திருநெல்வேலி : திருநெல்வேலி கோர்ட் அருகே உள்ள அண்ணபூர்ணா ஹோட்டலில், தாராபுரத்தை சேர்ந்த மஹாராஜா என்பவர் ரூ.40க்கு தயிர் வாங்கியுள்ளார். ஆனால் அந்த உணவக உரிமையாளருக்கு தெரியவில்லை போலும் இந்த தயிரால் நமக்கு ஏழரை வரப்போகிறது என்று.
ஆமாங்க.. நம்ம திருநெல்வேலி கோர்ட் அருகே உள்ள இந்த தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு சென்ற மஹாராஜா என்பவர் ரூ.40க்கு தயிர் வாங்கியுள்ளார்.

இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ரூ40 மதிப்பிலான தயிருக்கு ரூ. 2 ஜிஎஸ்டி வரியும் மற்றும் ரூ.2 பார்சல் கட்டணம் என மொத்ம் ரூ.44 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி விதியின் படி தயிருக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மஹாராஜா அந்த உணவகத்திடம் கேட்டபோது தனியார் உணவகத்தினர் ஜிஎஸ்டி இல்லாமல் தயிரை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரூ44-க்கு தயரை வாங்கி சென்ற மஹாராஜா, அதற்கான பில்லையும் அப்போது பெற்றுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பின்னர் இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் உணவு விடுதி மீது தான் தவறு என கூறி இந்த சம்பவத்தால் மனமுடைந்த மஹாராஜாவிற்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 எனவும், வழக்கு செலவிற்காக ரூ.5,000 மற்றும் அவரிடம் இருந்து அதிகமாக பெறப்பட்ட ரூ4 எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூ.15,004 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் இதை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், அப்படி செலுத்தாவிட்டால், அதற்கு 6 சதவிகிதம் வட்டியும் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.
ஜிஎஸ்டி வரி மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஜி.எஸ்.டியையே எடுத்து சாப்பிடும் அளவுக்கு, அதன் பெயரை சொல்லி சில இடங்களில் கொள்ளையடிக்கின்றனர்.
ஜி.எஸ்.டி பெயரை சொல்லி இன்னும் எத்தனை நிறுவனங்கள் செயல்படுகின்றனவோ. மக்களே உஷார் உஷார். 40 ரூபாய்க்கு வாங்கிய உணவுக்கே 4 ரூபாய் கட்டணம் எனில் மிக அதிகமாக வாங்குவோருக்கு என்ன கட்டணம். சபாஷ் நல்ல முயற்சி.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications