50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: போலி நிறுவனங்களை ஆரம்பித்து அதன்மூலம் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகளை ஏற்றுமதி செய்துள்ளதாக போலியாக பில்களை தயார் செய்து அதன் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஐஜிஎஸ்டி வரி மோசடி செய்ததாக மும்பையின் பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஜிஎஸ்டி வரிமோசடி மற்றும் ரீஃபண்ட் மோசடிகளை தடுக்க தேவையான வழிமுறைகளும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததை அடுத்தே மும்பையைச் சேர்ந்த இரண்டு பேர் ரீஃபண்ட் மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது

வாட் வரிவிதிப்பில் நிறைய வரி மோசடிகளும் பில் முறைகேடுகளும் நடப்பதால் தான் மத்திய மாநில அரசுகளுக்கு வரவேண்டிய வரி வருவாய் முறையாக வந்து சேராமல் வரி மோசடியாளர்களின் கைகளில் முடங்கிக் கிடக்கிறது என்று சொல்லித்தான் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வரி மோசடிக்கு 100 சதவிகிதம் சான்ஸே இல்லை என்றே அனைவரும் நம்பிக்கொண்டு இருந்தனர். அதற்கு ஏற்றார்போல், மத்திய அரசும் ஜிஎஸ்டி வரிமுறையில் போலியான பில்களை தயாரிக்கவே முடியாது என்றும் உறுதியளித்திருந்தது. இதனை அடுத்து வர்த்தக நிறுவனங்கள் தங்கள் மாதாந்திர ரிட்டன்களை முறையாகவே தாக்கல் செய்து வந்தனர்.

இந்நிலையில், வர்த்தக நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுக்கான முழு ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்டன்களை தணிக்கை செய்து பார்த்த ஜிஎஸ்டி தணிக்கைத் துறை நாடு முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் போலியாக பில்களை தயாரித்து சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் உள்ளீட்டு வரிப் பயனை ரீஃபண்ட் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும் மும்பையின் பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இருவர் போலியாக ஏற்றுமதி நிறுவனங்களை தொடங்கி அதன்மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரையிலும் ரீஃபண்ட் தொகையை திரும்பப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் கோபிநாத் மிஸ்ரா மற்றும் ரமேஷ் சந்திர பட் ஆகிய இருவரும் சேர்ந்து 50 போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கி அந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை கொள்முதல் செய்து, சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்தாக போலியான பில்களை உருவாக்கி அதன் மூலமாக சுமார் 50 கோடி ரூபாய் வரையிலும் ஐஜிஎஸ்டி (IGST) ரீஃபண்ட் தொகையை திரும்ப பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி விரிவாக விளக்கமளித்த ஜிஎஸ்டி துறை அதிகாரிகள், மேற்கண்ட இருவரும் 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலமாக கொள்முதல் செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். பின்னர் அதை வைத்து போலியாக ஏற்றுமதி பில்களை உருவாக்கி உள்ளீட்டு வரிப் பயனாக சுமார் 50 கோடி ரூபாயை ரீஃபண்ட் தொகையாக விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் அனைத்துமே சந்தேக வட்டத்திற்கு அப்பார்பட்ட நபர்களின் பான் மற்றும் ஆதார் எண்களின் உதவியுடன்தான். இதன் காரணமாகவே அவர்கள் இருவர் மீதும் எங்களின் சந்தேகப்பார்வை அழுத்தமாக விழுந்தது. மேலும் அவர்கள் ஐஜிஎஸ்டி ரீஃபண்ட் கேட்ட விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணும் பிஎஸ்டி பதிவு செய்தபோது குறிப்பிட்ட எண்ணும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன.

இதனையடுத்து அவர்கள் இருவரையுமே கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வசம் இருந்த 50 நிறுவனங்களுக்கான கொள்முதல் பில்கள், ஏற்றுமதி ஆவணங்கள், வெற்று காசோலை புத்தகம் மற்றும் கையெழுத்திட்ட காசோலைகள், ஏடிஎம் கார்டுகள் ஆகிய அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் போலியான 50 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளையும் அவர்கள் இருவர் மட்டுமே பராமரித்து வருகின்றனர் என்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST Return- Two Mumbai Traders arrested for IGST Refund fraud

Ajay Gopinath Mishra and Ramesh Chandra Bhatt availed IGST refund by showing export of textile goods over Rs 350 crore and collected IGST refund of over Rs 50 crore between January and May.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X