மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கிக்கும் இது போதாத காலமே? இந்த வங்கியின் ராசியோ என்னவோ? கடனை வாங்கினால் பலரும் கட்டுவதே இல்லை. குறிப்பாக நிரவ் மோடி அடுத்தாற்போல், தற்போது இந்த லிஸ்டில் தற்போது Bhushan Power & Steel நிறுவனமும் சேர்ந்துள்ளது.
பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ரூ.3,800 கோடி கடனை அந்த நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிக்கு அளித்த புகாரில் கூறியுள்ளது.

அதோடு பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் வங்கி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், கூட்டமைப்பு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்காக அதன் கணக்கு புத்தகங்களில் மோசடியை கையாண்டுள்ளதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறு இந்த நிறுவனம் வாங்கியுள்ள மொத்த தொகையில், 3191 கோடி ரூபாய் மும்பை பிரிவிலும், துபாய் கிளையில் 49.71 மில்லியன் டாலரையும், ஹாங்காங் கிளையில் 38.51 மில்லியன் டாலரையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக முதல் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணை தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வைர வியாபாரிகள் நிரவ் மோடிக்கும் மொகுல் சோக்சிக்கும் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்து மோசடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இது இந்த வங்கிக்கு மீண்டும் ஒரு பலத்த அடியாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
BPSL நிறுவனம் ரிசர்வ் வங்கி. ஏற்கனவே திவால் நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 12 கணக்குகளில் ஒன்று என்றும் கருதப்படுகிறது.
அதோடு ஜே.எஸ்.டபள்யூ 19,350 கோடி ரூபாயை அதன் கடனாளர்களுக்கு கொடுக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த கடனில் 60 சதவிகிதம் கடன் என்றும் கருதப்படுகிறது.
நாளுக்கு நாள் கடனை வாங்கிவிட்டு தப்பி செல்லும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே நிலையில் ரிசர்வ் வங்கி, இந்து போன்ற நிறுவனங்களுக்கான நிதிக் கொள்கையை இன்னும் கடினமாக்க வேண்டும் என்றும் நிபுனர்கள் கூறுகின்றனர்..அதிலும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது போதா காலமே என்றும், நிரவ் மோடி, விஜய் மல்லையா, அடுத்தடுத்து லிஸ்ட் நீண்டு கொண்டே போவதாக, வங்கிகளின் வாராக்கடனயே அதிகரிக்கிறது என்றும் கவலை தெரிவிகின்றனர்.


Click it and Unblock the Notifications