மும்பை: தங்கம் விலை இன்று விண்ணைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டிருப்பதால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. டெல்லியில், ஸ்பாட் டெலிவரிக்கான 10 கிராம் தங்கத்தின் விலை 35,670 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
இந்தியாவில் எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் மாத காண்டிராக்டின் விலை 35,409 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. செப்டம்பர் மாத கண்டிராக்ட் சுமார் ஒரு சதவிகிதம் விலை அதிகரித்து 41,218 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறதாம்.

உலக சந்தைகளில் தங்கத்தின் விலை, மே 2013-க்குப் பிறகான, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறதாம். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,450 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த திடீர் தங்க விலை ஏற்றத்துக்கு அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி தன் வட்டி விகிதங்களை மேலும் குறைத்துக் கொள்ள இருக்கும் செய்தியும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
ஸ்பாட் டெலிவரி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு சுமார் 1,452 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறதாம். அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கான ஃப்யூச்சர் காண்டிராட்களுக்கான விலையும் சுமார் ஒரு சதவிகிதம் அதிகரித்து 1,444 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறதாம். இந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் ஒரு அவுன்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்களுக்கான விலை சுமார் 2 சதவிகிதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு சுமார் 0.5 சதவிகிதம் வரை இருக்கும் என்கிற காரணத்தால், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க கடன் பத்திரங்கள் மதிப்பும் வலுவிழந்து வருகிறதாம். இந்த முதலீடுகளுக்கு மாற்றாக வட்டி வருமானங்களைக் கொடுக்காத தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்களாம்.
அதோடு ஈரான் மீதான பொருளாதாரத் தடை காரணமாக, மத்திய கிழக்காசிய நாடுகள், தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வதாக எடுத்திருக்கும் முடிவு போன்ற காரணங்களால் உலக பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மையைக் காண முடிகிறது. இந்த நிலையற்ற உலக பொருளாதார தன்மையும் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இதெல்லாம் போக உலகிலேயே அதிக அளவில் தங்கம் வைத்திருக்கும் SPDR டிரஸ்ட் அமைப்பு, நேற்று (ஜூலை 18, 2019) மேலும் சுமார் 10 டன் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்களாம். இப்போது மொத்தம் 814.62 டன் தங்கத்தை இந்த டிரஸ்ட் அமைப்பு மட்டும் முதலீடு செய்து வைத்திருக்கிறார்களாம்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications