முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலிகார்: வடமாநில சிற்றுண்டி உணவு வகைகளில் புகழ்பெற்ற தின்பண்டமான கச்சோரி உணவுக் கடை வைத்து விற்பனை செய்து ஆண்டுக்கு 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக எழுந்த புகாரை விசாரித்த ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டனர். பட்டதாரிகள் பக்கோடா விற்கலாம் என்று மோடி சொன்னதை மீம்ஸ் போட்டு கிண்டலடித்தனர். இப்போது ஒருவர் சமோசா விற்று ஒரு கோடி சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியில் வேறு வழியில்லாத முகேஷ் தன்னுடைய கச்சோரி மற்றும் சமோசா விற்பனைக்கான வருமானத்திற்கு வரி செலுத்த ஒப்புக்கொண்தோடு, தான் செய்த அனைத்து செலவுக் கணக்கான மைதா மாவு வாங்கியது, சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியது, எண்ணெய் உள்பட அனைத்தையும் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார்.

 

ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் ஆர்.பி.டி.கண்ட்டேயா (R.P.D. Kaunteya), முகேஷ் தன்னுடைய வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு ஒரு ஆண்டுக்குரிய வருமானத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த சம்மதம் தெரிவித்திருக்கிறார், என்று கூறினார். ஜிஎஸ்டி அதிகாரிகளும் முகேஷ் ஒரு ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக செலுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.

இட்லி, தோசை, பொங்கல், வடகறி

இட்லி, தோசை, பொங்கல், வடகறி

ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பரம்பரை பரம்பரையாக நடத்தி வரும் தொழில்களுக்கு என மவுசு ஏற்படுவதுண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏழை பணக்காரன் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிடும் சிற்றுண்டிகளான இட்லி, தோசை, வடை கறி வகைகளும், மதிய வேளைகளில் மணக்க மணக்க சாம்பாரோடு கிடைக்கும் அரிசிச் சாப்பாடும் வெகு பிரபலம்.

எளிய வகை உணவுகள்

எளிய வகை உணவுகள்

இவற்றைத் தவிர்த்து மூன்று வேளைகளிலும் கிடைக்கும் எளியவகை உணவுகளான பழைய சோறு, கம்மங்கூல், கேப்பைக்கூல், வரகரிசி உணவு வகைகள், திணையரிசி உணவு வகைகள் என இவை அனைத்தும் பிரபலம். அதிலும் கூட மேற்குறிப்பிட்ட எளிய வகை உணவுகளை தற்போது ஏழைகளைக் காட்டிலும் பணக்காரர்கள் தான் அதிக அளவில் சுவைத்து சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

பழைய சோறு
 

பழைய சோறு

சில பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் கூட பழைய சோற்றை 250 ரூபாய்க்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்து வாங்கி சாப்பிடுவதும் நடைபெறுகிறது. யார் கண்டது இன்னும் சில நாட்களில் இவை அனைத்தும் உபேர், ஃபுட் பாண்டா, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிடும் நிலை ஏற்படவும் கூடும்.

 காலை டிபன் கச்சோரி

காலை டிபன் கச்சோரி

தமிழ்நாட்டைப்போல, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநில மக்களின் அன்றாட சிற்றுண்டி உணவு வகைகளான வடா பாவ் மற்றும் கச்சோரி போன்ற உணவுகள் வெகு பிரபலம். நாம் காலைச் சிற்றுண்டியாக இட்லி, பொங்கல் என வெளுத்துக் கட்டுவது போல், அங்கே காலைச் சிற்றுண்டியாக வடா பாவ் மற்றும் கச்சோரி வகைகளை ஒரு வாய் பார்க்காவிட்டால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இவை இரண்டும் வட மாநில மக்களின் உணர்வோடு ஊறிப்போன ஒன்றாகும்.

தினசரி வருமானம் ரூ.25000

தினசரி வருமானம் ரூ.25000

நம்மூர்களில் எப்படி தள்ளுவண்டிக் கடைகள் பிரபலமோ, அதேபோல் வட மாநிலங்களில் கச்சோரி உணவுக் கடைகள் வெகுபிரபலம். அதிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் கச்சோரி என்றால் மேடைக் கச்சேரி போட்டு பாடும் அளவிற்கு பிரபலம். இந்த வகை கடைகளின் அன்றாட வருமானம் சில ஆயிரங்களைத் தொடும் அளவிற்கு விற்பனை வெகு ஜோராக நடக்கும்.

 நீண்ட க்யூ வரிசை

நீண்ட க்யூ வரிசை

இப்படித்தான் அலிகார் நகரத்தில் கொஞ்சம் பிரபலமான சீமா சினிமா தியேட்டர் அருகில் சிறிய அளவில் கச்சோரி மற்றும் சமோசா உணவுக் கடை வைத்திருக்கும் முகேஷ் (என்ன ஒரு பெயர்) என்பவரின் கடை(தை)யும். அதிலும் இவருடைய கடையில் விற்கப்படும் கச்சோரி என்றால் கூட்டம் அலைமோதும். காலை முதல் இரவு வரையில் கச்சோரி வாங்க ரேசன் கடை க்யூ போல் நீண்ட வரிகையில் காத்திருந்து வாங்கிச் செல்வதுண்டு. இதனால் இவரின் தினசரி வருமானம் என்பது நம்முடைய மாதச் சம்பளம் அளவிற்கு இருக்கிறது.

 மொட்டைக் கடுதாசி

மொட்டைக் கடுதாசி

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கையில், முகேஷின் வருமானம் யாருடைய கண்ணுக்கோ கண்ணில் விழுந்த தூசியாக உறுத்த ஆரம்பித்துவிட்டது. அந்த யாரோ ஒரு புண்ணியவான், பக்கத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரித்துறை அலுவலகத்திற்கு மொட்டைக் கடுதாசி போட்டு, இவரோட சம்பாத்தியம் டவுட்டா இருக்கு . ஆகவே நீங்கள் வந்து கொஞ்சம் என்னன்னு கேளுங்க என்று கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

நம் நாட்டில்தான் மொட்டைக் கடிதத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்பது தெரிந்தததான். விசயத்தை கேள்விப்பட்ட ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளரும் அதிகாரிகளும் உடனடியாக முகேஷின் கடைக்கு வந்து சோதனை நடத்தி இருக்கிறார்கள். அவரிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அன்றாடங் காய்ச்சிகள்

அன்றாடங் காய்ச்சிகள்

முகேஷிடம் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள், நீங்கள் எத்தன வருஷமாக கடை வச்சிருக்கீங்க, உங்க தினசரி வருமானம் எவ்வளவு இருக்கும் என்று கேட்டதற்கு, நான் 12 வருஷமாக இந்த கடையை நடத்திக்கிட்டு இருக்கேன் சார். பெருசா என்ன வரப்போகுது சார். ஒரு நாளைக்கு அதிகமா போன ஆயிரமோ ரெண்டாயிரமோ வரும் சார். ஏதோ அதெ வச்சிக்கிட்டு வங்க வாழ்க்கையே ஒட்டிக்கிட்டு இருக்கோம் சார் என்று பதிலளித்திருக்கிறார்.

ஆண்டு வருமானம் ரூ.1 கோடியா

ஆண்டு வருமானம் ரூ.1 கோடியா

முகேஷின் பதிலால் சந்தேகமடைந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடமும் விசாரித்திருக்கிறார்கள். அவர்களும் முகேஷின் கச்சோரி விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை உறுதி செய்திருக்கிறார்கள். முகேஷின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 60 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரையிலும் இருக்கக்கூடும் என்று பதிலளித்திருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி வரி கட்டணும்

ஜிஎஸ்டி வரி கட்டணும்

பக்கத்து கடைக்காரர்களின் பதிலால் திருப்தியடைந்த ஜிஎஸ்டி அதிகாரிகள், திரும்ப முகேஷிடம் வந்து, உங்களின் வருமானம் வரி வரம்பிற்குள் வந்து விட்டது. எனவே நீங்கள் உடனடியாக ஜிஎஸ்டியில் பதிவு செய்துவிட்டு மறுவேளை பாருங்கள் என்று கொண்டு வந்த நோட்டீஸையும் கொடுத்தனர். இதனால் பதறிப்போன முகேஷ், சார் நாங்களெல்லாம் அன்றாடங்காய்ச்சிகள் சார். ஏதோ எங்க வயித்துப் பொழப்புக்கு கச்சோரியும் சமோசாவும் வித்து சாப்டு வர்றோம் சார் எங்க பொழப்புலெ மண்ணெ அள்ளிப் போட்றாதீங்க சார் என்று கெஞ்சியிருக்கிறார்.

வரி கட்றேன் சார்

வரி கட்றேன் சார்

இறுதியில் வேறு வழியில்லாத முகேஷ் தன்னுடைய கச்சோரி மற்றும் சமோசா விற்பனைக்கான வருமானத்திற்கு வரி செலுத்த ஒப்புக்கொண்தோடு, தான் செய்த அனைத்து செலவுக் கணக்கான மைதா மாவு வாங்கியது, சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியது, எண்ணெய் உள்பட அனைத்தையும் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார்.

ஒரு வருஷ வரி கட்டணும்

ஒரு வருஷ வரி கட்டணும்

இது பற்றி விளக்கமளித்த ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் ஆர்.பி.டி.கண்ட்டேயா (R.P.D. Kaunteya), முகேஷ் தன்னுடைய வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு ஒரு ஆண்டுக்குரிய வருமானத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த சம்மதம் தெரிவித்திருக்கிறார், என்று கூறினார். ஜிஎஸ்டி அதிகாரிகளும் முகேஷ் ஒரு ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக செலுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

Kachori Shop owner Earns Rs.60 lakhs to Rs.1 crore a year

State Intelligence Officers of the GST have issued a notice seeking immediate payment of GST tax on the complaint that they have earned Rs 60 lakh to Rs 1 crore per annum by selling Kachori and Samosa in the North Central region.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more