சென்னை : உழைப்பால் முன்னேறிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் நம்ம சரவணபவன் அண்ணாச்சி. தொழில் செய்வதற்கு பணமோ, படிப்போ தேவை இல்லை, உழைப்பு ஒன்று என்று இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு சிறந்த உதாரணமே அண்ணாச்சி தான்.
நம்ம படையப்பா படத்துல வர மாதிரி ஒரு பாட்டு முடியறதுக்குல்ல பணக்காரன் ஆகியவரல்ல நம்ம அண்ணாச்சி.
உழைப்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்தவர். தனது சரவணபவன் வெண்பொங்கலுக்கும், இட்லிக்கும் சட்னிக்கும் மக்களின் மனதை கவர்ந்த திருடன் நம்ம அண்ணன் ராஜகோபலன்.
சரவணபவன் வெண்பொங்கலுக்கும் மயங்காதவர் யாரும் உண்டா?
சரவணபவன் ஹோட்டலில் தரப்படும் அனைத்து உணவுகளுமே மிகுந்த ருசியுடனும் தரமானதாகவும் இருக்கும் என்றாலும், வெண்பொங்கலுக்கு மயங்காத ஆளே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட இவரின் முதல் உணவகம் சென்னையாக இருந்தாலும் இன்று நாடு முழுவதும் உணவகங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் 39 கடைகளும், இதில் குறிப்பாக 20 உணவகங்கள் சென்னையிலும், மீதம் மற்றும் மற்ற நகரங்களில் உள்ளது, வெளி நாடுகளில் 43 உணவகங்களும் உள்ளனவாம்.
எத்தனை நாடுகளில் இருக்கியது இந்த உணவகம்?
குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, ஓமன், கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, சிங்கப்பூர், பக்ரைன், ஐக்கிய எமிராட்ஸ்,லண்டன், அமெரிக்கா, குவைத், சவுதி அரேபியா, கென்யா சவுத் ஆப்பிரிக்கா, கட்டார், ஹாங்காங், தாய்லாந்து, நெதர்லாந்து, ஸ்வேடன் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சரவணபவன் உணவகம் உள்ளதாம்.
சரவணபவனில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?
கடந்த 2017ம் ஆண்டின் படி சுமார், இந்த உணவகத்தில் இந்தியாவில் மட்டும் 8700 பேர் வேலை செய்கின்றனராம். இந்த உணவகத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா? கடந்த 2017ம் ஆண்டின் படி, 29,782.4 மில்லியன் ரூபாயாகும். ஆமாங்க.. டாலரில் கிட்டதட்ட 430 மில்லியன் டாலராகும்.
உணவு மட்டும் இங்கு பிரசித்தி அல்ல?
இங்கு பரிமாறப்படும் உணவுகள் மட்டும் பிரசித்தி அல்ல. இங்கு தயாரிக்கப்பட்டு விற்கப்படும் இனிப்பு பண்டங்களும் அத்துனை சுவையானது தான். அதிலும் குழந்தைகளுக்கு பிடித்தாற்போல உணவுகள், இனிப்புகள், ஐஸ் கீரிம்கள் என அனைத்திலும் கொடி பறந்திருக்கிறார் நம்ம அண்ணாச்சி.
காலத்திற்கு ஏற்றாற்போல பரிமாற்றம்?
ஆமாங்க.. வெறும் சாம்பார் சாதத்தையும், தயிர் சாதத்தையும் மட்டும் வைத்து பொழப்பு நடத்த முடியாது என்று புரிந்துக் கொண்டிருந்த அண்ணாச்சி வெஜிடேரியன் ஆக இருந்தாலும், பாஸ்ட் புட்களிலும் கால் பதித்துள்ளார். அதுமட்டும் அல்ல உணவுகளை டெலிவரி செய்வது, இதுமட்டும் அல்லாது அவுட்டோர் டெலிவரி என அனைத்திலும் தன் கால் தடம் பதித்துள்ளார்.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!
அந்த காலத்திலேயே நம்ம மக்கள் தெளிவா சொல்லி இருக்காங்களே. பெண்னை தொட்டு, மண்னை சேர்ந்துள்ள சரவணபவன் அண்ணாச்சியின் இறப்பு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். தொழில் உலகில் தனது சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திய அண்ணாச்சிக்கு தனது சொந்த வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வு மறக்க முடியாத சம்பவமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications