பெங்களுரு : இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI), இந்தியாவில் நாளுக்கு நாள் obesity& diabetes மக்களுக்கு இடையே அதிகரித்து வருகிறது. ஆக இதை எச்சரிக்கும் விதமாக உணவு உற்பத்தியாளர்கள், அந்தந்த உணவு பேக்குகளில் தெளிவாக கொழுப்பின் அளவு, சர்க்கரை மற்றும் உப்பின் அளவினை குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆணையம், நாளுக்கு நாள் இந்தியாவில் நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பலரும் பாதிப்பட்டு வருகின்றனர். ஆக இதை தடுக்கும் விதமாகவும், மக்களை எச்சரிக்கும் விதமாகவும் உள்ளடக்கங்களின் முன் சிவப்பு நிறத்தில் இதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு விகிதத்தால், எச்சரிக்கை அடைந்த இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது குறித்து விதிகளைத் திட்டமிட்டு வருகிறது.
அதோடு உணவு உற்பத்தியாளர்கள் தங்களது லேபிள்களில் கொழுப்பு மற்றும் சர்க்கரை மற்றும் உப்பு உள்ளடக்கத்தை தெளிவாகக் காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தற்போது உணவு உற்பத்தியாளர்கள், உணவு பேக்குகளில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்கள் அந்த நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்புகள், ஊட்டச்சத்து குறித்த விவரங்கள் மட்டுமே பிரிண்ட் செய்யப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற குறிப்புகள் அதிகம் இருப்பதில்லை என்றும் அறிவித்துள்ளது.

இதனால் பெரும்பாலான மக்களுக்கு இது குறித்து தெரியாமலேயே போய்விடுகிறது. இதனால் என்ன பாதிப்புகள், என பாதிக்கப்பட்ட பின்னரே தெரிந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்தியா ஃபுட் ப்ரோஸ்சோர்ஸ் அசோசியேஷன் (All India Food Processors Association) தலைவர் சுபோத் ஜிண்டால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த கருத்துகள் அறிவியல் மற்றும் நடைமுறைக்கு ஒத்து வருவதாகவும் இல்லை.
ஒருவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப சீரான உணவு மற்றும் அவரவரின் உடல் நலனுக்கு ஏற்ப உணவுகளின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து நுகர்வோரிடம், விழிப்புணர்வை உருவாக்குவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக பரிந்துரைக்கவும் வேண்டும் என்றும் ஜிண்டால் மேற்கோளிட்டார்.
ஒரு புறம் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் ஒபேசிட்டி எனப்படும் உடல்பருமன் பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்னதான் ஒரு புறம் அரசோ மற்றவர்களோ நடவடிக்கை எடுத்தாலும், ஜங்க் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகளை தவிர்த்தாலோ ஒழிய இதற்கான நல்ல தீர்வு காணப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். .
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications