நா ஊறும்“ராகி களியும் கீரை கடைசலும்”வேணுமா.. பட்டையை கிளப்பும் கோவை உணவகம்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயமுத்தூர் : என்னதான் பல தலைமுறை கடந்து விட்டாலும், பல வகையான வெரைட்டியான உணவு வகைகள் வந்தாலும், நமது தாத்தாக்களும், அவர்களின் மூதாதையர்களும் பழங்கால உணவுப் பழக்க வழக்கங்களால் தான் 100 வயதிற்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் நாமே ருசிக்காக பழமையான உணவு பழக்க வழக்கங்களிருந்து, பீட்சா பர்கர், பாஸ்புட் என காலத்திற்கு தகுந்தாற்போல் உணவு பழக்கத்தையும் மாற்றிக் கொண்டுள்ளோம். இதனால் தானோ என்னவோ இன்று பலருக்கு விரைவில் சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.

இதனாலேயே மாதத்தில் பல நாட்கள் மருத்துவமனைக்காக செலவிட வேண்டிய அவசியம் உள்ளது. இதில் நேரம் வீணாவதோடு பணமும் வீணாகிறது. இதுமட்டுமா? இதை சாப்பிட கூடாது? அதை சாப்பிடக் கூடாது என கண்டிசன் வேறு. இந்த நிலையில் இயற்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இதையே சிறுதொழிலாக செய்து வரும் கோவையை சேர்ந்த குடும்பத்திற்கு ஒரு சல்யூட்.

“நல் உணவகம் Millet Restaurent”  ல் என்ன ஸ்பெஷல்?

“நல் உணவகம் Millet Restaurent” ல் என்ன ஸ்பெஷல்?

நம்ம முன்னோர்கள் உணவுக்கு என்றுமே தனி மகிமை உண்டு என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. இந்த நிலையில் இதை நிரூபிக்கும் விதமாக கோயம்புத்தூரைக் கலக்கும் நம்ம "நல் உணவகம் Millet Restaurent" கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ளது. இந்த உணவகத்தின் ஸ்பெஷலே சிறு தானிய உணவுகள் தான். ஆமாங்க.. சிறு தானிய உணவுகள் மூலம் மிக பிரபலமான சிறு உணவகம் தான் இந்த நல் உணவகம்.

என்னனென்ன சிறுதானிய உணவுகள்?

என்னனென்ன சிறுதானிய உணவுகள்?

இங்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இருவகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் சிறுதானிய உணவுகள் என, இதில் குறிப்பாக வரகு அரிசியில் சாம்பார் சாதம், சாமை அரிசியில் ரசம் சாதம், குதிரை வாலி அரிசியில் ஒவ்வொரு நாளும் ஒரு வெரைட்டி ரைஸ், குறிப்பாக முருங்கைக் கீரை சாதம் இதுபோன்ற வெரைட்டி சாதம் தினமும் ஒரு வகை வழங்கப்படுகிறது. கம்பு தயிர் சாதம், இவற்றோடு ராகி களி, இதற்கு புளிக்குழம்பு, இல்லையேல் கீரை கடைசல் எனவும், திணை பாயாசம், மோர் இதனோடு சுட்ட அப்பளம் என அசத்துகிறார்கள். இதன் விலை 120 ரூபாய் ஆகும். விலையை விட இந்த உணவுகளுக்கு மிக மதிப்பு அதிகம் என்கிறார்கள் இங்கு வரும் மக்கள். கோவையை கலக்கும் இந்த சிறு தானிய உணவுகளுக்கு என்றுமே ஒரு தனி மவுசு உண்டாம்.

கைகுத்தல் அரிசி மீல்ஸ்?
 

கைகுத்தல் அரிசி மீல்ஸ்?

இந்த வகையறாவில் கைகுத்தல் அரிசி சாதம், இதற்கு சாம்பார், ரசம், மோர் குழம்பு, புளிக் குழம்பு, பொறியல், கூட்டு இதற்கு மில்லட் பாயாசம், மோர், சுட்ட அப்பளம் என வகை வகையாக தரப்படுகிறது. இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு உணவே இல்லை என்றே கூறலாம். இந்த உணவு வகையிலும் கூட யாரும் நினைத்து பார்த்திராத வகையில், இதற்கு இஞ்சி புளி தொக்கு, இந்துப்பு, மோர் மிளகாய் என அசத்தும் இந்த உணவின் விலை வெறும் 105 ரூபாய் தான். இதிலும் கூட அனைத்தும் உடல் நலம் சார்ந்த குழம்பு வகைகள் என பாரம்பரியத்தோடு இருக்கிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இங்கு சாப்பிடும்போது, நமது தாத்தா வீட்டில் சாப்பிட்ட உணவு போல் இருக்கிறது என்கிறார்கள் நம்ம இளைஞர்கள்.

மாலை வேளையில் இன்னும் அதிர வைக்கும் வகைகள்?

மாலை வேளையில் இன்னும் அதிர வைக்கும் வகைகள்?

இது மட்டும் அல்லங்க, இன்னும் இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது. குறிப்பாக தினை தோசை, நெய் கத்தரிக்காய் தோசை, வரகு முருங்கைப்பூ தோசை, வரகு பிரண்டை தோசை, ராகி பூண்டு தோசை, சோளம் தூதுவாளை தோசை, கம்பூ வாழைப்பூ தோசை என தோசை வகையிலேயே அசத்தும் இந்த குடும்பம், இட்லியில் கூட பல வகைகள் தருகின்றனர். அதிலும் நாளுக்கு மக்களிடையே பரவி வரும் பரோட்டா மோகத்தை தணிக்க கோதுமை பரோட்டா, கோதுமை கொத்து பரோட்டா என பலவும், குதிரை வாலி கொள்ளூ அடை, மில்லட் கொழா புட்டு என இன்னும் பல வகையான வெரைட்டிகளும் கொடுத்து அசத்துகிறார்கள். இது எல்லாமே விலை நமக்கு ஏற்றாற்போல தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாமிர டம்ளர்கள்

தாமிர டம்ளர்கள்

இங்கு உணவு வகைகள் மட்டும் ஆரோக்கியத்தை கொடுப்பதல்ல, இங்கு தண்ணீர் குடிக்கும் டம்ளர், ஜக்கு உள்ளிட்டவை கூட தாமிரத்தால் ஆன ஜக்குகள் தான் உபயோகப்படுத்தப்படுகின்றன. அதுமட்டும் இல்லங்க.. இங்கு சமயலுக்கு பயன்படுத்தும் ஆயில் மரச்செக்கினால் ஆட்டித் தரப்படும் ஆயிலையும், சமையலுக்கு இந்து கல்லுப்பையும் பயன்படுத்துகின்றனர்.

ஜூஸ் வகையிலும் வித்தியாசம் தான்!

ஜூஸ் வகையிலும் வித்தியாசம் தான்!

இங்கு கொடுக்கப்படும் ஜூஸ் வகையில் கூட கொடுக்கப்படும் குளிர் ஜூஸ் வகைகளில் கேரட் ஜூஸ், இதுவே சூடாக வேண்டுமெனில் பணங்கற்கண்டு பால், சுக்கு பால், பாதாம்பால் என அசத்துகிறது இந்த நல் உணவகம். உண்மையிலேயே மிக நல்ல உணவகம் தான். அதிலும் பெரியோர் முதல் குழ்ந்தைகள் வரை அனைவருக்கும் பொருந்தும் வகையில், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகள் தான்.

காலத்திற்கு ஏற்றவாறு தொழில்

காலத்திற்கு ஏற்றவாறு தொழில்

என்னதான் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே சென்றாலும், நாளுக்கு நாள் இயற்கை என்பது நம்முள் அடியெடுத்து வைக்க தொடங்கி விட்டது எனவே கூறலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இதை வைத்தும் நம்மால் சிறு தொழிலை செய்து காட்ட முடியும், அதிலும் ஜெயித்துக் காட்ட முடியும் என்பதற்கு பதில் தான் இந்த கோவை நல் உணவகம். மிதமான லாபம், மக்களுக்கு நல்ல சேவை, மனமார்ந்த திருப்தி இதுவே எங்களின் வெற்றி என்கிறது இந்த வெற்றிக் குடும்பம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: small business food உணவு
English summary

Very healthiest food of all time

Very healthiest food of all time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X