டெல்லி : இந்தியாவின் முன்னனி தனியார் வங்கிகளில் ஒன்றான Yes Bank-ன் காலாண்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த வங்கி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதன் நிகரலாபம் 91 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 113.80 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிகரலாபம் 1,260 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே முக்கிய கட்டணத்தை உள்ளடக்கிய முக்கிய வருமானம், 4.88 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 1,272.66 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாத்தில் 1,694.14 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே நிகர வட்டி வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 2.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த மார்ச் காலாண்டில் 3.1 சதவிகிதமாகவும், இதே கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டில் 3.3 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செயல்படாத சொத்துகளின் மதிப்பு 5.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே மார்ச் காலாண்டில் 3.22 சதவிகிதமாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டில் 1.31 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வாராக்கடன்களின் மதிப்பு ஜூன் காலாண்டில் 2.91 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் மார்ச் காலாண்டில் 1.86 சதவிகிதமாகவும், இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 0.59 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிகர வட்டி வருமானம் 2.78 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடன்களின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி மற்றும் வைப்புத் தொகைக்கு வட்டி விகிதம் 2,219.14 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முன்னர் 2,280 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பங்கின் விலை 5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 98.45 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வாரக்கடன் களின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளின் மதிப்பும் குறைந்து வருவதோடு தொடர் வீழ்ச்சி கண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications