டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள், நிறுவனங்கள் கடனை வாங்கிவிட்டு அன்னிய நாடுகளை தேடி தஞ்சம் புகுந்து வரும் நிலையில், டாடா குழுமம், அதன் டாடா டெலிசர்வீசஸ் (Tata Teleservices Limited ) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா (Tata Teleservices (Maharashtra) Limited ) நிறுவனத்தின் கடன் தொகையாக ரூ.50,000 கோடியை அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் காணமால் போயின. அதோடு பல ஆயிரம் கோடிகள் இழப்பையும் சந்தித்தன.

இந்த நிலையில் ஜியோ நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல், மூடப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏராளம். அதிலும் டாடா டெலிசர்வீசஸ்ஸூம் ஒன்று.
இவ்வாறு ஜியோவுடன் போட்டி போட முடியாமல் தவித்து இந்த நிறுவனத்திற்கு, கிட்டத்தட்ட ரூ.50,000 கடனும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை விற்க முற்பட்டது டாடா குழுமம்.
இந்த நிறுவனத்தை வாங்க பார்தி ஏர்டெல் ஆர்வம் தெரிவித்தாலும், இந்த நிறுவனத்தின் அனைத்து கடன்களையும் கட்டினால் தான், பார்தி ஏர்டெல் வாங்கும் என்று கண்டிசனும் போட்டது.
இந்த நிலையில் தான், டாடா குழுமம் அதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆமாங்க.. டாடா குழுமம், அதன் மொபைல்போன் சேவை வணிகத்துக்கான, 50,000 கோடி ரூபாய் கடனை தற்போது அடைத்துள்ளதாம்.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா குழுமத்துக்கு சொந்தமான, டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா நிறுவனம், பார்தி ஏர்டெல்லுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு, அதன், 50,000 கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி டாடா சன்ஸ் நிறுவனம், அனைத்து கடன்களையும் தற்போது அடைத்துள்ளதாகவும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தொலைதொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய, 10,000 கோடி ரூபாய் கடனும் கட்டியுள்ளதாகவும் டாடா குழுமம் கூறியுள்ளது.
அதோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த 2016ல் அறிமுகமான பிறகு, அதன் போட்டியை சமாளிக்க, பிற தொலைதொடர்பு நிறுவனங்கள், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இதையடுத்தே, 2017 அக்டோபரில், டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்ட்ரா நிறுவனமும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் இணைவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது இதற்கான முழு அஸ்திராவாரமும் போடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications