாமல் 3,572 ரூபாயாக விலை அதிகரித்திருக்கிறது.
சென்னையில் உள்ள ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரைனிங் செண்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனிடம் கேட்ட போது "இப்போது (24 கேரட்) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்துக்கு 3,572 ரூபாய் என்பது மிகப் பெரிய விலை ஏற்றம். இது ஒரு வரலாற்று உச்சம்" என்பதை ஆமோதிக்கிறார்.
அதே போல ஜாய் அலுக்காஸ் நிறுவனமும் ஒரு கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 3,572 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதையும் உறுதி செய்திருக்கிறார்கள்.
சர்வதேச வர்த்தக விலை
சர்வதேச சந்தைகளில் அதே 24 கேரட் தங்கத்தின் ஸ்பாட் விலை சுமார் 3,395 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. ஆகஸ்ட் 2019 ஃப்யூச்சர் விலை 34,068 ரூபாயாகவும், அக்டோபர் 2019 ஃப்யூச்சர் விலை 34,255 ரூபாயாகவும், டிசம்பர் 2019 ஃப்யூச்சர் விலை 34,545 ரூபாயாகவும் ஏறுமுகமாக இருக்கிறது.
டாலரில் தங்கம்
கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 1,400 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. நியூயார்க் பங்குச் சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய குளோசிங்கில் இருந்து சுமார் 0.4 சதவிகிதம் விலை அதிகரித்து 1,403 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த செப்டம்பர் 2013-க்கு பிறகு காணும் மிகப் பெரிய விலை உயர்வு எனச் சொல்கிறார்கள்.
வரலாறு காணாத விலை ஏன்
இந்தியாவுக்குத் தேவையான தங்கத்தை எல்லாம் டாலர் கொடுத்து தான் இறக்குமதி செய்கிறோம். நமக்கு தேவையான டாலரை இந்திய ரூபாய் கொடுத்து வாங்குகிரோம். ஆறு வருடத்துக்கு முன் ஒரு டாலர் = 58 ரூபாய். ஆனால் இப்போது அதே ஒரு டாலர் = 69 ரூபாய்.
தங்கத்தின் ஒரிஜினல் விலை டாலரில் தான் இருக்கின்றன. தங்கத்தின் விலை அவ்வளவு பெரிதாக அதிகரிக்கவில்லை. ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நிறைய சரிந்திருக்கிறது. ஆக டாலர் விலை மாற்றத்தால் இந்தியாவில் அபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத விதத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
உலக வங்கிகள்
இந்தியாவுக்கு எப்படி ஆர்பிஐ மத்திய வங்கியாக இருந்து இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் படுத்துகிறதோ அப்படி எல்லா நாட்டுக்கும் ஒரு மத்திய வங்கி இருக்கிறது. அப்படி இந்தியாவின் ஆர்பிஐ தொடங்கி, சீனா, கஜகஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, போலாந்து, ஹங்கேரி என அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வரை பல வங்கிகளும் தங்கத்தை ஒரு பாதுகாப்பு முதலீட்டு சாதனமாக வாங்கிக் குவித்திருக்கிறார்கள். மேலும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் வாங்கி இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா..? நாம் மேலே சொன்ன டாலர் விலையை சமன்படுத்தத் தான். வேறு எதற்கு.
மற்ற காரணங்கள்
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த... தளர்த்தப்படும் பணக் கொள்கை, நிலையற்ற டாலர் விலை, அமெரிக்கா சீன வர்த்தகப் போர், அமெரிக்க ஈரான் பொருளாதாரத் தடை போன்றவைகள் எல்லாம் இன்னும் தங்கத்தின் விலையை அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை சர்வதேச சந்தைகளில் ஒரு அவுன்ஸுக்கு சுமார் 1445 டாலர் முதல் 1450 டாலர் வரை வர்த்தகமாகலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள். ஆக இந்தியாவில் ஒரு கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 3,800 வரை தொடலாம்.
தங்க விலைக்கு தண்ணி
சமீபத்தில் தான் சென்னையில் ஒரு டேங்கர் லாரி தண்ணிக்கு 2 கிராம் தங்கத்தின் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது என அழுது புலம்பினோம். நாம் சொன்னது தங்கத்தின் காதுகளுக்கு கேட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை. இப்போது தங்கமும் விலை ஏறத் தொடங்கிவிட்டது.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications